தமிழ்நாடும் மொழியும் 4 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 3 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் பழைய கற்காலம் நினைப்பிற்கெட்டா நெடுங்காலத்துக்கு முன்னர்க் கதிரவனிடமிருந்து ஒரு சிறு பகுதி தெறித்து விழுந்தது. விழுந்த பகுதி படிப்படியாகக் குளிர்ந்தது. பிறகு அதிலே நீரில் வாழ்வன தோன்றின. பின்னர் நீரிலும் நிலத்திலும் வாழவல்ல உயிர்கள் தோன்றின. இவ்வாறு பல்வேறு வகையான உயிர்கள் தோன்றித் தோன்றி இறுதியிலே மனிதன் தோன்றினான் என அறிஞர் பலர் நமது தோற்றம் குறித்துக் கூறியுள்ளனர். தோன்றிய மனிதன் முதலிலே விலங்குகள் போல வாழ்ந்தான். வாழ்க்கையிலே சிறிது சிறிதாக முன்னேறினான். விலங்குகள் போல…

3. தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 1/3 – சி. பா.  

(செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 3/3 தொடர்ச்சி) 3. தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 1/3 தமிழ் மலையென விளங்கியவர் மறைமலையடிகள். தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையாய் விளங்கி, மொழிக்கு வளம் சேர்த்தவர். தமது எழுத்தாலும் பேச்சாலும் சைவ சமயத்தின் பெருமைகளை நாடெங்கும் பரப்பியவர். ஆழ்ந்த புலமையும், ஆராய்ச்சித் திண்மையும் ஒருங்கே அமையப் பெற்றவர். உரம் பாய்ந்த உடலும் உறுதி கொண்ட உள்ளமும் உடையவர். தமிழில் மட்டுமின்றி வடமொழி ஆங்கிலம் ஆகிய பிற மொழிகளிலும் புலமை நலம் சான்ற பெரியார் இவர். இவர்தம் எழுத்தும், பேச்சும்,…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 6

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 5 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 2  மொழிகளும் மொழிக்குடும்பங்களும் தொடர்ச்சி    தமிழ்க் குடும்ப மொழிகளுள் திணை எனும் பாகுபாடு உண்டு.  ஏனைய குடும்ப மொழிகளுள் இத் திணைப் பாகுபாடு காண்டல் அரிது.   இந்தோஐரோப்பிய மொழிகள் சொற்களின் இயல்புக் கேற்பப் பால் கூறும் முறையைக் கொண்டுள்ளது. பொருள் உயர்திணை ஆண்பாலைச் சார்ந்ததாய் இருக்கலாம். ஆனால் சொல் அஃறிணை ஒன்றன்பாலாய்க் கூறப்படும்.   இந்தோஐரோப்பிய மொழிகளுள் சிலவற்றுள் எல்லாம் உயர் திணையே; ஆண்பால் அல்லது பெண்பால் என்ற பகுப்புத்தான் உண்டு.  …

இலக்குவனார் நெறியுரைக்கிணங்கத் தமிழ்நல அரசை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

கற்றறிந்த தமிழ்ப்புலவர்கள் வழி நடைபெறும் அரசு சிறப்புற்று ஓங்கும். தமிழ்ப்புலவர்கள் என்று கூறுவதன் காரணம், சங்கக்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வழி அரசுகள் நடைபெற்றதால் சங்கக்காலம் பொற்காலமாகத் திகழ்ந்தது. இன்றைய தமிழ்ப்புலவர்கள், நடுநிலைமை உணர்வுடனும் துணிவுடனும் அரசிற்கு அறிவுரை கூறுவோர் அருகியே உள்ளனர். கட்சிச் சார்பற்று ஆன்றோர்கள் அறிவுரை கூறினாலும் கட்சிக் கண்ணோட்டத்துடன் கூறுவதாகக் கருதி அவற்றைப் புறக்கணிக்கும் போக்கே உள்ளது. யார் அறிவுரை கூறினாலும் அரசிற்கு எதிரான கருத்துகள் என்று புறந்தள்ளாமல் நல்லாட்சிக்கான வழிகாட்டி என்று ஏற்பார்கள் எனக் கருதுகிறோம். எனவே, தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர்…

