சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:141-145
(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:136-140 – தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் : 141-145
141. Abortive trial | கைவிடப்பட்ட உசாவல் விசாரணை முடிவு எட்டப்படாத உசாவல் / விசாரணை சில காரணங்களுக்காக விசாரணை முழுமையுறாத, தீர்ப்பளிப்பதற்கு முன் முடிக்கப்படுகிற உசாவல்/விசாரணை |
142. Abound | மிகுந்திரு நிரம்பியிரு பொங்கு மல்கு மிகுதியான எண்ணிக்கையில் அல்லது பேரளவிலான அளவில் உள்ளனவற்றைக் குறிப்பது. |
143. About | பற்றி குறித்து இங்குங்குமாய், சுற்றி, ஏறத்தாழ, கிட்டத்தட்ட. கப்பலின் போக்கினை எதிர்ப்புறமாகத் திருப்புதல் எ.கா. இவ்வழக்கு மகளிர் நலம் பற்றியது. இம்முறையீடு சிறார் நலம் குறித்தது. கிட்டத்தட்ட/ஏறத்தாழ நூறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. |
144. About that date | அந்த நாளைப் பற்றி முதலில் குற்றம் நிகழ்ந்ததாகவோ வேறு எதன்காரணமாகவோ சொல்லப்படும் நாள் குறித்துப் பின்னர்த் தெரிவிக்கையில் அந்தநாள் குறித்த கருத்தை அல்லது வாதுரையைத் தெரிவித்தல். |
145. About to make, a complaint, he is | அவர் முறையிட இருக்கிறார் ஒரு தவறு அல்லது முறைகேடு அல்லது குற்றம் நேர்ந்த பொழுது அது குறித்து வழக்கு மன்றத்தில் அல்லது உரிய தக்க அதிகார மன்றத்தில் முறையிடப் போகிறார். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply