மணவை முத்தபா நினைவேந்தல், சென்னை

நாள்: மாசி 06, 2048 / சனிக்கிழமை / 18 . 02. 2017 நேரம்: மாலை 5.30 – 7.30 வரை இடம்: இந்திய அலுவலர் சங்கக் கட்டடம் 69, திரு.வி.க. நெடுஞ்சாலை இராயப்பேட்டை , சென்னை – 600014   மணவை முத்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை தமிழகப்புலவர் குழு தமிழ்மொழி அகாதெமி அண்ணாநகர் இசுலாமிய நடுவம் அண்ணாநகர் குடியிருப்போர் நலச்சங்கம் அண்ணாநகர் குடியிருப்போர் நலச்சங்கம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : மரு. திருமதி. மணிமேகலை கண்ணன் தொடர்பு எண்கள் : 9841036222…

காலந்தோறும் தமிழ் வரிவடிவம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

காலந்தோறும் தமிழ்  வரிவடிவம்!     எந்த மொழியாக இருந்தாலும் காலந்தோறும் வளர்ச்சிநிலையை அடைவதே இயற்கை. தமிழ்மொழியும் அத்தகைய வளர்ச்சி நிலையை அடைந்ததே. இருப்பினும் தொல்காப்பியத்திற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவ்வளர்ச்சி நிலையைத் தமிழ் எட்டிவிட்டது. மக்களினம் தோன்றிய இடம், கடல்கொண்ட பகுதியும் சேர்ந்த தமிழ்நிலம். மக்கள் தோன்றிய பொழுது கருத்துப் பரிமாற்றத்திற்காகச் செய்கையைப் பயன்படுத்தி, அதன் பின்னர், ஓவிய உருக்களைப் பயன்படுத்தியுள்ளனர். பல்வேறு வளர்ச்சிகளுக்குப் பின்னர், நெடுங்கணக்கு என்பதை முறைப்படுத்திய காலத்தில் தமிழ்வரிவடிவம் அறிவியல் முறையில் அமைந்து விட்டது. எனவே, தமிழின்…

குறள்மேற்கோள் நூல்கள்

  திருக்குறளைத் தம்மில் ஒரு பகுதியாக வைத்துப் போற்றும் விளக்க நூல்கள் இரங்கேச வெண்பா சிவசிவ வெண்பா சினேந்திர வெண்பா சோமேசர் முதுமொழி வெண்பா திருக்குறள் குமரேச வெண்பா திருக்குறள் விளக்க வெண்பா திருத்தொண்டர் வெண்பா திருப் புல்லாணி மாலை திருமலை வெண்பா தினகர வெண்பா பழைய விருத்த நூல் முதுமொழி மேல் வைப்பு முருகேசர் முதுநெறி வெண்பா வடமலை வெண்பா வள்ளுவர் நேரிசை   பாடல் எடுத்துக்காட்டு: இரங்கேச வெண்பா அல்லது நீதிசூடாமணி : சொன்னகம்பத் தேமடங்கல் தோன்றுதலால் அன்பரு இன்னமுத மாகும்…

தகவலாற்றுப்படைத் திட்டத்தின் 21 ஆவது தொடர் சொற்பொழிவு

அன்புடையீர், வணக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தகவலாற்றுப்படைத் திட்டத்தின் கீழ் 21 ஆவது தொடர் சொற்பொழிவு  முனைவர். கு. அரசேந்திரன் (தலைவர், தமிழ்த் துறை, (ஓய்வு) கிறித்துவ கல்லூரி, தாம்பரம், சென்னை) அவர்கள் ‘தமிழ் இந்தோ ஐரோப்பிய மொழி தொடர்பு‘ என்னும் தலைப்பில் மாசி 05, 2048 / 17.02.2017  /மாலை 4.30 அன்று உரையாற்ற இருக்கிறார். அனைவரும் வருக. அன்புடன், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம் எதிரில் சென்னை – 600 025….

