வையவன்

வையவன் 75

வையவனை வாழ்த்தலாம் வாருங்கள் !

 பாரதிபாலன் அழைப்பு

எழுத்தாளர் வையவன் அவர்களின் 75 ஆவது அகவை நிறைவு நாள் விழா வரும் மார்கழி 9 / 24திசம்பரில் [புதன் கிழமை ] மாலை 6 மணி அளவில் சென்னை அடையாறு காந்தி நகர் முதலாவது சாலையில் உள்ள காந்தி நகர் மன்றத்தில்(கிளப்பில்) நடைபெற உள்ளது.

முதன்மைவாணர்கள் பலரும் நண்பர்களும் பங்குகொள்ளும் அந்த நிகழ்ச்சியில் நூல்கள் வெளியீடு, அடையாறு தமிழ்ச் சங்கம் தொடக்கம், இதயத்துடிப்பு இதழ் வழங்கல், ஆரூத்ரா மாத ஏடு தொடக்கம் ஆகிய நிகழ்ச்சிகளும் இணைந்து சிறப்பிக்க இருக்கின்றன.

.

59 ஆண்டுகளாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வரும் வையவன் அவர்கள் வைரமணிக் கதைகள், மணல்வெளி மான்கள், சங்கனிலே ஒரு மேம்பாலம், யமுனா , உயிரோட்டம் போன்ற அற்புதமான படைப்புகளைத் தமிழ் உலகிற்கு அளித்து மௌனமாகப் பணியாற்றியவர்.

தனக்கே உரிய தனித் தன்மை பெற்ற அவரது எழுத்துகளில் எந்த இசத்தின் தாக்கமும், எந்த அயலக அல்லது பிற தமிழ் எழுத்தாளர் பாதிப்பும் இராது. மானுடமேன்மையும் அன்பின் ஈரமும் நிறைந்தது வையவன் எழுத்துகள். சிற்றூர் வாழ்வானானும் சரி நகரவாழ்வானாலும் சரி அதன் ஆழத்தைத் தொட்டுச் செல்லக் கூடியது வையவன் எழுத்துகள். கல்கி ஆனந்தவிகடன் இதழ்கள் இவருடைய படைப்புகளை விரும்பி வெளியிட்டன

59 ஆண்டுகளாக இடைவிடாது இயங்கிவருகிறார். அறிந்தேற்போ விருதுகளோ அவருக்கு ஒரு பொருட்டல்ல. என்றாலும் தரத்தோடும் அறத்தோடும் அதே சமயம் இலக்கியச் செழுமையிலும் விலகிப் போகாத எழுத்தாளர்

செயகாந்தன் சுந்தரஇராமசாமி போன்ற எழுத்தாளர் வரிசையில் வைத்து மதிக்கத்தக்க வையவன் கட்டுரை இலக்கிய ஆய்வு, நாடகம் என்று பன்முகப்பார்வை உள்ளவை,

இவரது கதையில் எடுக்கப்பட்ட நம்ம ஊரு நல்ல ஊரு குறும்படம் தமிழ் நாடு முழுவதும் சிற்றூர்களில் திரையிடப்பட்டது. இந்தி, மலையாளம் , தெலுங்கு ஆகிய மொழிகளை நன்கறிந்தவர். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வைக்கம் முகம்மது பசீரின் புதினத்தையும் பிற மலையாள எழுத்தாளர் படைப்பையும் மொழிபெயர்த்தவர்

அனைத்து மொழிகள் மீதும் ஆர்வமும் நேசமும் கொண்ட அவர் உள்ளம் சாதி மத வேறுபாடுகள்அற்றது

எந்தக் குழுவிலும் இயக்கத்திலும் சாராமல் தன்னளவில் சரி என்று பட்டதைமட்டும் செய்துவரும் வையவன் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிய அறிந்தேற்போ அடையாளமோகிடைக்கவில்லை என்ற வருத்தம் நமக்கு இருந்தாலும் அதைப் பற்றி யெல்லாம் கவலைப்படாமல தோடர்ந்து செயல்பட்டு வருகிறார் ,

இப்படி எந்த குழுவகப்படுத்தலும் (இலாபியும்) செய்யாமல் ஊடகவெளிச்சம் படத் தந்திரங்கள் மேற்கொள்ளாமல் அரசியல் பின்புலமோ அதிகாரச் செல்வாக்கோ இல்லாமல் காட்டுப்பூவாகப் பூத்துக்கிடக்கிறதோ,,,,,

விருதுகள் தேடுவர்களுக்குக்கிடைப்பதை விட தேடித்தருகிறபோதுதான் அந்த விருதுகளுக்கு மதிப்பு போகட்டும்,,,,,,விருதுகளை விட நம்முடைய அன்பும் அறிந்தேற்பும்தான் முதன்மையானது.

வையவன் அவர்களுக்கு என் வாழ்த்துங்கள் .

திரு,வையவன் அவர்களுடன் பேச 9940120341

அன்புடன் பாரதிபாலன்

பாரதிபாலன்

பாரதிபாலன்