வெருளி நோய்கள் 1386 -1390: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1381 -1385: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1386 -1390
- தொலை நோக்கு வெருளி – Prophetophobia
தொலை நோக்குப் பார்வை குறித்த வரம்பற்ற பேரச்சம் தொலை நோக்கு வெருளி.
பிறரது தொலைநோக்குப் பார்வை குறித்துக் கவலையும் வெறுப்பும் அச்சமும் கொள்வோர் பெருகி வருகின்றனர்.
00
- தொழில் வெருளி-Ergophobia/ Ergasiophobia/Ergasophobia
தொழில் குறித்து ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் தொழில் வெருளி
பணி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 9 இடங்களில் இடம் பெற்றிருந்தாலும், பணிவு அல்லது தாழ்தல் என்னும் பொருள்களிலேயே வந்துள்ளன. தொழில் என்னும் சொல்தான் 84 இடங்களில் பல்வகை வேலைகளையும் குறிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளது.
ergon என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பணி
00
- தொழில்நுட்ப வெருளி -Technophobia
தொழில் நுட்பம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தொழில்நுட்ப வெருளி -Technophobia.
தொழில்நுட்பம் என்னும் பொழுது இன்றைய உலகில் கணிணி, அலைபேசி சார்ந்த கணிநுட்பங்களும் அடங்கும். கணிணியை அல்லது அலைபேசியில் திறன் பேசியை எவ்வாறு இயக்குவது என்று தெரியாமல் கவலையும் வெறுப்பும் இத்தகையோருக்கு வரும்.
technē என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கலை, கை வினை, நுட்பத் திறம் எனப் பொருள்கள்.
00
- தொற்றல் வெருளி – Tapinophobia
நோய்த் தொற்றல்(contagious) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தொற்றல் வெருளி.
தொற்றுநோயாக இல்லாவிட்டாலும் நோய்த்தொற்று ஏற்படும் என்று பேரச்சம் கொள்வோர் உள்ளனர். தொற்றுநோயர் அருகில் இல்லாவிட்டாலும் அவர்கள் மூலம் நோய் பரவுமோ என்று பேரச்சம் கொள்வோரும் உள்ளனர்.
00
- தொடுகறி வெருளி – Piatophobia
தொடுகறிகள்(dishes) குறித்த வரம்பற்ற பேரச்சம் தொடுகறி வெருளி.
இதன் நேர் பொருள் வட்டில் அல்லது உண்கலம் என்பதாகும். எனினும் உண்கலங்களில் வைக்கப்படும் தொடுகறிகளையே குறிக்கின்றது.
dish என்றால், வட்டில், தட்டல், வள்ளம், உண்கலம், உண்கல நிறைவளவு, தட்ட உணவு, உணவுக்கூறு, உணவுவகை, குடுவை, குழிவு, நண்டுக்கறி எனப் பல பொருள்கள் உள்ளன. எனினும் உணவுப் பழக்கத்தில், தட்டுக் குழியில் அல்லது உணவைச் சுற்றி அல்லது இலையில் ஓரப்பக்கத்தில் தொட்டுக்கொள்ள வைக்கப்படும் உணவின் கூறான துணைக்கறி வகைகளையே குறிக்கிறது. எனவே தொடுகறி எனப்படுகிறது. கறி என்றால் இறைச்சி எனத் தவறாகப் பொருள் கொள்ளக் கூடாது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply