வெருளி நோய்கள் 1171-1175 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1166-1170 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1171-1175
- தண்ணீர்ப்பூசணி வெருளி – Tiranophobia
தண்ணீர்ப்பூசணி(Watermelon) பற்றிய அளவு கடந்த பேரச்சம் தண்ணீர்ப்பூசணி வெருளி.
தண்ணீர்ப்பூசணி, ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். இதன் பழம் தர்ப்பூசணிப் பழம், வத்தகைப்பழம், கோசாப் பழம், தர்பீசு, தண்ணீர்ப் பழம் எனவும் அழைக்கப்படும். பூசணியைப் பூசுனி, பூசனி என்றும் குறிப்பிடுவர்.
00
- தந்தை உடன்பிறந்தாள் வெருளி – Gumuphobia
தந்தையுடன் பிறந்த தமக்கை, தங்கை ஆகிய அத்தைமார் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தை உடன்பிறந்தாள் வெருளி.
அத்தை என்று சொன்னால், தாயுடன் பிறந்த உடன்பிறந்தவரின் மனைவி என்றும் பொருள் கொள்ளப்படும். எனவே, தந்தை உடன்பிறந்தாள் எனச் சொல்லப்படுகிறது.
காண்க : தந்தை வழி அத்தை வெருளி(Amitaphobia)
00
- தந்தை வழி அத்தை வெருளி – Amitaphobia
தந்தை வழி அத்தை குறித்த அளவுகடந்த பேரச்சம் தந்தை வழி அத்தை வெருளி.
காண்க : தந்தை உடன்பிறந்தாள் வெருளி(Gumuphobia)
00
- தந்தை வழி பெரியம்மா, சித்தி வெருளி – Bumuphobia
தந்தையின் உடன் பிறப்புகளான பெரியப்பா, சித்தப்பா மனைவியராகிய பெரியம்மா, சித்தி குறித்த அளவுகடந்த பேரச்சம் தந்தை வழி பெரியம்மா, சித்தி வெருளி.
பெரியம்மா, சித்தி ஆகியோர் காட்டும் கண்டிப்புகளால் அவர்கள் மீது தேவையற்ற பேரச்சம் கொண்டு வெருளி வருகிறது.
00
- தந்தை வெருளி – Patrophobia
தந்தை மீதான அளவு கடந்த பேரச்சம் தந்தை வெருளி.
தந்தையிடம் கனிவை மட்டுமே எதிர்பார்த்துக் கண்டிப்பை விரும்பாதவர்களுக்குத் தந்தை மீது தேவையற்ற பேரச்சம் கொண்டு வெருளி வருகிறது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply