(தமிழ்ச்சொல்லாக்கம்: 355-361 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 362-367

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

362. பரிணாமம்          —        திரிபு

363. கிரியா      —        தொழில்

364. பரிமாணம்          —        அளவு

365. அனுக்கிரகம்        —        அருளுதல்

நூல்      :           நாநா சீவவாதக் கட்டளை (1917)

நூலாசிரியர்      :           சிரீ சேசாத்திரி சிவனார்

குறிப்புரை       :           கோ. வடிவேலு செட்டியார்

((உ)லோகோபகாரி பத்திராசிரியர்)

366. Ticket – பயணச் சீட்டு

பூலோக நரகம் என்பதைப் பலர் பலவாறு கொள்வர். பூலோகத்திலும் நரகம் உண்டோ? என்று சிலர் கருதுவர். அந்நகரம் யாது? அஃது இருப்புப் பாதை ((இ)ரெயில்வே) மூன்றாம் வகுப்பு வண்டித் தொடர். மூன்றாம் வகுப்பு வண்டிகளில் சிறப்பாகத் தென்னிந்திய (இ)ரெயில்வே மூன்றாம் வகுப்பு வண்டிகளில் ஏழைச் சகோதரர்கள் படும் துன்பத்துக்கு அளவு உண்டோ? மூன்றாம் வகுப்புப் பயணச் சீட்டு (டிக்கட்) பெறுவது பெருங் கடினம்.

இதழ்   :           தேச பக்தன் – நாளிதழ், சென்னை 2, 1. 1918

ஆசிரியர்          :           திரு.வி.க.

367. நிர்க்கந்தரூபம் – திருவுருவம்

மேருமந்தர புராணம் மூலமும் உரையும் (1918)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்