வெற்றிச்சிங்கம் இலக்குவர்- மறைமலை இலக்குவனார்

வெற்றிச்சிங்கம் இலக்குவர் தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன …… தனதான சட்டத்துறை நீதித் துறை பொறியியல் நுட்பத்துறை ஆட்சித்துறை அறிவியல் ஒட்பம் பல தேர்ந்திடும் மருத்துவம் எனவோதும் புத்தம்புது கல்வித்துறைகளில் தித்தித்திடும் தமிழ்மொழி இடம்பெற நித்தம் வற் புறுத்திநம் அரசுடன் –போராடி பக்தவத்சலரது ஆட்சியில் மக்கள்திரள் தெருவினில் கூட்டியே தெள்ளத்தெளி தமிழில் பரப்புரை – செய்தாரே உச்சிக்கதிர் வெப்பச் சருகென மக்கள்நலன் கெட்டுத் தொலைந்திட ஒற்றைத்தனி மொழியா என இவர் —- கிளர்ந்தாரே விட்டுக் கொடுத்திடின் நாம்…

இலக்குவனார் நினைவேந்தல், 04.09.2022

தமிழ்க்காப்புக் கழகம் கி.இ.க.[ஒய்.எம்.சி.ஏ.] பட்டிமன்றம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல் இணைய உரையரங்கம் ஆவணி 19, 2053 / 04.09.2022 ஞாயிறு காலை 10.00 மணி கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்    வரவேற்புரை:       முனைவர் ப.தாமரைக்கண்ணன், செயலர், கி.இ.க.(ஒய்எம்சிஏ) பட்டிமன்றம் ந. காருண்யா, இளங்கலை-தமிழ் மூன்றாம் ஆண்டு, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி பெரம்பலூர் திரு வ. ஏ. மணிகண்டன், முனைவர் பட்ட ஆய்வாளர், சவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி….

“முத்துநகரில் இரத்தக் குளியல்” – தியாகு உரை

பெரியார் அம்பேத்கர் மார்க்குசு சிந்தனைக் களம்தோழர் தியாகு இணையவழி உரை“முத்துநகரில் இரத்தக் குளியல்” ஆவணி 17, 2053 / 02.09.2022இரவு 7.00 – 10.00 மணி கூட்ட எண்: 864 136 8094நுழைவு எண்: 12345 Meeting ID: 864 136 8094Passcode: 12345 அலைபேசி வழி / One tap mobile +16465588656,,8641368094#,,,,*12345# US (புது யார்க்கு / New York) +13017158592,,8641368094#,,,,*12345# US (வாசிங்கடன் கொ.மா. /Washington D.C) இருப்பிடத்திற்கேற்ற அழைப்பு எண் / Dial by your location +1 646 558 8656 US (புது யார்க்கு / New York) +1 301 715…

ஆகமவிதிகள் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குப்பொருந்தா!–  இலக்குவனார் திருவள்ளுவன்

வழிபாட்டு முறையில் ஆகமம் ஆகமவிதிகள் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குப்பொருந்தா!  தமிழர்களுக்காகத் தமிழர்களால், தமிழர்களின் கடவுள்களை வழிபடுவதற்குக் கட்டப்பட்ட கோயில்களே தமிழகக் கோயில்கள். இக்கோயில்களில் மண்ணின் மக்களுக்கும் மக்களின் மொழியாகிய தமிழுக்கும் இடமில்லை என்பவர்கள் அயல்மண்ணைச் சேர்ந்தவர்களும் அயல் இனத்தைச் சேர்ந்தவர்களுமே. தமிழர்களால் கட்டப்பட்ட கோயில்களுக்கு உரிய விதிமுறைகளையும் வழிபாட்டு முறைகளையும் அயலார் எப்படி இயற்ற இயலும்? அவ்வாறு இயற்றப்பட்டதாகக் கூறும் விதிகள் தமிழ்மக்களை எங்ஙனம் கட்டுப்படுத்தும்? பொதுவாக ஆகமவிதிகள் சைவ சமயக்கோயில்களுக்கே உள்ளன. சைவ ஆகமங்களாகத்  திருவடிகள் முதல் 22 உடலுறுப்புகளையும் குண்டலம், முதலிய 6…

இலக்குவனார் நினைவுநாளில் தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு – சீமான்

இலக்குவனார் நினைவுநாளில் தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு “அன்னைத் தமிழில் அருச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கோவில்களிலும் தமிழில் வழிபாடு (அருச்சனை) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நாம் அறிந்த வரை இந்தத் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை. நாடு “தமிழ்”நாடு. ஆனால், தமிழில் வழிபாடு செய்யப் போராட வேண்டிய நிலையில் தான் கடந்த 55-ஆண்டுக் காலத் திராவிட அரசுகள் இயங்கி இருக்கின்றன….