தோழர் தியாகு எழுதுகிறார்  104: நலக்கேடு நல்காப் போக்கி

(தோழர் தியாகு எழுதுகிறார் 103 : இரவியா? மு.க. தாலினா?தொடர்ச்சி) நலக்கேடு நல்காப் போக்கி இனிய அன்பர்களே! பொங்கலுக்கு முன்வரும் போகிப் பண்டிகை. அழுக்கையும் குப்பைகளையும் போக்கும் போக்கி நாள் என விளக்குவர் பெரியோர். ஆனால் குப்பைகளைத் தெருவில் போட்டு எரித்தல் என்பதுதான் போகிப் பண்டிகையின் அடையாளம் என்றாகி விட்டது. குழந்தைகள் தப்படித்து ஓசை எழுப்புவது மற்றோர் அடையாளம் எனலாம். காலையில் நடக்கப் போனால் தெருவெல்லாம் குப்பை எரிந்து புகையும் துர்நாற்றமும் காற்றில் கலந்து மூச்சுத் திணறுகிறது. நகரமெங்கும் புகைமூட்டம். கிராமப் புறங்களில் இஃது…

தமிழர் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து,

01.01.2054  / 15.01.2023 தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து அகரமுதல படைப்பாளர்களுக்கும் படிப்பாளர்களுக்கும்  தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா, திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகளை அன்புடன் தெரிவிக்கிறோம்.    இந்து சமயம் உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்தே கொண்டாடப்படும் பொங்கல் நாளினை இந்து சமய விழா என்பது தவறு. திராவிடம் என்னும் சொல் உருவாவதற்கு முன்னரே கொண்டாடப்பட்டு வந்த பொங்கல் நாளினைத் திராவிடத்திருநாள் என்பதும் தவறு. தமிழ்மொழிஇனக் குடும்பத்தினர் பகுதிகளில் தமிழ்மொழிஇனக் குடும்ப விழா என்று கொண்டாடுவோம்! பொங்கல் விழா தமிழர் திருநாளே! உலகெங்கும் உள்ள…

தி.மு.க.தலைவர் தாலினுக்கு வாகை சூட வாழ்த்துகள்!  – இலக்குவனார் திருவள்ளுவன்  

தி.மு.க.தலைவர் தாலினுக்கு வாகை சூட வாழ்த்துகள்!    திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள (12.08.2049/28.08.2018) தாலினுக்கும் பொருளாளராகப் பொறுப்பேற்றுள்ள துரை முருகனுக்கும் வாழ்த்துகள். துரை முருகன் நகைச்சுவையாகப் பேசுபவர். எனவே, யாரையும் கசக்கிப் பிழியாமல் தன் பேச்சு மூலமே பொருளைத் திரட்டுவார் என எதிர்பார்க்கலாம். இதேபோல் நிகழ்ச்சிகள் நடத்தும்பொழுது பொதுமக்களிடம் பணம் பறிப்பதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறோம்.   பன்முகத் திறமை கொண்ட கலைஞர் மு.கருணாநிதிக்குப் பின்னர் மு.க.தாலின், திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். கட்சியைப் பிளவிலிருந்து காப்பாற்றல், தேர்தல்களில் வெற்றிகளை ஈட்டச் செய்தல், அதற்காகக் கூட்டணிகளைச்…

வாழிய பெரும! வண்டமிழ் போன்றே! – இளங்குமரனார்க்கு வாழ்த்து : மறைமலை இலக்குவனார்

வாழிய பெரும! வண்டமிழ் போன்றே!   அகவை தொண்ணூறு நிறைந்த ஆசான் இளங்குமரனார்க்கு அகங்கனிந்த வாழ்த்து வாழிய பெரும! வண்டமிழ் போன்றே! புலவர்மணி,முதுமுனைவர் இளங்குமரனார்க்கு வாழ்த்து (பிறந்த நாள் தை 17, 1958 /  சனவரி 30, 1927) பளிங்கெனத் துளங்கிடும் பண்புசால் உள்ளம்; உளங்கவர் முறுவல் விளங்கிடும் திருமுகம்; தமிழ்நலன் காத்தல் தம்கடன் என்றே தளரா துழைத்திடும் தறுகண் உறைவிடம்; மறைமலை யார்போல் நிறைவுறு புலமை; பாவாணர் நெறியில் ஓய்விலா ஆய்வு; இலக்குவர் வழியில் இயங்கிடும் தமிழ்மறம்; இனம்,மொழி பேணிட இன்றமிழ் மக்களை…

