(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1041 – 1047 : தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் :

1048-1060

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. சைக்கிள் சாப் – மிதிவண்டி நிலையம்
  2. பிரஸ் – அச்சகம்
  3. சலூன் – முடி திருத்தும் நிலையம்
  4. சவுளிக்கடை – துணிக்கடை
  5. மளிகைக்கடை – பலசரக்குக் கடை
  6. செனரல் ச்டோர்சு – பல பொருள் நிலையம்
  7. போட்டோ ச்டுடியோ – நிழற்பட நிலையம்
  8. ரெசுடாரண்ட் காபி கிளப் டீ ச்டால் – சிற்றுண்டிச் சாலை
  9. ஓட்டல் – உணவு விடுதி
  10. (இ)லாண்டரி – வண்ணப் பணிமனை
  11. டைலரிங் மார்ட் – தையற்கடை
  12. ஐசு கூலிங் – சுவைநீர் நிலையம்
  13. மருந்து சாப் – மருத்துக் கடை

இங்ஙனம்
மறைமலையடிகள் மன்றத்தார்
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) புலவர் உசேன் செயலாளர் பாபநாசம்
மறைலையடிகள் மன்ற இரண்டாம் ஆண்டு விழா அழைப்பிதழ்

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்