நினைவுகூர் நாள் 2016
நினைவுகூர் நாள் 2016
ஊடகப்பணியாளர்கள் அடக்குமுறைக்குள்ளும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இனத்திற்காகவும் மொழிக்காகவும் தம் ஊடகப் பணிக்காகவும் இன உணர்வோடும் ஒப்படைப்புஉணர்வோடும் செயற்பட்டு உண்மையை வெளிப்படுத்தினர்; இதனால் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழ் ஊடகப்பணியாளர்களை நினைவுகொள்ளும் வகையில் தற்போதும் பல அழுத்தங்களுக்கு மத்தியிலும் மக்களுக்குச் சரியான தகவல்கள் சென்றடைய வேண்டும் என்ற வேணவாவுடன், துணிவோடும் ஒப்படைப்புஉணர்வோடும், தாயகத்திலிருந்து ஊடகப்பணியாற்றிவரும் ஆறு ஊடகப்பணியாளர்களுக்கு அவர்களை மாண்பேற்றும் வகையில் விருதுகள் வழங்கும் நிகழ்வு பிரித்தானியாவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பன்னாட்டுத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் பர்னட்டு ஓக்கு பகுதியில்(St.Alphage Church Hall, 33 Millfield Road, Burnt Oak, HA8 0DF எனும் முகவரியில்) பன்னாட்டு மனித உரிமைகள் நாளான கார்த்திகை 25, 2047 / 10-12-2016, சனிக்கிழமை நண்பகல் 1:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், அனைத்து ஊடகத்துறைசார் பணியாளர்கள், குமுகச்சார்பாளர்கள், தமிழ்குமுகக் கட்டமைப்புச்சார்பாளர்கள், பொதுமக்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
பன்னாட்டுத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
078 1011 6032 / 07585 978377
07424 883468 / 07723 333205
குகன்தம்பி(ப்பிள்ளை)
இதழாளர், செயற்குழு உறுப்பினர்
பன்னாட்டுத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
Leave a Reply