சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 403-407
(தமிழ்ச்சொல்லாக்கம்: 396 – 402 தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 403 – 407
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
403. உப்ரிகை — மேல்வீடு
404. விமானம் — ஏழடுக்கு வீடு
405. இரமியம் — மகிழ்வைக் கொடுப்பது
406. சாரம் — பொருள், உள்ளீடு
நூல் : மேகதூதக் காரிகை (1919)
நூலாசிரியர் : காளிதாச மகாகவி மொழிபெயர்த்தி யற்றியவர் : சுன்னாகவும் அ. குமாரசுவாமிப் பிள்ளை
★
407. Cholera – வாந்திபேதி
கலராவின் காரணப் பெயர்கள் :
விசபேதி, பெரு வாரி, கொள்ளை நோய், கசப்பு
வாந்திபேதி யென்பது அதனால் பீடிக்கப்படுகிற மனிதர் எடுக்கிற வாந்தி அவர்களுக்கு ஆகிற பேதி ஆகிய இவ்விரு காரியங்களையும் ஒருமிக்க உணர்த்த வரும் ஒருவகை வியாதிக்கு வழங்கும் பெயராகும். வாந்தி பேதி ஆங்கிலத்தில் கலரா என்று கூறப்படும். வாந்தி பேதி அதன் விசத்தன்மையால் விசபேதி யெனவும், பிணங்குவிக்கும் பெற்றியால் பெருவாரியெனவும், கொல்லுங் கொள்கையால் கொள்ளை நோயெனவும், மனிதர் கூறவும் வெறுப்படைவதால் கசப்பெனவும் இவ்வாறு வெவ்வேறு பெயர்களால் விளம்பப்படுகிறது.
இதழ் : நல்லாசிரியன் 1919 சூன். வயது 15, மாதம் 1.
கட்டுரையாளர் : சி. வே. சண்முக முதலியார் உபத்தியாயர், செசனல் பள்ளி, காரியதரிசி, உபாத்தியாயர் சங்கம், திருவள்ளூர்
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply