nebulakalaicho,_thelivoam01

27. முகிலம் – nebula

குறுங்கோள் வகைகளையும் நம்மிடம் பழங்காலந்தொட்டு நிலவும் சொற்களின் அடிப்படையில் பின்வருமாறு மீட்டுருவாக்கம் செய்வதே எளிமையாக உள்ளது.

கார்பன் என்றால் கரியம், கரி, (வேளா.) கரிமம்( பொறி., சுற்., மீனி., மனை.) கார்பன் (சுற்.) எனக் கூறுகின்றனர். கரி(23) என்பதன் அடிப்படையில் கரியம் மிகுதியாக உள்ளது கரிமி எனலாம்.

இரும்பு(29) என்பதன்அடிப்படையில்இரும்பு மிகுதியாக உள்ளது இரும்பி எனலாம்.

மாழை மிகுதியாக உள்ளது மாழையம்

வெண் (254), செம்(359), வெள்ளிடை(1) என்னும் சொற்களின் அடிப்படையில் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

வெண்மை நிறமானது வெண்மி

செம்மை நிறமானது செம்மி

வெள்ளிப்பாதையின் இடையில் உழலுவது வெள்ளிடை

செவ்வாய்ப்பாதை இடையில் உழலுவது செவ்விடை

புவிப்பாதை இடையில் உழலுவது புவியிடை

நெபுலா(nebula) என்னும் சொல்லிற்கு விண்முகில் (ஒளிர்மீன்முகில்)& வளிமுகிற்படலம்(வானி.), விண்மீன் முகிற்படலம்(பொறி), மீன்வெடிமுகில் (சூழ.) வளிம முகிற்படலம்(புவி.), ஒண் முகிற்படலம் & விழிமேகப்படலம்(மனை),   விண்மீன்படலம்(கண.) எனப் பலவாறாகப் பயன்படுத்துகின்றனர். நெபுலா எனில் இலத்தீன் மொழியில் முகில்(118) என்னும் பொருளாகும். துகள், வளி முதலான பலவற்றால் இணைந்து ஒளிரும் இதனை ஒளிமுகிலம் எனக் குறிப்பிட்டுச் சுருக்கமாக முகிலம் என்று ‌ சொல்லலாம்.

முகிலம் – nebula

முகிலங்கள்- nebulae

எதிர் ஒளிப்பு முகிலம் – reflection nebulae

ஒளிகவர் முகிலம் -absuption nebulae

ஒளிஉமிழ் முகிலம் -emission nebulae

 – இலக்குவனார் திருவள்ளுவன்