அன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 1-100:

 

‘வெருளி அறிவியல்’ நூலில் இடம் பெற்றுள்ள கலைச்சொற்கள் நீங்கலான பிற பயன்பாட்டுச்சொற்கள் பட்டியல் அளிக்கப்படுகின்றது.

ஒரு பொருளைக் குறிக்க ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களும் உள்ளன. நூல் பயன்பாட்டிற்கேற்ற சொற்கள்தான்தரப்பட்டுள்ளன. எனவே, இது சரி, அது தவறு என்ற கருத்துரை வேண்டா.

அதே போல் நேர் பொருளாக இல்லாமல் பயன்பாட்டிற்கேற்பவும் சொற்கள் அமைந்திருக்கும்.

சான்றாக subway என்றால் சுரங்கப்பாதை என்றுதான் பொருள். பழந்தமிழில் சுருங்கை என்றனர். அதையே பயன்படுத்தலாாம். எனினும் நிலத்தடிப்பாதையில் செல்லும் தொடரிகளையும் subway  என்றுதான் குறிப்பிடுகின்றனர். எனவே, நிலத்தடித் தொடரி எனக் குறிக்கப் பெற்றிருக்கும்.

 

1)    ‘அ’ குறி

‘A’ symbol

2)    ‘கு.இ.17’ குறி

‘NC 17’ symbol

3)    ‘கு’ குறி

‘C’ symbol

4)    ‘ங’ கதிர்ப்பொறி

X ray machine

5)    ‘சி’ குறி

‘S’ symbol

6)    ‘பெ.கா.’ குறி

‘PG’  symbol

7)    ‘பெ.கா.13’ குறி 

‘PG 13’ symbol

8)    ‘பொ.’ குறி 

‘G’ symbol  

9)    ‘பொ.அ.’ குறி

‘UA’ symbol

10) ‘ம’  குறி 

‘R’ symbol

11) ‘யா’ குறி

‘U’ symbol

12) ‘வ’ குறி

‘R’  symbol

13) அகப்பேசி

 

Intercom

14) அசைவூட்ட(ச் சித்திரத் தொலைக்காட்சி)த் தொடர்

Animated Television Series

15) அச்சப்பம்

Pasta

16) அடளை மீன்

Codfish

17) அடுக்கப்ப நறுக்கி

Pizza cutter

18) அடுக்கப்பம் 

Pizza

19) அடை

Pancake

20) அதக்குதல்

Chewing

21) அதி பயங்கரம்

Deinos

22) அதிரடி இசை      

Rock music

23) அதிரடித் திரைப்படம் 

Action film

24) அந்தர உந்து

Hover car

25) அந்துப்பூச்சி/விட்டில் பூச்சி

Moth

26) அப்பத்துண்டு

Crumb

27) அயல் கோளர்

Alien

28) அரத்தி நீர் மூழ்கிக் கப்பல்

Submarine

29) அருவருப்பு

Ugliness

30) அலம்புக் குழிசி

Kitchen sink

31) அலைமிதவை

Surfboard

32) அலையாட்டப் பலகை

Boogieboard

33) அழைப்பு மணி

Calling Bell

34) அழைப்பு மையம்

Call Centre

35) அறிந்திரா நிலை

Igarus

36) அறைச் சூடேற்றி

Room heater

37) அனல் கக்கி

Flame throwers

38)  ஆடை அடுக்கம் 

Clothing rack

39) ஆணம்       

Ketchup

40) ஆலங் கட்டி

Hail

41) ஆற்றுக்குருடு 

Onchocerciasis

42) இஞ்சியப்பம்

Gingerbread

43) இடங்கர்     

Crocodile

44) இயந்திரன்

Robot

45) இயல்பான நிலை

Normie

46) இரவு படுக்கையில் சிறுநீர் கழித்தல்

Nyctourinari

47) இருப்பு அகநிலை

spiritual plane of existence

48) இருப்பு இயக்கம்

physical plane of existence

49) இருப்புப்பாதை

Railway

50) இரும்பன்

Ironman

51) இலை இலையூதி 

Leaf Blower / Leaf Sucker

52) இழிஞர்

Scoundrel

53) இழுவை வண்டி 

Tow truck

54) இனிப்புருண்டை

Gumball

55) இனியம்

Doughnut / Donut

56) இன்கண்டு

Chocolate

57) இன்கூழ் அவரை

Jellybean

58) இன்தயிர்

Yogurt

59) இன்மா       

Cake

60) ஈட்டி 

Dart

61) உடன்பிறப்பு

Sibling

62) உடுப்பு மாட்டி / குப்பாய மாட்டி

Coat Hanger

63) உடைமைக் குறிப்பு

De

64) உட் கூரை 

Ceiling

65) உணவு

Cibus

66) உணா உலா 

Picnic

67) உண்குச்சிகள்

Chopsticks

68) உண்டியகம்

Cafeteria

69) உதைபந்தாட்டம்

Soccer

70) உயிரியகம்

Zoo

71) உயிர்த்தெழு நாள் முயல் 

Easter Bunny/ Easter Rabbit/Easter Hare

72) உருளப்பம்

Rigatoni/tubeshaped pasta

73) உருளி ஓடம்

Roller coaster

74) உருள் பொதி

Burrito

75) உலர்த்தி

Droger

76) உலாவண்டி

Stroller

77) உழுவை

Tractor

78) உறைபாகு

Jelly

79) உறையுணா

frozen food

80) உறைவகம்

Hotel

81) ஊது சுடர்

Blow torche (blowlamp. Uk)

82) ஊர்திக் கொட்டில் 

Garage

83) ஊர்திச் சங்கு

Siren

84) ஊறுபொதி பண்ணியம்

Fajitas

85) ஊன்றுகோல்         

Crutch 

86) எக்காளம் / ஊதுகொம்பு

Trompet

87) எதிர்ம எழுது பலகை

Boogieboard (2)

88) எரி வளி மிதி கட்டை 

Gaspedal

89) எரிமலை

Volcano

90) எரிவளி மானி

Gasgauge

91) எலுமிச்சை

Lemon

92) எலுமிச்சைப் பானம்

Lemonade

93) எழுதி

Pen

94) ஏணறை

Lift

95) ஏந்து

Appliance

96) ஏப்பம்

Belch

97) ஏவுகணை

Missile

98) ஏளனம்

Ridicule

99)  ஏனங் கழுவி          

Dishwasher

100)              ஐந்தாய ஆட்டம்

Yahtzee Game

 

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்