(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1071- 1078

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. அறுவை – துணி
  2. சவளி – ஆடை
    அறுக்கப்படுவதனால் அறுவை என்றும், துணிக்கப்படுவதனால் துணி என்றும், சவண்டிருப்பதனால் சவளி என்றும் ஆடை பல பொதுப் பெயர் பெறும். சவளுதல் – துவளுதல். மென் காற்றிலும் ஆடுவது (அசைவது) ஆடை, சவளி என்னும் தமிழ்ச் சொல் த்ஜவளி என்று தெலுங்கிலும் ஜவளி என்று கன்னடத்திலும் எடுப்பொலியுடன் ஒலிக்கப்படுவதாலும், நாம் அவ்வாறே தமிழிலும் ஒலிப்பதாலும், வடசொல்லென்று தவறாகக் கருதப்படுகின்றது.
    வடமொழியில் இச்சொல் இல்லை. எனவே ஜவுளிக்கடை, ஜவுளி வாணிகம் என்பன சவளிக்கடை, சவளி வாணிகம் என எழுதப்படுதலே பிழையற்றதாம்.
    இதழ் : தேனமுதம் (மார்ச்சு 1972), அடை- 2, துளி – 13, பக்கம் – 51
  3. தேசாபிமானம்
    தந்தையே சுவர்க்கம், தந்தையே
    தருமம், தந்தையே சிறந்த தவம்;
    தந்தை மனமகிழ்ந்தால் தேவர்கள் மனமகிழ்கிறார்கள்.

குழந்தையைத் தானே சுமந்து
பெற்று வளர்ப்பதால், தாயானவள் தந்தையினும் மேல்.
பிறந்த நாடும்
சுவர்க்கத்தினு மேலானவை

  • மகா நிருவாண தந்திரம்

  • ‘இந்த நாடு என் சொந்தநாடே, என் தனையே
    தந்த நாடே என்றுமகிழ் நெஞ்சில் என்றும் எண்ணிலா –
    ஒருவன் தனையும் கண்டதுண்டோ கண்ணிலே?’
    சுகாட்டு
    இதழ் தமிழர் நேசன், தொகுதி : 11 பகுதி 2, பக்கம் :167
  1. 1074. இந்தியத் தமிழர்கள்
    திருக்குறள். இது ஆதிவேதத்திற்கு வழி நூலாகும்; இவற்றுள் செந்நாப்புலவர் யதார்த்த சீவிய சரிதம், அவரது கடவுள் வாழ்த்து மூலம், முதல் அறத்துப்பால் மூலம் இவைகளுக்கு க. அயோத்திதாச பண்டிதர், பதம், கருத்து, பொழிப்பு, அகலவுரைகளுமுண்டு. இந்தியத் தமிழர்களுக் கின்றியமையாதவனாகிய சிறந்த நூலாகும்.
    நூல் : நிகழ்காலத்திரங்கல் (1925)
    ⁠சித்தார்த்த புத்தக சாலையார்,
    கோலார் – தங்க வயல்(கோல்ட் பீல்ட்)

  1. பூவராகம் – நிலப்பன்றி
    திருத்தில்லையில் வேளாளர் குலத்தில் வைணவ சமயத்தில் ஆ. பூவராகம் பிள்ளை 1899 ஆம் ஆண்டு நவம்பர்த்திங்கள் இருபத்தேழாம் நாள் பிறந்தார். தந்தையார் பெயர் ஆதிமூலம் பிள்ளை.
    1076. சித்ரம் – அழகு
    1077. கரி – கைம்மா (யானை)
    1078. காந்தன் – கணவன்

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்