இசை வடிவில் தமிழ்த்தாய் அந்தாதி

தமிழ் மீது தாழா நேசம் கொண்ட உங்களுக்கு வணக்கம்

மொழி ஓர் இனத்தின் ஆன்ம அடையாளம். தமிழினத்தின் இருப்புக்கு மொழி சார்ந்த, வீச்சுரம் கொண்ட செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுவது அவசியமாகும். அப்படியான இலக்கை நோக்கிய ஒரு வேலைத்திட்டம் இது.

தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறும் விதமாகச் செறிவான சொற்களில், அணி அழகு துலங்கும்படி பாவலர் தவ சசிதரன் புனைந்திருக்கும் போற்றிப்பாடல் தமிழ்த்தாய் அந்தாதி ஆகும் (YouTube காணொளி)  (YouTube  காணொளி  காண்க). கேட்கும்தோறும் மனத்தை ஈர்க்கும் மந்திரத்தன்மை கொண்ட ஒரு படைப்பு.

பேராசிரியர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் முதலானோர் இதனைப் பெரிதும் விதந்து பாராட்டியிருக்கிறார்கள். (தொடர்புடைய பதிவுகள்: https://tinyurl.com/y63445yy)

முத்தமிழில் முதலாவதான இயற்றமிழில் அமைந்த அந்தாதி இப்போது இசையாகவும் நாடகமாகவும் முகிழ இருக்கிறது. இலண்டன் மொழியகம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.

முதலாவது காணொளி உயர் தரத்துடன் வெளிவந்து பெருவரவேற்பைப் பெற்றுள்ளது – பார்வையாளர்கள் இந்தப் படைப்பின் சிறப்பை எவ்விதம் போற்றிப் பேசியிருக்கிறார்கள் என்பதை ( YouTube comments) YouTube comments வழியாகக் காணலாம்.

இதே தரத்தில் மீதம் இருக்கும் அந்தாதிப் பாடல்களுக்கான காணொளிகளும் வெளிவருவதற்கு உங்கள் மேலான உதவி / கொடை தேவைப்படுகிறது.

இந்த இணைப்பின் வழியாக நீங்கள் நிதி நல்கலாம்.

இது தொடர்பான மேலதிகத் தகவல்களை அறிய  sajitharan@moliyagam.org  என்ற மின்னஞ்சல் வழியாகவோ +447428631805 என்ற பகிரி (WhatsApp) எண் வழியாகவோ நீங்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.

என்றும் இதயத்தன்பும் நன்றியும்

மொழியகம்

இலண்டன்

அந்தாதிக்கு உதவ