(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  571 – 583 இன் தொடர்ச்சி)

584. குழு இயங்கியல்

Group dynamics

585. குழுமநலன் பொருளியல்

Agglomeration Economics

586. குளுமை இயற்பியல்

Cryophysics

587. குளுமை மின்னணுவியல்

Cryoelectronics/ Cryotronics

588. குளுமை வடிவியல்

Cryomorphology

589. குளுமை யியல்

Cryology 

590. குறிசொல் லியல்

mantia என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குறி கூறல்.

Parapsychology(2) / Mantology

591. குறிப்பியல்

crypto- என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மறை/உட்குறிப்பு.

Cryptology

592. குறி யியல்          

 sēmeîon என்னும் கிரேக்கச் சொல்லிற்கும் semaeo என்னும் புது இலத்தீன் சொல்லிற்கும் அடையாளம்/அறிகுறி எனப் பொருள்கள்.

Semiotics என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் குறிகள் பற்றிய இயல்.

எனவே,  அறிகுறியியல்/குறியியல் எனப்படுகிறது. குறியமையவியல் எனச் சிலர் குறிப்பிடுவதைவிடக் குறியியல் சுருக்கமாக உள்ளது. 

நோய்க்குறி நூல், நோய்க் குணநூல் எனச் சில அகராதிகளில் காணலாம்.

Symptomology/ Symptomatology என்பது நோய் அடையாள வியலைக் குறிப்பதால் இவற்றை இங்கே குறிக்கத் தேவை யில்லை. அதனைக்

குறிநுட்பியல் எனலாம்.

Semiotics1, Semiology1

 

593. குறியீட்டியல்

eikṓn என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் உருப்படம்/ குறியீடு.

eikṓn>Icon

Iconology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000