(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 126-130 – தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம்  131-135

131. Abolition of titles  பட்டங்களை ஒழித்தல் விருதுகளை ஒழித்தல்‌   இந்திய அரசியல் யாப்பு 18 ஆம் இயல் பட்டங்கள் ஒழிப்பு (Abolition of titles)பற்றிக் கூறுகிறது.
132. Abolition of untouchabilityதீண்டாமை ஒழிப்பு   தீண்டாமை என்பது மனிதருள் இனம், பிறப்பு, குலம் காரணமாக உயர்வு தாழ்வு கற்பித்து வேற்றுமை பாராட்டும் குமுகாயக் குற்றம்.    அரசியல் யாப்பு கூறு 17இல் தீண்டாமை ஒழிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தீண்டாமையை எந்த வடிவத்திலும் நடைமுறைப்படுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய  குற்றமாகும்.
133. Abolition of zamindari system  நிலக்கிழார் முறை ஒழிப்பு   சமீன்தாரி முறை ஒழிப்பு என்பர். சமீன்தாரி தமிழ்ச்சொல்லல்ல.   இந்தியத்துணைக் கண்டத்தில் முகலாயப் பேரரசின் ஆட்சிக் காலத்தில், நிலக்கிழார் எனக் குறிப்பிடும் முறை வந்தது. இந்தியாவின் தலைமை ஆளுநராக 1786-1793 ஆம் ஆண்டுகளில் இருந்த காரன்வாலிசு( Lord Cornwallis) நிலக்கிழார் முறையை அறிமுகப்படுத்தினார்.   இந்திய விடுதலைக்குப் பின்னர் நிலக்கிழார் முறை சடடத்தின்படி ஒழிக்கப்பட்டது.
134. Aboriginalதொல் பழங்குடி   தொன்முதுவர் தொன்முதிய   Latin ab origine என்னும் இலத்தீன் தொடரின் பொருள் தொடக்கத்திலிருந்து. தொடக்கக்காலத்திலிருந்து உள்ள குடிமக்களை/மொழியைக் குறிக்கிறது.   தொல்பழங்காலத்தில் அறியப்பட்டதைக் குறிப்பதால், தொல்முதுமொழியையும் குறிக்கும். எ.கா. தமிழ் ஒரு தொல்முதுமொழி
135. Aborignesபழங்குடியினர்   நடைமுறையில் ஆத்திரேலியப் பழங்குடியினரைக் குறிக்கின்றது. எனினும் எல்லாத் தொல்குடியையும் குறிக்கும் பொதுச்சொல்லாகவே கருத வேண்டும்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்