தமிழ் வெற்றிக்காகப் பாடுபட்டவர் இலக்குவனார்

    பேராசிரியர் எங்குப் பணியில் சேர்ந்தாலும், அங்குச் சிறப்புத் தமிழில்தேவைக்கேற்ப இளங்கலை, முதுகலை முதலான வகுப்புகளை அறிமுகப்படுத்துவார். இதுபோல் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலையில் தமிழ் இல்லாமல் இருந்தது. அங்குத் தமிழ் வகுப்பு கொணர்ந்தது குறித்தும் தமிழுணர்வு ஊட்டியது குறித்தும் அங்குப் பணியாற்றிய முனைவர் மெ.சுந்தரம் அவர்கள் பின்வருமாறு தெரிவிக்கிறார் (வீ.முத்துச்சாமி: இலக்குவனாரின் ஆய்வுப் பண்பு): “மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபொழுது பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் முதன்முதலில் இளங்கலை வகுப்பில் (B.A.) தமிழ்ச்சிறப்பு வகுப்பைக் கொணர்ந்தார். இவருக்குமுன் மாநிலக் கல்லூரியில் இவ்வகுப்பு…

மூவாப்புகழ் மூவர் சிறப்பிதழ்

    அகரமுதல 44 ஆம் இதழ் மூவாப்புகழுக்குரிய ஆன்றோர் மூவர் சிறப்பிதழாக வருகிறது. எனவே, வழக்கமான செய்திகளுடன் இம் மூவர் குறித்த படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.(இவ்விதழில் விடுபட்ட தொடர்கள் அடுத்த இதழில் வெளிவரும்.)   செட்டம்பர்த் திங்களின் இவ்வாரத்தில் இதனைக் குறிப்பதால் யார் அந்த மூவர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆம்! பாட்டுக்கொரு புலவனாய் நமக்கு எழுச்சி யூட்டும் மாக்கவி பாரதியார் (பிறப்பு: ஆவணி 28, 1913 / திசம்பர் 11, 1882 – மறைவு: கார்த்திகை 26,1954 / செட்டம்பர் 11,…

இந்தி எதிர்ப்புச்சிறப்பிதழ் 01

  இந்தித்திணிப்பு எதிர்ப்பு அல்லது இந்தி முதன்மை எதிர்ப்பு என்பனபோல் கூறாமல் ‘இந்தி எதிர்ப்பு’ என்றே கூற விரும்புகிறோம். ஏனெனில், இதுவரை நாம் அவ்வாறு அழைத்தும் கல்விமொழி, இரண்டாம் மொழி, மூன்றாம் மொழி, ஆட்சிமொழி முதலான போர்வைகளில் இந்தி நம்மை இறுக்கிக் கொண்டே உள்ளது. இருப்பினும் அதை உணராமலும்  அதில் இன்பங் கண்டும் நாம் தமிழுக்கு அழிவு தேடிக் கொண்டிருக்கிறோம். 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம், 1967 இல் ஆட்சியை மாற்றியது. அப்பொழுது ஓட ஓட விரட்டப்பட்ட பேராயக் கட்சி இன்னும்…