(சட்டச் சொற்கள் விளக்கம் 256-260 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 261-265

261. abstractedபிரித்தெடுக்கப்பட்ட  

கவனக்குறைவான,
வேறு எண்ணமுடைய  

வேறு சிந்தனையில் உள்ளதால் சுற்றி நிகழ்வது குறித்துக் கருத்து செலுத்தாமை
262. Abstractionபிரித்தெடுத்தல்    

கருத்துப்பொருள்;

கவர்ந்துகொள்ளல்;

கவனமின்மை  

தவறான கையாளுகைக்காக நிதியை அல்லது நிதிக்கணக்குகளை உரிய இசைவின்றி எடுத்தல்

ஊறு விளைவிக்க அல்லது வஞ்சிக்கும் நோக்கில் எடுத்தல்
263. absurdபொருளற்ற  
விழலான ;

காரண காரியத் தொடர்பற்ற ;

நகைப்புக்கிடமான அறிவு குறைந்த;

நியாயமற்ற   நகைப்புக்கிடமான பொருளற்ற செய்தியையோ செயலையோ குறிப்பது.
264. Absurd argumentபொருளற்ற வாதம்  

முட்டாள்தனமான கேலிக்குரிய வாதம்.  

வழக்கிற்குத் தொடர்பில்லாத அல்லது ஏற்பில்லாதவற்றைக் கூறி வாதிட்டுக் கொண்டிருப்பது.

நீதிமன்றங்களில்கூடச் சில நேரங்களில் சரியான வாதத்தைவிட முட்டாள்தனமான வாதம் பயனளிக்கும்.
Absurdityபேதைமை  

பேதைமைத்தனம் என்பது பகுத்தறிவற்ற, பொருளற்ற, திடமற்ற, நியாயமற்ற ஒரு நிலை அல்லது தன்மையாகும்.  

சிலர் ‘அபத்தம்’ என்கின்றனர். அபத்தம் தமிழ்ச்சொல்லல்ல. இதன் பொருள்கள் வழு, பொய்மை என்பனவாகும்.  ஆனால், நடைமுறையில் கேலிக்குரிய / எள்ளி நகையாடக்கூடிய என்னும் பொருள்களில் கையாளுகிறோம்.  

எ.கா.: இவ்வழக்குப் பொருள் பேதைமையாக உள்ளது. எனவே வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்