(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1221-1230) தொடர்ச்சி)

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!

திருவள்ளுவர்

திருக்குறள்

காமத்துப்பால்

124. உறுப்புநலன் அழிதல்

  1. பிரிந்தவரை எண்ணிக் கண்கள் மலருக்கு நாணின. (1231)
  2. பசலையும் அழும் கண்களும் காதலரின் அன்பின்மையைக் கூறும். (1232)
  3. கூடியபொழுது பருத்த தோள்கள் வாடிப் பிரிவை உணர்த்தின. (1233)
  4. துணைவரின் பிரிவால் தோள்கள் மெலிந்து வளையல்கள் கழன்றன. (1234)
  5. தலைவனின் கொடுமையை வாடிய அழகிய தோள் உரைக்கும்.(1235)
  6. காதலரைக் கொடியவர் என்பது பசலையினும் கொடியதே.(1236)
  7. அவரிடம் தோள்மெலிவைக் கூறிப் பெருமைப்படுவாயோ நெஞ்சே. (1237)
  8. தழுவலைத் தளர்த்தியதும் படர்ந்தது பசலை நெற்றியில் (1238)
  9. தழுவலிடையே காற்று புகுந்தாலும் பசலை கொள்கிறாளே இவள்.(1239)
  10. நெற்றியின் வாட்டத்தால் கண்களும் பசலை யடைந்தன.(1240)

– இலக்குவனார் திருவள்ளுவன்

(தாெடரும்)