9- ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, கோலாலம்பூர்
9- ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
தை 2046 -/ 29 சனவரி – 1 பிப்ரவரி 2015
மலாயாப் பல்கலைக்கழகம்
கோலாலம்பூர்
9-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு திருவள்ளுவர் ஆண்டு 2046, தைத்திங்கள் (சனவரி 29 முதல் பிப்ரவரி 1, 2015 வரையிலும்) கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இம்மாநாடு ஆசிய நாடுகளிலும் அமெரிக்க – ஐரோப்பிய கண்டங்களிலும், ஏனையபகுதிகளிலும் தமிழ் மொழி சார்ந்த ஆராய்ச்சியாளர்களையும் கல்விமான்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, சமயம், மானிடவியல், வரலாறு, உளவியல், சமூகவியல் எனப் பன்முகத் துறைகளில் ஈடுபட்டுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் இம்மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் படைக்க வரவேற்கப்படுகின்றனர்.
Leave a Reply