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு] – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙீ]  தொடர்ச்சி)                        தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு] இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி   நெல்லையில் பணியாற்றிய பேராசிரியர் சி.இலக்குவனார் அடுத்து விருதுநகர் செந்திற்குமாரநாடார் இந்துக்கல்லூரியில் (10.08.47 அன்று) தமிழ்த்துறைத்தலைவராகப் பணியில் சேர்ந்தார்; இக்கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் பட்டப் படிப்பின்மையால் இளங்கலையில் தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினார். கல்லூரியிலும் தமிழ் அமைப்புகள் மூலமாக நகரிலும் தம் தமிழ்த் தொண்டினைத் தொடர்ந்தார் பேராசிரியர்.   “பேராசிரியர் (சி.இலக்குவனார்) சென்ற இடங்களில் எல்லாம் தமிழ்த் தொண்டே நிகழ்ந்தது. தமிழுக்கு மறுமலர்ச்சி…

பொங்கி வாடா! – காசி ஆனந்தன்

பொங்கி வாடா! தீயெழுந்து அடுப்பினிலே பாலைச் சுட்டால் சினந்தெழுந்து பால்பொங்கித் தீயணைக்கும்! நீ உவந்து செய்கின்ற பொங்கல் வெற்று நிகழ்வன்று!  வீரத்தின் பாடம் கண்டாய்! தாயிழந்த சேயர்போல் தமிழர் ஈழம் தனையிழந்து சினங்கொண்டு பொங்குகின்றார்! பாய்! சிவந்து களமாடு! பொங்கி வாடா! பகைநொறுக்கித் தமிழீழ மண்ணை மீட்போம்! திரைப்படத்தின் மார்புகளைத் தின்னும் கண்ணால் தீந்தமிழ்த்தாய் ஈழத்தில் சாவின் வாயில் இரைப்படப்போய் விழும்புலிகள் களத்தின் புண்கள் இருந்த மலை மார்புகளைப் பார்ப்பாய்! ஆங்கே நிரைப்பட நாளும் களத்தை நிறைத்தார் வீரர்! நீ என்னடா இங்கே கிழித்தாய்?…

இதற்குத்தானா தாழ்ச்சி செய்தீர் ஆளுநரே! – இலக்குவனார் திருவள்ளுவன்

இதற்குத்தானா தாழ்ச்சி செய்தீர் ஆளுநரே!   தமிழ்நாட்டரசின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தை 23, 2048 / பிப்பிரவரி 5, 2017 அன்று தன் முதல்வர் பதவியைவிட்டு விலகி மடல் அளித்துள்ளார். அன்றே அ.தி.மு.க. சட்டமன்றக்கட்சியின் தலைவராக வி.கி.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அன்றைய நாளில் தமிழ்நாட்டில்தான் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் இருந்துள்ளார். ஆனால், உடனே தில்லி பறந்துவிட்டார். மத்திய அதிகாரமையத்தால் மிரட்டப்பட்ட பன்னீர்செல்வம் கட்சியில் தான் மிரட்டப்பட்டதால் பதவி விலகியதாக அறிவித்தார். இதனால் தமிழ்நாடு குழப்பத்தைச் சந்தித்துள்ளது.   பெரிய மாநிலமான தமிழ்நாட்டிற்கு முழுமையான ஆளுநரை…

