(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 175-186 இன் தொடர்ச்சி)

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப்பெயர்கள் 187 – 205

 

187. உடம்பிய

 

Physiological என்னும் முன் இணைப்புச்சொல் உடலிய, உடலியக்க, உடலியக்கத்தின், உடலியங்களின், உடலியக்கவியலிய, உடலியங்கு, உடலியல், உடற்றொழியியல், உடற்றொழிலுக்குரிய, உடற்றொழில், உடற்றொழில்வழி, உடற்றொழின்முறை, உடற்றொழிற்பாடு, உடற்றொழிலியல், உடற்கூற்றியல், உடற்செயல். உடற்றகு, உடற்றொழிற்பாட்டு, உடற்றொழின்முறை, சரீர அடிப்படை, உடற் கூற்று, வாழ்வியல், வினையிய, வினையியல், உடலியற், உடலி, உடற் கூற்றிய, உடற் கூற்று எனப் பலவாறாகக் குறிக்கப் பெறுகிறது. Physiology என்பதை உடம்பியியல் என்பதால்  Physiological என்பதை உடம்பிய என்றே சொல்லலாம்.

Physiological

188. உடம்பிய உயிர் இயற்பியல்

Physiological biophysics

189. உடம்பிய வளைசலியல்

 

சுற்றுப்புற உடலியல், சுற்றுப்புற உடலியங்கியல், சூழல்சார் உடலியங்கியல் எனக் குறிக்கின்றனர்.

சுருக்கமாக உடம்பிய வளைசலியல் எனலாம்.

190. Physiological Ecology

191. உடம்பிய உளவியல்

Physiological Psychology

192. உடம்பிய ஒலிப்பியல்

Physiological Phonetics

193. உடம்பிய மானிடவியல்           

Physiological Anthropology

194. உடலுண்ணி யியல்

 

Ento+zoology எனப் பிரிக்கக் கூடாது.  entozoon  அல்லது entozoa(பன்மை) குறித்த இயல்.

Entozoology

195. உடல் இயக்க இயல்

Kinesiology

196. உடல் நீர்ம இயல்

Hygrology(1)

197. உடல் பருமனியல்

Bariatrics

198. உடல்சார் மனிதவியல்

 

Physical anthropology உடல்சார் மானிடவியல், உடல் சார் மானுடவியல், இயற்பியல் மானுடவியல் எனப் படுகிறது. இயற்பியல் மானுடவியல் என்னும் இயந்திர மொழி பெயர்ப்பைச் சிலர் பயன் படுத்துகின்றனர். இது தவறான மொழிபெயர்ப்பு. உடல்சார் மனிதவியல் – Physical / Biological Anthropology என்பதையே நாம் பயன்படுத்தலாம்.

உயிரிய மனித வியல் என்று இதையே கூறுகின்றனர்.

Physical Anthropology

199. உடல் நலப் பொறியியல்

Sanitary Engineering

200. உடல் நோயியல்

Physiopathology

201. உடன் நிகழ் பொறியியல்

Concurrent Engineering

202. உடுவியக்க வியல்

Asteroseismology 

203. உட்புற ஏவியல்

Interior Ballistics

204. உணவுப் பொறியியல்

Food Engineering

205. புலனியல்

 

உணர் உறுப்பு உள்ளமைப் பியல் என முதலில் குறித்திருந்தேன். நெடுஞ் சொல்லாக உள்ளது. உணர்வுகளையும் (senses) உணர்வுகள் தொடர்பான வற்றையும் ஆராயும் இத்துறையை உணர்வியல் எனலாமா?  Emotion-ஐக் குறிப்பதாக அமையும். எனவே, ஐம்புலன்களால் உணரப்படும் இதனைப் புலன் எனக் குறிப்பிட்டுப் புலனியல் என்பதே பொருத்தமாக இருக்கும்.

Aesthesiology

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000