(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1048-1060 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. இண்டர்வியூ – நேர்காணல்
    வினா – விடை என்ற இண்டர்வியூ முறையை ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தினர். அதனை நேர்காணல் என்னும் தனித் தமிழ்ச் சொல்லால் முதன் முதல் குறிப்பிட்டவர் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்தான்
    பாபநாசம் குறள்பித்தன்
    நூல் : முதன் முதலாக உலகில் நடந்த நிகழ்ச்சிகள், திசம்பர் 1992
  2. கவிராத்திரி – பாடல் இரவு
    தமிழமுத மன்றத்தின் சார்பில், கவிஞரும் மருத்துவருமாகிய ச. அறிவுடை நம்பி அவர்களது மருத்துவ மனையில் 7.11.1992 அன்று மாதாந்திரப் பாடல் இரவு (கவிராத்திரி) சிறப்பாக நடைபெற்றது.
    இதழ் : முத்தமிழ் முரசு, 21.12.92
    ஆசிரியர் : மு. சுப. கருப்பையா, தஞ்சை
  3. Treadle – மிதித்தியக்கும் அச்சுப் பொறி
    1933இல் கல்விக் கழகத்துக்கு மிதித்தியக்கும் அச்சுப் பொறி (Treadle) ஒன்று வாங்கி ஒர் அச்சகம் நிறுவப் பெற்றது.
    இதழ் : செந்தமிழ்ச் செல்வி, மார்ச்சு 1973, சிலம்பு : 47; பரல் – 7 பக்கம் : 366
    கட்டுரையாளர் : வ. சுப்பையா பிள்ளை
  4. Complimentary Copy- அன்பிதழ்
    இதழ் : விடுதலை, நாள் :10, 7. 2001
  5. செராக்(கு)சு – ஒளியச்சு
    மு. இளங்கோவன்
    தமிழ் ஆராய்ச்சியாளர்
    பாரதிதாசன் பல்கலைக் கழகம்
    திருச்சிராப்பள்ளி – 620 024
    (6. 12, 95 – அவர் எழுதிய கடிதத்திலிருந்து)

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்