(சட்டச் சொற்கள் விளக்கம் 236-240 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 241-245

241. Absorbஈர்த்துக்கொள்  

உட்கொள்
உறிஞ்சு
ஏற்றுக்கொள்

  திரவம், வெப்பம் போன்றவற்றைத் தன்னுள் ஈர்த்துக்கொள்ளுதல்
242. Absorbed in the postபணி ஈர்ப்பு  
பணியிடத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
243. Absorberஈர்த்துக் கொள்பவர்    
பொதுவாக உறிஞ்சியைக் குறிக்கிறது. எனினும் ஒருவரை ஈர்த்துக் கொள்பவரையும் குறிக்கிறது.
244. absorptionஈர்த்துக்கொளல்  

ஒன்றை ஈர்த்துக் கொள்ளல்  

பொதுவாக வழக்கில் நீர் அல்லது நீர்ம ஈர்ப்பைக் குறிக்கிறது. எனினும் ஒருவரை அமைப்பிலோ பணியிலோ ஈர்த்துக் கொள்வதையும் குறிக்கிறது.
245. absque hocஇஃதின்றி,

இதுவல்லாமல்  

ஒரு மனு அல்லது வாதுரையின் எதிர்மறைப்பகுதியை முன் வைத்தல்   இலத்தீன் தொடர்.
Absque= இன்றி, இல்லாமல் ; hoc = இது

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்