(சட்டச் சொற்கள் விளக்கம் 286-290 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

291. Academic yearகல்வி ஆண்டு

கல்வி ஆண்டு என்பது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கும் காலத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை  உள்ள காலத்தைக் குறிப்பதாகும்.    
பள்ளிகளில் கல்வி ஆண்டை முதல் பருவம்(காலாண்டுப் பருவம்), இரண்டாம் பருவம்(அரையாண்டுப் பருவம்), மூன்றாம் பருவம்(முழு ஆண்டுப்பருவம்) என மூன்று பருவங்களாகப் பிரித்து மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கிறார்கள். கல்லூரிகளில் இரு பகுப்புகளாக முதல்  பருவ முறை இரண்டாம் பருவ முறை எனப் பிரிக்கிறார்கள்.
292. Academic, distinctionதனிச் சிறப்புப் பட்டம்

சிறப்புத் தகுதியுடன் பட்டம் பெறுதல்.  

உயர்தர ஒட்டுமொத்த தரப்புள்ளி பெற்றுத்தனிச் சிறப்புடன் டட்டம் பெறுதல்.
293. Academicianகல்வியாளர்  
கலைக்கழக உறுப்பினர்  
  கலை,இலக்கியம், பொறியியல், அறிவியல் கழகத்தின் முழு நேர உறுப்பினர்.
294. Academyகலைக் கழகம்  
கல்விக்கழகம்  
கல்விக் குழுமம்    
காண்க: Academic{ பிளேட்டோ கற்பித்த இடம் அதன் உரிமையாளரான அக்காடமசு என்ற கிரேக்க வீரனுடைய பெயரில் Akadēmía என அழைக்கப்பெற்றது. இக் கிரேக்கச் சொல்லில் இருந்து academic, academy சொற்கள் உருவாயின. இச்சொல் கற்பிக்கும் இடத்தை, பிளேட்டோவின் கோட்பாட்டினரையும் குறிக்கிறது}
295. Academy of tamil cultureதமிழ்ப் பண்பாட்டுக் கழகம்  

தமிழ்ப்பண்பாட்டை வளர்ப்பதற்கும் பேணுவதற்கும் தமிழர் வாழும் சிங்கப்பூர் முதலிய பல நாடுகளிலும் கழகம் அமைத்துத் தமிழ் வளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

(தொடரும்)