மூவாப்புகழ் மூவர் சிறப்பிதழ்
அகரமுதல 44 ஆம் இதழ் மூவாப்புகழுக்குரிய ஆன்றோர் மூவர் சிறப்பிதழாக வருகிறது. எனவே, வழக்கமான செய்திகளுடன் இம் மூவர் குறித்த படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.(இவ்விதழில் விடுபட்ட தொடர்கள் அடுத்த இதழில் வெளிவரும்.)
செட்டம்பர்த் திங்களின் இவ்வாரத்தில் இதனைக் குறிப்பதால் யார் அந்த மூவர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆம்! பாட்டுக்கொரு புலவனாய் நமக்கு எழுச்சி யூட்டும் மாக்கவி பாரதியார் (பிறப்பு: ஆவணி 28, 1913 / திசம்பர் 11, 1882 – மறைவு: கார்த்திகை 26,1954 / செட்டம்பர் 11, 1921; செட்டம்பர் 12 இல் மறைந்தார் என்பாரும் உளர்.); சமயத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் புகுத்தப்பட்ட மூட நம்பிக்கைகளைஒழிக்கப் பாடுபட்ட தந்தை பெரியார்(பிறப்பு: புரட்டாசி 3, 2010 / செட்டம்பர் 17, 1879-மறைவு: மார்கழி 9, 2004 / திசம்பர் 24, 1973); பேச்சாலும் எழுத்தாலும் மக்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்ற பேரறிஞர் அண்ணா (பிறப்பு :ஆவணி 31, 1940 / செட்டம்பர் 15, 1909- மறைவு: தை 21,2000 / பிப்பிரவரி 3, 1969) ஆகிய மூவரே அவர்கள். தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் தம் குறள்நெறி இதழில் இம்மூவரையும் சிறப்பித்து(இவ்விதழில் விடுபட்ட தொடர்கள் அடுத்த இதழில் வெளிவரும்.) புரட்சியாளர் சிறப்பிதழ் என வெளியிட்டுள்ளார்(தி.பி.1995/கி.பி.1964). அவ்விதழில் வெளிவந்துள்ள கட்டுரைகளும் கவிதைகளுமே இங்கே இணையப் பதிவாக அளிக்கப்பட்டுள்ளன. உடனடிப்பார்வைக்காக அவற்றின் தலைப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் தலைவர்களாக இருந்தாலும் சாதிப் பெயர்களால்தான் அறியப்படுகின்றனர்.தமிழ்நாட்டிலும் நாயக்கர் என்றும் முதலியார் என்றும் நாடார் என்றும் முதலில் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அந்த நிலையை மாற்றியவர் பகுத்தறிவுச் சுடரொளி, தன்மான அரிமா சிவகங்கை இராமச்சந்திரனார் ஆவார். அவர் நினைவு நாள் செட்டம்பர் 16 (பிறப்பு: புரட்டாசி 2, 1915 / செட்டம்பர் 16, 1884- மறைவு: மாசி 15,1964/ பிப்பிரவரி 26, 1933). அவரைக்குறித்த கட்டுரை ஒன்றும் இவ்விதழில் இடம் பெறுகிறது.
மறைமலை அடிகள் (ஆடி 2,1907/ சூலை 15, 1876 – ஆவணி 30, 1981/செப்டம்பர் 15,1950) நினைவு நாளும் தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்களின் நினைவு நாளும் இக்கிழமையில் வருகின்றன. இவர்கள் குறித்துத் தனியே சிறப்பிதழ் வெளிவரும் என்பதால் இவ்விதழில் சேர்க்கவில்லை.
புரட்சியாளர்கள்-பேராசிரியர் சி.இலக்குவனார்
பார்புகழ் அறிஞர் பல்லாண்டு வாழ்க – பேராசிரியர் சி.இலக்குவனார்
வரலாற்று வானத்தில் – ஔவை து.நடராசன்
புரட்சிப் பாதையில் புதுமை இலக்கியம் – அண்ணாவின் பங்கு : தமிழண்ணல்
தேசிய ஒருமைப்பாடும் தமிழும் – சிலம்புச் செல்வர் ம.பொ.சி.
இந்நாட்டு மும்மணிகள் – பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்
வழிகாட்டும் ஒளி வேந்தன் – புலவர் இரா.வடிவேலன்
அண்ணாப்பத்து – காரை இறையடியான்
அறிஞர் அண்ணா அவர்கள் மீது பாடிய வெள்ளணி நாள் விழா வாழ்த்து
பார்புகழ் அறிஞர் பல்லாண்டு வாழ்க – பேராசிரியர் சி.இலக்குவனார்
தலைத்தலைமை – அரும்பு
அண்ணாவன்றோ? – அறந்தைத் திருமாறன்
செயற்கரிய செய்த பெரியார் – புலவர் வி.பொ.பழனிவேலன்
பாரதியார் நாமம் வாழ்க – பாரதிதாசன்
சிவகங்கை இராமச்சந்திரனாரின் சீர்மிகு பணிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
அறிஞர்களின் அன்றைய தமிழ் நடையும் கருத்தாழமும் இன்றைய பேராசிரியர்களிடம் காணவில்லை. இவற்றைப் படிக்கும் நமக்கு இவை போல எழுதும் எண்ணமும் உணர்வும் உண்டாகும். ஆதலின் தவறாமல் படியுங்கள்.
ஆன்றோர் புகழ் போற்றி அருந்தமிழ் வளர்ப்போம்!
இதழுரை
ஆவணி 22, 2045 / செட்டம்பர் 07, 2014
Leave a Reply