பொங்கட்டும் பொங்கல்! – இலக்குவனார் திருவள்ளுவன்

பொங்கட்டும்  பொங்கல்!    உழவர்  திருநாள் உழைப்போர் திருநாள் உரிமைத் திருநாள் உவகைத் திருநாள்   வந்தது இன்று நொந்தது உள்ளம்   உழைப்பை மறந்தோம் உரிமை இழந்தோம் உவகை தொலைத்தோம் உண்மை உணர்ந்திலோம்!   மொழியைத் தொலைக்கிறோம் இனத்தை அழிக்கிறோம் துன்பத்தை மறைக்கிறோம் இன்பத்தில் உழல்கிறோம்!   தீரட்டும் துன்பம்! மலரட்டும் ஈழம்! பெருகட்டும் இன்பம்! வெல்லட்டும் தமிழியம்!   பொங்கட்டும்  பொங்கல்! தங்கட்டும் மகிழ்ச்சி!   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  

நடைமுறைப்புத்தாண்டில் நல்லன நடக்கட்டும்! நானிலம் சிறக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

நடைமுறைப்புத்தாண்டில் நல்லன நடக்கட்டும்! நானிலம் சிறக்கட்டும்!     2017 ஆம் ஆண்டுப் பிறப்பிற்கு அனைத்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்துகள்!   தமிழ்நாட்டில் புதிய அரசு மலர்ந்துள்ளது!   ஆளுங்கட்சியிலும் புதிய தலைமை மலர்ந்துள்ளது!   எதிர்க்கட்சியிலும் புதிய தலைமை மலர உள்ளதாகக் கூறப்படுகிறது!   இவற்றால் தமிழ்நாட்டில் புதிய மலர்ச்சி ஏற்படட்டும்!       பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்         அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து   (திருவள்ளுவர், திருக்குறள் 738) என்பதற்கேற்பப் பசிப்பிணியும் பிற நோயும்…

தாயினுஞ் சிறந்தது தமிழே! – ஞா.தேவநேயப் பாவாணர்

தாயினுஞ் சிறந்தது தமிழே! எமுனாகல்யாணி – ஆதி தாயினுஞ் சிறந்தது தமிழே தரணியி லுயர்ந்தது தமிழே வாயுடன் பிறந்தது தமிழே வாழ்வெல்லாந் தொடர்வது தமிழே. பாலூட்டி வளர்த்ததும் தமிழே தாலாட்டி வளர்த்ததும் தமிழே பாராட்டி வளர்த்ததும் தமிழே சீராட்டி வளர்த்ததும் தமிழே தேம்படு மழலையுந் தமிழே திருந்திய வுரைகளும் தமிழே தேம்பி யழுததுந் தமிழே தேவையைக் கேட்டதும் தமிழே முந்தி நினைந்தலும் தமிழே முந்தி மொழிந்ததும் தமிழே குந்தி யெழுந்ததும் தமிழே குலவி மகிழ்ந்ததுந் தமிழே பயன்படு கல்வியும் தமிழே பணிபெறப் படுவதும் தமிழே…

பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!   மக்கள் அறிந்தும் அறியாமலும் தவறு செய்பவர்களாக உள்ளனர். அறிந்தே தவறு செய்பவர்கள் அதனால் பெரும்பழி வந்தாலும் திருந்த மாட்டார்கள். ஆனால்,  பேரிழப்பிற்கும் பெருந்துன்பங்களுக்கும் ஆளாகும் பொழுது  தவற்றை உணருவார்கள். கண்கெட்ட சூரிய வணக்கம் மேற்கொண்டு என்ன பயன்? ஆனால், அறியாமல் தவறு செய்பவர்கள் அதனைப் பிறர் சுட்டிக்காட்டும் பொழுது் திருத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு திருத்திக் கொள்ளாவிட்டால் அவர்களும் அறிந்தே தவறு செய்பவர்களே!   அதிமுக தலைவியின் செயலொன்று ஊடகங்களாலும் மக்களாலும் அங்கதமாகவும் கேலியாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறப்பட்டாலும்…

பலவாகி நின்ற ஒருவனை வாழ்த்துவோம்! – மாணிக்கவாசகர்

பன்னருஞ்சிறப்பிற்குப் பொன்னடி பணிக அறமுதல் அரியெனும் அவனே பரனே அணுவினுள் அவனே செகமுணர் பரனே மனனே கரிசொல வருபுயல் பரனே அமுதரு ளினனே யவனே பரனே நிலனே வானே நிறைமுதல் பரனே வலனே தரிதிகி ரியனே பரனே இன்னணம் அமைதரல் இறையரங் கேசனைப் பொன்னடி பணிபவர் புகுபதி பன்னருஞ் சிறப்பில் பரந்தா மமதே பலவாகி நின்ற ஒருவனை வாழ்த்துவோம் நிலம், நீர், நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலா பகலோன் புலன்ஆய மைந்தனோடு என்னவகையாய்ப் புணர்ந்து நின்றான் உலகுஏழ் என திசைபத்து என தான்…

பிரபாகரன் பிறந்த நாள் பெருமங்கலம்

    பிரபாகரன், ஈழத்தலைவர் மட்டுமல்லர்! தமிழ் ஞாலத்தலைவருமாவார்! பிரபாகரன் பிறந்ததால் தமிழர் தம் வீரம் உணர்ந்தனர் தமிழ்மானம் தெளிந்தனர்! அடிமை விலங்கொடிக்கும் துணிவைப் பெற்றனர்! இந்தியக் கூண்டிற்குள் அடைபட்டிருந்த தமிழினத்தை உலகு அறியவில்லை! பிரபாகரன் செயல்களால் தமிழினம் அறிந்தனர்! தரணியெங்கும் போற்றினர்! வாராது வந்த மாமணியாய் இருபதாம் நூற்றாண்டில் பிரபாகரன் வந்தார்! தமிழர் தாயகம் இருபத்தோராம் நூற்றாண்டில் விடுதலை பெறும் என்னும் செய்தி தந்தார்! வாழ்க பிரபாகரன்! வெல்க தமிழீழம்! உயரட்டும் தாய்த்தமிழகம்! பிரபாகரன் வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்னும் பெருமையை எமக்கீந்த…

கண்ணியக் காவலர் குலோத்துங்கன் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழகம் மறக்கக்கூடாதவர்களுள் ஒருவர்!  தமிழக மக்கள், அரசியல் துறையில், இலக்கிய உலகில், கலைப்பணியில், என வெவ்வேறு வகைப்பாடுகளில் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய தகைமையாளர்கள் பலர் உள்ளனர். அத்தகையோருள் குறிப்பிடத்தக்க ஆன்றோர் கண்ணியம் ஆ.கோ.குலோத்துங்கன் ஐயா அவர்கள்.  “அன்று குலோத்துங்கனுக்காகக் கலிங்கத்துப்பரணி பாடினார் செயங்கொண்டார். இன்று செயங்கொண்டத்தில் குலோத்துங்கன் தமிழ்ப்பரணி பாடுகிறார். எழுத்துத் துறையில் நாளை ஒரு வேந்தனாகத் திகழ்வார்” என்று பேரறிஞர் அண்ணா இவரின் எழுத்துப்பணியைப் பாராட்டி உள்ளதே இவரின் சிறப்பினை அடையாளப்படுத்தும்.   தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கியவர் தொழிலாளர்களின் உற்ற தோழனாக,…