சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1079- 1097
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1071- 1078 தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1079- 1097
(கவிஞர் சுரதா கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
- அருத்த சாத்திரம் – பொருள்நூல்
தன்னநுபவத்திற்கு இரண்டு பங்கும், ஆசுத்திக்கு ஒரு பங்கும், அறத்திற்கு ஒரு பங்குமாகப் பங்கிட்டு வைக்க வேண்டுமென்று பொருணூலே சொல்லுதலால், அறத்துக்கு நாலிலொரு பங்கு சொல்லப்பட்டது.
நூல் : திரிகடுகவுரை, இரெளத்திரி, ஆண்டு ஆறாம் பதிப்பு,
பாடல் – 21, பக்கம் – 13
உரையாசிரியர் : திருக்கோட்டியூர் இராமநுசாசாரியர்★ - கிருடடிபட்சம் – தேய்பிறை
- சுக்கில பட்சம் – வளர்பிறை
- பினாமி – பேர் இரவல்
க. பாலசுப்பிரமணியன், பி. ஏ., பி. எல்,
சீர்காழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்).
★ - Punctuation – குறியீடு
இப் புத்தகத்தை ஊன்றிப் படிக்கும் மாணவர்கள் தம் வாழ்நாளைப் பயனுறச் செய்து கொள்ளல் வேண்டுமென்னும் நோக்கமே இதனைத் தொகுத்ததற்குக் காரணமாம். மாணவர்கள் செய்யுள்களையும் வசனங்களையும் எளிதாகப் படித்துக் கொள்ளுமாறு பதப்பிரிவுகளும் அவ்விடத்திற்கேற்ற (Punctuation) குறியீடுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
நூல் : செந்தமிழ் நூன்மாலை, பாயிரம், பக்கம் – 4
தொகுப்பாசிரியர்கள் : கோ. வடிவேலு செட்டியார், ஆ. நா. கன்னையா - இலண்டன் டைம்சு (The London Times)பிரிட்டீசு பத்திரிக்கை
- பீகிங் கெசெட்டு (Peking Gazette) சீனப்பத்திரிக்கை
- இரங்கூன் கெசெட்டு (The Rangoon Gazette) பருமா பத்திரிக்கை
- இரங்கூன் மெயில் (The Rangoon Mail) பருமா பத்திரிக்கை
- சிலோன் கெசெட்டு சிலோன் பத்திரிக்கை
- கொளும்பு சர்னல் (The Colombo Journal)
- கண்டி எரால்டு (The Kandy Herald)
- சிலோன் மார்னிங் லீடர் (The Ceylon Morning Leader)
- சிலோன் டெய்லி நியூசுஸ் (The Ceylon Daily News)
- .. டைம்சு ஆப் சிலோன் (The Times of Ceylon)
- சிலோன் அப்செர்வர்
- சிலோன் இண்டிபெண்டெண்டு (The Ceylons Independent)
- இந்தியா கெகெஜட் (The India Gazette)
- பெங்கால் ஃகார்க்காரன் (The Bengal Harkara)
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply