thirukkural_padam03

Madras_University_Logo_chennaipalkalaikazhakam_muthiraiutslogo_ulakathamizhsanagam_muthirai

சென்னையில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு

 

 

 தமிழின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்கும் உலகப் பொது மறையாம் திருக்குறள் குறித்த பன்னாட்டு மாநாட்டினை உலகத் தமிழ்ச் சங்கமும், சென்னைப் பல்கலைக்கழகமும் இணைந்து அடுத்த மாதம் நடத்தவுள்ளன. இரண்டு நாள் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகளாவிய அறிஞர்கள், குறள் நெறி ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், பல்துறை அறிஞர்களிடம் இருந்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

 திருவள்ளுவரும் கன்பூசியசும், திருக்குறளும் பௌத்தமும், திருக்குறளில் மேலாண்மை, திருக்குறளில் பெண்ணின் பெருமை, திருக்குறளில் கல்வி, திருக்குறளில் ஆட்சிமுறை, திருக்குறளில் அரசியல், திருக்குறளில் அறிவியல், திருக்குறளில் ஆளுமைத்திறன், திருக்குறளில் மருத்துவம், திருக்குறளில் வேளாண்மை, திருக்குறளில் உளவியல், திருக்குறளில் தத்துவம், திருக்குறளில் ஒற்றுமை, திருக்குறளில் மக்கள், திருக்குறளில் சுற்றுச்சூழல், திருக்குறளில் அறம், திருக்குறளில் புதுமையும் புரட்சியும், திருக்குறளில் சித்தர் நெறி, திருக்குறளில் நட்பு, திருக்குறளில் சுற்றம், திருக்குறளில் ஒழுக்கம், திருக்குறளில் ஈகை, திருக்குறளில் வாய்மை, திருக்குறளில் நகைச்சுவை, திருக்குறளில் காலம், திருக்குறளில் பன்முகம், இவை போன்ற பிற பொருண்மைகள் குறித்த 8 பக்க அளவில் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

கட்டுரைகளை வரும் 30 ஆம் நாளுக்குள் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தனி அலுவலர்,

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை,

மனை எண்: 30, காவியன் தொகுமனை,

குறைவருவாய்ப்பிரிவு( L.I.G.) குடியிருப்பு, அண்ணாநகர்,

மதுரை-625 020

அல்லது

 11 அளவிலான   எழுத்துருவில் (Font Size)    சீருரு(யுனிகோடு) முறையில் தட்டச்சு செய்து

UTSMDU@GMAIL.COM

  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்

வல்லுநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே மாநாட்டில் இடம்பெறும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.