(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1081-1106 இன் தொடர்ச்சி)

1107. படிகவியல் 

Crystallography / Crystallology / Crystallogy / Leptology(1)– படிக அமைப்பாய்வியல், படிக அமைப்பியல், படிக இயல், படிகவியல், படிகவுருவியல், பளிங்கியல், பளிங்குவரைபியல், படிக விளக்க ஆராய்ச்சித்துறை எனப் பலவாறாகக் கூறப் படுகின்றன. நாம் சுருக்கமாக உள்ள

படிகவியல் – Crystallography / Crystallology /Crystallogy/ Leptology(1)

என்பதையே பயன்படுத்துவோம்.

Crystallography, Crystallology / Leptology(1) )/ Promorphology

1108. படிமலர்ச்சி அறவியல்

Evolutionary ethics

1109. படிமலர்ச்சி ஒட்பவியல்

Evolutionary epistemology

1110 படிமையியல்

பண்பாட்டுப் படிமையியல் என்பதன் சுருக்கமாகப் படிமையியல் எனப்படுகிறது.

Imagology

1111. படியாக்கவியல்

clone என்றால் இணையான ஒன்றை ஆக்குதல். எனவே, இணையான படியை உருவாக்குவதால் படியாக்கம் என்கின்றனர்.

Clonology

1112. படைப் புவியியல்

Military geology

1113. படைப் பொறியியல்

Military Engineering

1114. பட்டறிவியல்

heuristic என்னும் சொல் உணர்ந்து அறிவதைக் குறிக்கிறது. அஃதாவது துன்பப் பட்டு, இன்னல்பட்டு, அல்லல் பட்டு  உணர்ந்து அறியும் பட்டறிவைக் குறிக்கிறது.

Heuristics

1115. பணிநெறி யியல்

இதுவே மனிதக் காரணிகள் இயல்(Human-factors engineering) என்றும் கூறப்படுகிறது.

பணிச்சூழியல், பணிச்சூழலியல், பணிச்சூழ் இயல், பணித் திறனியல், வினை செயலியல், வேலைச் சூழலியல், வேலைச் சூழியல் எனப் பலவாறாகக் குறிக்கின்றனர். ஓர் அகராதியில் பணி(ச் சூழலியல்) என்பது பண(ச் சூழலியல்)எனத் தவறாகத் தட்டச்சிடப்பட்டு அச் சொல், பிறரால் மேற்கொள்ளப் பட்டுள்ளது. அஃது எழுத்துப் பிழை என்பதறிக.

பணிச்சூழியல் என்பது பணி புரிபவர்களுக்கு ஏற்றவாறு வேலை, துணைக்கருவி, பணியிடம் போன்றவற்றை வடிவமைக்கும் அறிவியல் ஆகும்.

Ergo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் வேலை.

-nomics என்பது முறைமை, ஒழுங்கு, நெறி முதலியவற்றைக் குறிக்கும் பின்னொட்டுச்சொல்.

எனவே, மேற்குறித்த யாவும் சரிதான். என்றாலும் தரப்படுத்தினால்தான் குழப்பம் வராமல் இருக்கும்.  எனவே பணிநெறி தொடர்பான இயலைப் பணிநெறியியல் – Ergonomics எனலாம்.

Ergonomics

1116. பண்டுவ இயல்

Thereology

1117. பண்டுவ நீரியல்

Crenology

1118. பண்டுவக் காலவியல்

Chronooncology(2)

1119. பண்டைய

Palae- என்பதைத்  தொல், பழைய, பண்டைய என மூவகையாகப் பயன்படுத்து கின்றனர். Ancient, Old என்பனவற்றையும் தொல், பழைய, பண்டைய என்றெல்லாம் மாறி மாறிப் பயன்படுத்துகின்றனர்.

Ancient – தொல், Old – பழைய, Palae –  பண்டைய என வரையறுத்துக் கொள்ளலாம். எனவே,

பண்டைய – Palae எனலாம்.

Palae

 

1120. பண்டைய படிமவியல்

 

Paleontology / Palaeontology  தொல்லுயிரியல், பழவூற்றியல், தொல் உயிரியல், தொல்லுயி ராய்வியல், புதைபடிவ ஆய்வியல், புதைபடிவ ஆய்வு நூல், கற்சுவட்டியல், புதைப் படிமவியல், பழமை யிருப்பியல், தொல்லுயிர் ஆய்வியல், தொல் இனவியல், புதைப்படிவு. ஆய்வியல் எனப் பலவாறாகச் சொல்லப் படுகின்றன. Palaeபண்டைய என்னும் சொல்லேற்பு அடிப்படையில்

பண்டைய படிமவியல் – Paleontology / Palaeontology எனலாம்.

Pale என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்  பண்டைய; on என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உயிரி எனப் பொருள்.

பண்டைய உயிரியல் – Palaebiology

பண்டைய உயிரிகளைப் புதை படிவம் அல்லது படிமம் மூலமே பெரும்பாலும் ஆராய்வதால் பண்டைய படிமவியல் Paleontology / palaeontology என்பதுடன் இதை இணைத்துள்ளோம்.

Palaenotology / Paleontology / Palaebiology

(தொடரும்) 

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000