(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 187-205 இன் தொடர்ச்சி)

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 206- 237

206. உணர்ச்சி  உடம்பியியல்   Physiology Of Emotion உணர்ச்சியின் உடலியங்கியல், உணர்ச்சியின் உடலியல்,   உணர்ச்சி இயங்கியல் எனக் கூறப்படுகிறது. Physiology –  உடம்பியியல் எனப் பயன்படுத்துவதால் உணர்ச்சி  உடம்பியியல்- Physiology Of Emotion என்றே சொல்வோம்.Physiology of emotion
207. உணர்ச்சி யியல்Emotionology
208. உணர்வகற்றியல் மயக்கவியல்Anesthesiology /  Anaesthesiology
209. உணர்வு இயங்கியல்Sensory Physiology
210. உணர்வுசார் பொறியியல்Emotional Engineering
211. உணவாக்க நுட்பியல்Catering Technology
212. உணவியல்Bromatology
213. உணவு நுட்பியல்Food Technology
214. உணவு நுண்ணுயிரியல்Food Microbiology
215. உண்ணி நோயியல்Rickettsiology
216. உதட்டு வரியியல்Lipsology
217. உதிர் உயிர்மியியல்   exfoliō என்னும் இலத்தீன் சொல் இலையுதிர்வைக் குறிக்கும். இங்கே  உயிர்மி உதிர்வை மட்டும் குறிக்கிறது.Exfoliative Cytology
218. உப்பல் புடவி அண்டவியல்Inflationary Universe Cosmology
219. உமிழ்நீரியல்Sialosemeiology
220. உயரழுத்த இயற்பியல்High pressure physics
221. உயர் நுட்பியல்          High technology
222. உயர் ஆற்றல் இயற்பியல்High energy physics
223. உயர் ஆற்றல் வானக இயற்பியல்High energy astrophysics
224. உயர் பாலூட்டியியல்Primetology
225. உயர்நிலை அண்டவியல்Advanced Cosmology
226. உயிரி நுட்பியல்Zootechnics
227. உயிரி மின்னியல் ElectroBiology
228. உயிரிப் பரவலியல்Phenology
229. உயிரிய ளவியல்Biometrics
230. உயிரிய அறவியல்  Bioethics
231. உயிரிய ஆற்றலியல்Bioenergetics
232. உயிரி இயக்கவியல்   உடலியக்கவியல் எனச் சிலர் விளக்குகின்றனர். Physiology என்பதை அவ்வாறு கூறுவதால், இங்கே பொருந்தாது. உயிரி வினையியல் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். இது Sakanology உடன் தொடர்பு படுத்திக் கூறப்படுவதால் குழப்பம் வரும்.  mechanics – விசையியல் என்றும் இயக்க இயல் என்றும் குறிப்பிடுகின்றனர். எனினும் உயிரிய விசையியல், உயிரி எந்திரவியல் என்பன எந்திரவியலுடன் தொடர்பு படுத்தித் தவறாகப் பொருள் கொள்ளக்கூடும். எனவே   Biomechanics  – உயிரிய இயக்கவியல் என்பதே ஏற்ற சொல்லாக அமையும். காண்க: விசையியல்(Mechanics)Biomechanics/  Biokinetics
233. உயிரிய இயங்கியல்Biodynamics
234. உயிரிய இயற்பியல் Biophysics
235. உயிரிய உளவியல்  Biopsychology
236. உயிரிஎந்திரப் பொறியியல்Biomechanical Engineering
237. உயிரிய ஒப்புமையியல்   Organic Analogy என்பது உயிரிஉடல் (சூழல்) ஒப்புமை என்றும் உயிரின ஒப்புமை யியல் என்றும் இருவகையாகச் சொல்லப்படுகின்றது. சுருக்கமான சொல்லாட்சியாக உயிரிய ஒப்புமையியல்  என்று இங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது.Organic Analogy

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000