இணக்கமாகுங்கள் அல்லது தி.மு.க.விற்கு வழிவிடுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இணக்கமாகுங்கள் அல்லது தி.மு.க.விற்கு வழிவிடுங்கள்!   அ.தி.மு.க.வின் குழப்பங்களுக்குக் காரணம் பா.ச.க.தான். சேகர்(ரெட்டி) வழக்கு முதலானவை மூலம், ஒதுங்க நினைக்கும் பன்னீர்செல்வத்தையும் மிரட்டிப் பொங்க வைத்துள்ளது. கரூர் அன்புநாதன்வழக்கு முதலானவை மூலம் நத்தம் விசுவநாதன் போன்றவர்களைப் பன்னீர்ப்பக்கம் நிற்க வைக்கிறது. பன்னீரைக் காட்டிச் சசிகலாவை மிரட்டிப் பணிய வைக்க முயல்கிறது. எனவேதான், பெரும்பான்மையரைச் சசிகலாவிற்கு எதிராக அறிக்கைகள் விடச்செய்தும் சிலரைச் சசிகலாபக்கம் நிற்க வைத்தும் நாடகமாடுகிறது பா.ச.க.   இப்போதைய சூழலில் சசிசலா பக்கம் பா.ச.க. சாய்ந்தால் பன்னீர் அரசியலில் ஒதுக்கப்படுவார். மாறாக அக்கட்சி…

குழப்பங்களுக்குக் காரணம் ஆளுநரை இயக்குபவர்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

குழப்பங்களுக்குக் காரணம் ஆளுநரை இயக்குபவர்களே!     தமிழக முதல்வர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியதும் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்ட மன்றக் கட்சித்தலைவராக வி.கி.சசிகலா என்னும் சசிகலா நடராசனைத் தேர்ந்தெடுத்ததும் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் தமிழ்நாடு விரைந்து வந்திருக்க வேண்டும். இது தொடர்பில் அவர் மத்திய அரசின் உரியவர்களைக் கலந்தாய்வதும் சட்ட வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்பதும் முறையானதே! ஆனால், அதை ஒளிவுமறைவாகச் செய்ய வேண்டிய தேவையில்லை. வெளிப்படையாக அறிவித்துவிட்டுத் தமிழ்நாட்டிற்கு வரும் நாளையும் தெரிவிக்கலாம். காலத்தாழ்ச்சி செய்யாமல், ஆளுங்கட்சியின் ச.ம.உறுப்பினர்களின் முடிவை ஏற்றிருந்தால்,…

எழுத்தாளர்களைக் குமுகம்(சமூகம்) ஏற்க வேண்டும்!

எழுத்தாளர்களைக் குமுகம்(சமூகம்)  ஏற்க வேண்டும்!   இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடாக எசு.செல்வசுந்தரியின் ‘கை நழுவும் சொருக்கம்‘ (சிறுகதை நூல்) ‘உன்னை விட்டு விலகுவதில்லை‘ (புதினம்) ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா திருச்சி மாவட்ட ஆட்சியர்  முனைவர் கே.எசு.பழனிச்சாமி தலைமையில் எழுத்தாளர் மதுரா முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது   விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தர்பகராசு, வரலொட்டி ரெங்காசாமி, குமாரசாமி, பாசுகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் இராச்சா, திருநங்கை பிரியாபாபு ஆகியோர் நூல் ஆய்வு செய்தனர் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் பிரபஞ்சன்…

தனித்தமிழ் இயக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை

தனித்தமிழின் நோக்கும் போக்கும் தனித்தமிழ் இயக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை சித்திரை 15, 2048 / ஏப்பிரல் 28, 2017 உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தென்மொழி இயக்கம்    

சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்படும்வரை போராடுவோம்: தொடரும் கேப்பாப்பிலவு போராட்டம்

சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்படும்வரை போராடுவோம்: தொடரும் கேப்பாப்பிலவு போராட்டம்   விமானப்படைத் தளத்திற்கு முன்பாக உள்ள வீதியில், கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த 9 ஆம்  நாள் முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   குளிரையும் வெயிலையும் பொருட்படுத்தாது தமது பூர்வீக நிலத்தினை மீட்கும் போராட்டத்தில் கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள்  2 ஆவது வாரமாகத் தொடர்ந்து  ஈடுபட்டு வருகின்றனர். .அம்மக்கள், சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்படும்வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.r.   மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப் பல்வேறு தரப்பினரும்…