ahzai_ulakathamizhamaippu_vellivizhaa_wto-silver-jubilee01

  வணக்கம்!

உலகத் தமிழ் அமைப்பு 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்று வணிக நோக்கமற்ற நிறுவனமாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு, அமெரிக்க நாட்டின் சட்ட திட்டங்களுக்கு முழுவதுமாக உட்பட்டு, சிறப்பாக இயங்கிக்,  கடந்த 25ஆண்டுகளாக நற்பணியாற்றி வருகின்றது.   தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பேணிப் பாதுகாத்து மேலும் செழிப்புடன் வளர்வதற்காகவும்;  உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களின் நலன்களுக்காகவும்; இவற்றுடன் மிகவும் முதன்மையான குறிக்கோளான தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து, தன்னாட்சி உரிமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும், உலகத் தமிழ் அமைப்பு கடந்த 25ஆண்டுகளாக அயராது உழைத்து வருகின்றது.

  உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. உலகின் பல நாடுகளிலும் இருந்து அறிஞர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

   புரட்டாசி 21, 22 & 23, 2047 / 7, 8, 9 அக்டோபர்  2016

வெள்ளி மாலைசனி முழுநாள்ஞயிறு காலை

இடம்: மெர்செர் நடுநிலைப்பள்ளி, விருசினியா

[MERCER MIDDLE SCHOOL AUDITORIUM,
  42149 GREEN STONE DRIVE,  ALDIE, VIRGINIA  20105, USA
  (Near WASHINGTON, DC’S  DULLES  INTERNATIONAL AIRPORT)]

சிறப்பு விருந்தினர்:
மாண்புமிகு பேராசிரியர் ப. இராமசாமி, துணை முதலமைச்சர், பினாங்கு மாநிலம், மலேசியா

சிறப்புப் பேச்சாளர்கள்:
மாண்புமிகு திரு. உருத்திரகுமாரன், நாடு கடந்த தமிழீழ அரசு
திரு. பெ. மணியரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

திரு. சாமுவேல்  இராசப்பா,  முதுநிலை ஆசிரியர் (ஓ), (ஃச்டேட்மேன் / Senior Editor (Rtd.), The Statesman, Calcutta

திரு. செ. முத்துசாமி, மேனாள் மேலவை உறுப்பினர்

தமிழ்மண் கோ. இளவழகன்
திரு. ஆழி செந்தில்நாதன், மொழி நிகர்மை – உரிமை பரப்பியக்கம்

மற்றும் பலர்.

மொழிப் பாதுகாப்பு;  நடுவண் அரசின் புதிய கல்விக் கொள்கை

 தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு 

தமிழர் உரிமைகள்

வெளியுறவுக் கொள்கையும் தமிழர் நலமும்

தந்தை பெரியார் பிறந்தநாள் நினைவு

இன்னும் பல தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெறும்.

 நுழைவுக் கட்டணம் இல்லை, ஆனால் நம் அமைப்பின் வெள்ளி விழாவைச் சிறப்பாகக் கொண்டாட உங்கள் அனைவரின் துணையும் தேவைப்படுகிறது. உங்கள் உதவியை நன்கொடையாக அளிக்க  http://worldthamil.org/donate கணக்கில் செலுத்தவும்.. அல்லது உங்கள் காசோலையை (payable to: “World Thamil Organization, Inc.”) கீழ்வரும் முகவரிக்கு அனுப்பவும்.

உலகத் தமிழ் அமைப்பு
வட கரோலினா

[World Thamil Organization, Inc.105 Ronaldsby Drive,Cary, North Carolina 27511]

தாங்கள், தங்கள் உற்றார் உறவினர், நண்பர்களுடன் திரளாகக் கலந்துகொண்டு, இவ்விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம். உங்கள் அனைவரையும் நேரில் பார்த்து அளவளாவி அன்புடன் கலந்துரையாட ஆவலுடன் இருக்கின்றோம்.

அனைவரும் வருக ! வருக !! என பணிவன்புடன் அழைக்கின்றேன்.

அன்புடன்,

முனைவர் வை. க. தேவு

தலைவர், உலகத் தமிழ் அமைப்பு