ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 79-106 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 60-78 இன் தொடர்ச்சி)
79. ஆவியியல்
pneûma என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் மூச்சு. நடைமுறையில் ஆவி, தூய ஆவி என்று சொல்கின்றனர். pneûma என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மூச்சு. நடைமுறையில் ஆவி, தூய ஆவி என்று சொல்கின்றனர். spectrum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்கள் தோற்றம், உரு. மாய உருவை – பேயுருவை இதன் மூலம் குறிக்கின்றனர். spook என்பதற்கு ஒல்லாந்தர் (Dutch) மொழியில் பேய் எனப் பொருள். fantosme என்னும் பழம்பிரெஞ்சுச் சொல்லின் பொருள் தோற்றம். அனைத்தும் வெவ்வேறு மொழிச்சொல் அடிப்படையில் உருவாகியிருந்தாலும் ஆவியையே குறிக்கின்றன. ஆவிபற்றிய இயல் ஆவியியல். Pneumatology நல்லுயிரியல் (பரிசுத்த ஆவி) என்றும் கூறுகின்றனர். எல்லாம் ஒன்றுதான். எனவே, தனியாகக் குறிக்கப்பட்டது நீக்கப் பட்டுள்ளது. |
Pneumatology, Spectrology, Phantasmology, Spookology |
80. ஆழ் உளவியல் |
Depth Psychology |
81. ஆழ் வளைசலியல் |
Deep Ecology |
82. ஆழ்துளைப்பாறையியல் |
Borehole Lithology |
83. ஆளுமை இயல் |
Personology |
84. ஆறுகளியல்
potamo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஆறு. |
Potamology |
85. ஆற்றலியல் |
Energetics |
86. ஆற்றல் இயற்பியல் |
Energy Physics |
87. ஆற்றல் நுட்பியல் |
Energy Technology |
88. ஆற்றுப் பொறியியல் |
River Engineering |
89. ஆற்று வடிவியல்
Fluviomorphology என்பது கிளை ஆறுகளியல் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. Fluvio என்றால்தான் ஆறு. இங்கே கிளைகள் வரவில்லை. எனவே ஆற்று வடிவியல் எனலாம். |
Fluviomorphology /River Morphology |
90. ஆற்றுப்படுத்துளவியல் |
Counselling Psychology |
91. இசுலாமியஅரசியல் |
Islamic politics |
92. இசுலாமியல் |
Islamology |
93. இசைஒலியியல் |
Musical Acoustics |
94. இசைக்கருவியியல் |
Organology |
95. இசைப்பியல் |
Harmonics |
96. இசையியல் |
Musicology |
97. இடியியல் |
Brontology |
98. இடை நுட்பியல் |
Intermediate Technology |
99. இடை மாற்றியல்
இடைநிலை உரு மாற்றியல் என்பது சுருக்கமாக இடை மாற்றியல் எனப்படுகிறது. |
Metarheology |
100. இடை வானிலையியல்
Meso என்பது இடை(நிலை) என்னும் பொருளிலான முன்னொட்டாகும். நுண் எனச் சிலர் கையாள்வது தவறான பொருளைத் தரும். வட்டாரவானியல் என்பதைவிட இடை வானிலையியல் சரியாக உள்ளது. |
Mesometeorology |
101. இடைவளசையியல்
Mesology – சூழலியல், இடைச்சூழலியல் என்கின்றனர். Mesology என்பது சுற்றுப்புறவியலின் முந்தைய பெயராகும். mésos என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள்கள் நடு, இடை என்பனவாகும். இதனை இடைவளசையியல் – Mesology எனலாம் |
Mesology |
102. இட்டைட்டு (பேரரசு) இயல்
இட்டைட்டு மொழி, இந்திய-ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான, அனதோலியா மொழிகளில் ஒன்றாகும். இட்டைட்டு மொழி பேசிய இட்டைட்டு மக்கள், வடமத்திய அனதோலியாவில், இக்காலத் துருக்கி, சிரியா, இலெபனான் பகுதிகளை, அட்டுசா எனும் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு, கிமு 1,600 முதல் கிமு 1,178 முடிய ஆட்சி செய்தனர். இப்பேரரசு குறித்த ஆய்வியல். |
Hittitology |
103. இணக்க ஒளியியல் |
Adaptive optics |
104. இணைப்பியல் |
Topology(3) |
105. பிணைப்பியல்
connectere என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஒன்றாகக் கட்டுதல். con- என்றால் ஒன்றாக என்றும் nectere கட்டுதல் என்றும் பொருள்கள். முதலில் இணைப்பியல் எனக் குறித்திருந்தேன். ஆனால் இணைப்பியல் என்பது Topology (3) எனக் குறிப்பதால் பிணைப்பியல் என மாற்றி உள்ளேன். |
Connectology |
106. இணை முரணியல் |
Dialectics |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
Leave a Reply