துளிப்பாக்கள் – தமிழ் சிவா

துளிப்பாக்கள்   வற்றாது ஓடும் இளைஞர்கள் சங்கமிக்கும் கூவம் மதுக்கடை!   துருத்தி நின்றன எலும்புகள் இறந்து கிடந்தது ஆறு!   நச்சு நாசியைப் பிளக்க கலங்கிக் கையற்று நின்றது காற்று!   குடிசைக்குள் புகுந்த அமைச்சர் கண்கலங்கினார் அடுப்புப்புகை!   அடுத்த அறிவிப்பு மதுக் கடையிலேயே இறப்பவர்க்குப் பிதைக்கப் பணம் இலவசம்!   எந்தக் கடவுளிடமும் சிறைமீட்க வேண்டுமென்று யாகம் நடத்துவதில்லை ஐந்தறிவுகள்!   வழக்கில் தோல்வி பயந்து வாழ்ந்தன பேருந்துகள்!   காக்கும் கடவுள் உடைந்து போனார் தீர்ப்பு நாளன்று!  …

பயனில்லாரைத் தெரிவது தொல்லை! – கெர்சோம் செல்லையா

பயனில்லாரைத் தெரிவது தொல்லை! ஏழ்மை ஒழிப்பே நோக்கு என்பார்; ஏழையை ஒழிக்கவே நோக்குகின்றார்! ஊழல் இல்லா ஆட்சி என்பார்; ஊதிப் பெருக்கவே ஆளுகின்றார்! வாழ வைக்கும் தலைவரும் இல்லை; வறுமையை ஒழிக்கும் தலையும் இல்லை! பாழாய்ப் போனது தேர்தல் இல்லை; பயனில்லாரைத் தெரிவதே தொல்லை! -கெர்சோம் செல்லையா

மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா

மத்திய அரசின்  சான்றிதழ் வழங்கும் விழா தேவகோட்டை தேவகோட்டைபெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அனைருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. விழாவில் 8 ஆம் வகுப்பு மாணவர் சௌமியா  வரவேற்புரை வழங்கினார். தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் விழாவிற்குத் தலைமை தங்கினார்.   மாநில அளவில் தேசிய ஆற்றல் துறை சார்பாகத் “தேசிய எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில்…

நல்லதை நாட்டுவதே நம்பணி! – தமிழ்சிவா

நல்லதை நாட்டுவதே நம்பணி! மஞ்சள் நிறத்தொரு பூனை        மக்களை ஏமாற்றும் பாரீர் கொஞ்சல் மொழிகள் பேசி        நெஞ்சம் பிளக்கும் பாரீர்!! சந்தியில் தமிழன் சாகும்போதும்        சத்தியம் வெல்லுமெனும் பாரீர்! முந்தியது என்றாலும் அதன் முகத்தையே மாற்ற வேண்டும்! பச்சை நிறத்தொரு பூனை        பாரில் வளருது பாரீர்! இச்சை கொண்டது அப்பூனை        ஈடிலாப் பதவி மேலே! நச்சைக் கொணர்ந்து ஊட்டும்        நல்ல திறமை அதற்குண்டு! எச்சில் என்றே நினைக்கும்        யாரையும், எடுத்தெறிய வேண்டும்! மாம்பழம் தின்றிடும்…

ஆறு தலைமுறையினரின்அரிய சந்திப்பு, தாகூர் கலைக்கல்லூரி, தமிழ்த்துறை

சித்திரை 19, 2047 / மே 02, 2016 காலை 10.00 புதுச்சேரி  தாகூர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறையில் ஆறு தலைமுறைத் தமிழ்ப் பேராசிரியர்கள் சந்திக்கும் அரிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.    கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் புதுச்சேரி அரசுக் கலைக் கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் அனைவரும் ஒன்றுகூடி இன்றைய இளம் தலைமுறைத் தமிழ்ப் பேராசிரியர்களோடு கலந்துரையாடும் நிகழ்வு இது.     இந்நிகழ்வில் ஆறு தலைமுறை ஆசிரிய மாணவப் பரம்பரைப் பேராசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.   நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு-  தலைமை:…