தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகச் சிலவே – சி.இலக்குவனார்

தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகச் சிலவே! மொழி மரம் போன்றது. இதன் சொற்கள் இலைகள் போன்றன. ஆண்டுகள் செல்லச் செல்ல பழைய இலைகள் வீழும். புதிய இலைகள் தளிர்க்கும். மரம் அவ்வாறே நிற்கும். இதே போன்று தமிழ் மொழி தொல்காப்பியர் காலத்திலிருந்து இன்று வரை நிலைத்திருக்கின்றது. இவை என்றும் தொடர்ந்து நிலைத்திருக்கும். ஆனால் ஒரு மரத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை இதில் தடுக்க இயலாது. பிற மொழிகளுடன் ஒப்பிடும் போது தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகச் சிலவே என்பது குறிப்பிடுதற்குரியது. –  பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

அறிவுக் கோயில் ஞானாலயாவிற்குச் சென்றோம்! – கரந்தை செயக்குமார்

ஞானாலயா   புதுக்கோட்டையில் ஓர் அறிவாலயம் – ஞானாலயா: கரந்தை செயக்குமார்   கிருட்டிணமூர்த்தி நூல்களின் காதலர்ஆகி ஞானாலயா அமைக்கக் காரணமாக இருந்தவர் அவர் தந்தையே!   “மூல நூல்களைப் படி” என்ற இவர் தந்தை அறிவுரை வழங்கியதோடு விட்டுவிடாமல், ஒரு கள்ளிப் பெட்டியில் இருந்த, தன் பழைய புத்தகங்களில் இருந்து, நூறு புத்தகங்களை 19 அகவயைிலிருந்த இவரிடம் கொடுத்தார்; இவற்றையெல்லாம் நீ, பாதுகாத்துப் படி. என்றார்.   இவர் மனம் மகிழ்ச்சியால் விம்முகிறது. நூறு புத்தகங்களையும், ஒவ்வொன்றாய்த் தொட்டுப் பார்க்கிறார்.   நூறு…

ஞானாலயா கிருட்டிணமூர்த்தி 75 ஆவது பிறந்த நாள்

நண்பர்களே, நம் பாரதத் திருநாட்டின் விடுதலைத் திருநாளில் பிறந்தவர்தான், ஞானாலயா கிருட்டிணமூர்த்தி அவர்கள்.   எதிர்வரும் ஆடி 30, 2046 / 15.8.2015, இவரது 75 ஆவது பிறந்த நாள் ஆகும். இவரது பிறந்த நாளினை, பவள விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடிட, கவிஞர் முத்து நிலவன் அவர்களும், மற்ற தமிழன்பர்களும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்கள்.   மகத்தான மனிதருக்கு, ஓர் சிறப்பான விழா! உன்னத மனிதருக்கு ஓர் உயரிய விழா! நாமும் பங்கெடுப்போமா நண்பர்களே,   பவள விழா சிறக்க வாருங்கள், வாருங்கள்…