திலீபன் 28ஆவது நினைவுநாள் கருத்தரங்கம்

azhai_pannaattuneethi01  இருபத்தெட்டு ஆண்டு காலம் முன்பு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் இந்தியத் தலையீட்டால் நெருக்கடிக்கு உள்ளான போது சொட்டு நீரும் அருந்தாத பட்டினிப் போராட்டத்தில் உயிர் தந்து தடை நீக்கிய ஈகச்சுடர் திலீபன் நினைவு நாளில் ….

இன்று சிங்கள-அமெரிக்க-இந்தியக் கூட்டுச் சதியால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் தமிழீழ மக்களின் நீதிப் போராட்டத்தில் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன? என்ற வினாவிற்கு விடைதேடும் கருத்தரங்கினை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் நடத்துகின்றோம்.

திலீபன் நினைவை நெஞ்சில் சுமந்து…

தியாகராயநகர் வெங்கடநாராயணா சாலையில் அமைந்த தெய்வநாயகம் பள்ளியில்  புரட்டாசி  09 / செப்டம்பர் 26 சனி மாலை 3 முதல் தமிழகத் தலைவர்கள் உரை கேட்க வாருங்கள்.

தியாகு

வேண்டும் பன்னாட்டு நீதிப் பொறிமுறை

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்தும்

கருத்தரங்கம்

azhai_pannaattuneethi02