(தமிழ்ச்சொல்லாக்கம்: 384-395  தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 396 – 402 

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

396. வித்தியாரம்பம் செய்தல் – பள்ளிக்கூடத்தில் வைத்தல்

கிராமத்தில் தம் குழந்தைகளுக்கு வித்தியாரம்பம் செய்ய விரும்புவோர் பெரும்பாலும் விசயதசமியன்று அவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவது வழக்கம். வித்தியாரம்பம் செய்தல் என்பதற்குப் பள்ளிக்கூடத்தில் வைத்தல் என்று சொல்வது வழக்கம்.

இதழ்   :           நல்லாசிரியன். செப்டம்பர், 1919 வயது – 15, மாதம் – 4, பக், 98

ஆசிரியர்          :           கா. நமச்சிவாய முதலியார் (1919)

397. EVOLUTION THEORY – இயற்கைத் திரிபு

உலகின்கணுள்ள தோற்ற பேதங்களெல்லாம் ஒன்றின் ஒன்றாகக் காலந்தோறும் பரிணமித் தமையுமென வாதிப்பார் பரிணாம வாதிகள். இந்தப் பரிணாமவாதமே இக்காலத்திலே மேலைத் தேசங்களிலே (Evolution Theory) இயற்கைத் திரிபு என்னும் பெயர் கொண்டு பெரிது பாராட்டப்படுவது.

நூல்      :           பிரபஞ்ச விசாரம் (1919) 4- பரிணாம வாதம், பக்கம் – 31

நூலாசிரியர்      :           யாழ்ப்பாணம் – குகதாசர் – ச. சபாரத்தின முதலியார்

398. விபூதி      —        வெண்பொடி

399. அகததுவசம்        —        மாடக் கொடிகள்

400. திவசம்    —        நாள்

401. குரோசம் —        கூப்பிடுதூரம்

402. சங்கிலி    —        தொடர்

நூல்      :           திருக்கருவைத் தலபுராணம் (1919)

ஆசிரியர்          :           எட்டிசேரி ச. திருமலைவேற் பிள்ளை

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்