சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:146-150
(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:141-145 – தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் : 146-150
146. Above | மேலே மேம்பட்டு, அப்பாற்பட்டு.தலைக்குமேல், விண்ணில், முன்னிடத்தில், உயரமாக எழுத்து வடிவில் தெரிவிக்கையில் முன்னர்க் கூறியதைச் சுட்டிக்காட்ட மேலே சொன்ன, மேலே தெரிவித்த, மேலே கூறிய என்பன போன்று வரும். வாதுரையிலோ தீர்ப்புரையிலோ முதலில் கூறியதை எடுத்துக் கூறும் பொழுது மேலே சுட்டிய/குறிப்பிட்ட எனப் பயன்படுத்துவர். |
147. Above all | எல்லாவற்றிற்கும் மேலாக யாவற்றையும் விட மேலாக, யாவற்றினும் மேம்பட்ட, பலவற்றில் ஒன்றைக் குறிப்பிடுகையிலோ ஒப்பிட்டு முறையில் தெரிவிக்கையிலோ எல்லாவற்றிலும் மேலாக இருக்கும் நிலை இருப்பின் அதனை இவ்வாறு குறிப்பிடுவர். |
148. Above average | சராசரிக்கு மேலான இயல்புக்கு மேலான வழக்கமான தொகை அல்லது எண்ணிக்கை அல்லது விளைச்சல் அல்லது வருமானம் அல்லது தரம் அல்லது நிலைப்பாடு அல்லது ஒன்றின் நிலை இயல்புக்கு மேல் இருப்பின் அல்லது சராசரிக்கு மேல் இருப்பின் இவ்வாறு குறிப்பிடுவர். |
149. Above board | களங்கமற்ற ஐயத்திற்கிடமில்லாத ஒளிவு மறைவற்ற திட்டம் அல்லது வணிக ஒப்பந்தம் ஐயத்திற்கிடமின்றி இருக்க வேண்டுமென்றால், நேர்மையானதாகவும் யாரையும் ஏமாற்ற முயலாததாகவும் ஒளிவு மறைவின்றியும் இருக்க வேண்டும். |
150. above cited | மேற்சுட்டிய மேற்காட்டிய முன்னர்க் குறிக்கப்பட்டுள்ள தீர்ப்பு அல்லது தீர்ப்பின் பகுதி அல்லது பத்தி அல்லது வரியைச் சுட்டிக் காட்டுக் கூறுவது. பார்வையாகக் குறிக்கப் பெறும் புத்தகம், ஆணை, ஆவணம் விதியையும் சுட்டிக்காட்டுவதற்காகக் கூறுவது. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply