(சட்டச் சொற்கள் விளக்கம் 471-480 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

481.  accusationகுற்றச்சாற்று
குற்றச்சாட்டு  

குற்றம் சுமத்தல்  

சட்ட நடவடிக்கைக்குரிய தீங்கையோ குற்றத்தையோ ஒருவர் செய்திருக்கிறார் அல்லது சட்டப்படி செய்யவேண்டியதைச் செய்யாதிருக்கிறார் என அவர்மீது சாட்டுவதே குற்றச்சாட்டுரை அல்லது குற்றச்சாட்டுரை ஆகும்.

பொதுவாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரைக் குற்றவாளி என்றே எழுதியும் பேசியும் வருகின்றனர். குற்றஞ்சாட்டப்படுநரையும் குற்றம் மெய்ப்பிக்கப்பெற்றுத் தண்டனைபெற்ற தண்டனையரையும் இணையாகக் கருதக்கூடாது.
482. Accused appears to be in sound mindஉசாவலின்(விசாரணையின்) பொழுது  குற்றஞ்சாட்டப்பட்டவர் நல்ல மனநிலையில் இருப்பதாகத் தோன்றும் பொழுது………..  

Accused  -ஐ எதிரி எனக் குறிக்கக்கூடாது. வழக்கில் எத்தகைய நிலையினர் எனக் குறிப்பிடத் தேவை யிருப்பின் எதிரர் எனலாம்.
483. Accused in any offense  எந்தக் குற்றத்திலேனும் குற்றம் சாட்டப்பட்டவர்  

குறிப்பிட்ட குற்றம் அல்லது வழக்கு என்றில்லாமல் பொதுவாகக் குறிக்கப் பெறுபவர்.    
484. Accused of any offenceஏதாவது ஒரு குற்றத்திற்குக் குற்றம் சாட்டப்பட்டவர்  

ஏதேனும் ஒரு குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட அல்லது முறையாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்
485. Accused/ Accused person                சாட்டாளர்  

குற்றஞ்சாற்றப்பட்டவர், குற்றஞ்சாட்டப்பட்டவர்          

குற்றம்சாட்டப்பட்ட ஆள்  (குற்றவழக்கில்) எதிரர்;
குற்றம்‌ சுமத்தப்பட்டவர்‌  

சாட்டாளர்(accused) என்னும் சொல் குற்ற வழக்கு நடைமுறைத்தொகுப்பு 1973இல் எங்கும் வரையறுக்கப்படவில்லை. எனினும் பொதுவாகச் சட்டமீறல் செய்பவராகக் கருதப்படுகிறது. என்றாலும் இருப்புப்பாதைச் சொத்து(சட்டமீறல் உடைமை) சட்டம் 1966, பிரிவு 8 குற்றஞ்சாட்டப்படும் ஆள்  குறித்துக் கூறுகிறது.   காண்க:     accusation- குற்றச்சாற்று
486. Accuserசாட்டுநர்

குற்றஞ்சுமத்துநர்  
குற்றஞ்சாற்றுபவர்
குற்றஞ்சாற்றுநர்    

குற்றம் புரிந்தார் என மற்றொருவர்மீது சாட்டுரை செய்யும் ஒருவர்.  

ஒருவர் அறமுறைக்கு மாறான, சட்டத்திற்கு எதிரான, இரக்கமற்றதான செயலைச் செய்ததாக அல்லது குற்றச்செயல் புரிந்ததாகக் குற்றஞ்சாற்றுபவர்.
487. Accustomபழக்கு
பயிற்று  
ஒன்றை/ ஒரு சூழல் அல்லது நிலைப்பாட்டுக்குப் பழக்கமாக்கிக் கொள்வது அல்லது வழக்கமாக்கிக் கொள்வது.
488. Acetoneபடிகநீர்மம்
 
நுண்ணுயிரி நீர்மம்
படிகநீர்மம் (அசிட்டோன் /Acetone) ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.

489. Achieveசெய்துமுடி
முயன்றுஅடை.
 
கடின உழைப்பாலும் திறமையாலும் ஒரு செயலைச் செய்துமுடிக்கும் அருவினையைக் குறிக்கிறது.

490. Achievementசெய்துமுடித்தல்
 
இலக்கு அடைவு
 
ஒன்றை முயன்று அடைந்து வெற்றி காணல்.
அருவினை(சாதனை) ஆற்றி முடித்தல்.

(தொடரும்)