department_of_sciences01

  1. வானியல் – astronomy : ஞாயிறு பிற கோள்கள் விண்மீன்கள் முதலிய வானில் உள்ளவற்றை ஆராயும் துறை
  2. வான இயற்பியல் –   astrophysics : விண்வெளியில் உள்ளவற்றின் இயல்பையும் அவற்றால் காற்றுவெளியில் நேரும் நிகழ்வுகளையும் ஆராயும் துறை
  3. உயிரிய வேதியியல் –   biochemistry: உயிரின் வேதிச்செயல்பாடுகளையும் வேதிப்பொருள்களையும் ஆராயும் துறை.
  4. உயிரிய வேதி வகைப்பாட்டியல் –   biochemical taxonomy: வேதிப்பண்புகளின் அடிப்படையில் உயிரிகளைப் பாகுபாடு செய்யும் ஆய்வுத் துறை.
  5. உயிரிய மின்னணுவியல் – bio electronics : உடலில் மின்னணுக் கருவி அமைப்புகளைப் பதிய வைத்து நலப்படுத்துவதை ஆராயும் துறை.
  6. உயிரியப் பொறியியல் – bioengineering : குறைபாடுள்ள அல்லது அகற்றப்பட்ட உடல் உறுப்புகளை ஈடு செய்யும் வகையில் வடிவமைத்து உருவாக்கப்படும் கருவிகளை ஆராயும் துறை.
  7. புவி உயிர்ப் பரவியல் – bio geography: பயிரினங்களும் உயிரினங்களும் பரவி இருப்பதை ஆராயும் துறை.
  8. உயிரியல் – biology: உயிரிகளை ஆராயும் அடிப்படை அறிவியல்.
  9. உயிரிய இயற்பியல் – biophysics: உயிரியலின் இயற்பியல் நிலைகளை ஆராயும் துறை.
  10. உயிரியத்தொழில் நுட்ப இயல் – biotechnology: நுண்ணுயிர்கள் அது உண்டாக்கும் நொதிகளைத் தொழிற்சாலைகளில் பயன்படுத்துவது குறித்து ஆராயும் துறை.

 

. இலக்குவனார் திருவள்ளுவன்