சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 791 – 796
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 787 – 790 – தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 791 – 796
(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
791.Crane – ஓந்தி
Crane – ஓந்தி
792. Share speculators – பங்கு எதிர்பார்போர்
Share Speculators – பங்கு எதிர்பார்ப்போர்★
793.Attraction – ஒட்டுநிலை
794.Repulsion – ஒட்டாநிலை
‘நட்பெழுத்து’, ‘பகை எழுத்து’ என வரும் பெயர்கள், சிவஞான யோகிகள் கண்ட குறியீடுகளாகும். இந்நட்பும் பகையும், எழுத்துகளின் ஒட்டு நிலையும் (Attraction) ஒட்டா நிலையும் (Repulsion)மாம் இயல்பேயாதலின், இவ்வியல்பை, ஆசிரியர் தொல்காப்பியனார், எழுத்துகளை எடுத்துக்கூறும் நூன்மரபிலேயே அடக்கிக் கூறியுள்ளார்.
நூல் : பொருள் மலர் (1937)
(திரு. பண்டிதர் கா. நமச்சிவாய முதலியார் அவர்களது அறுபதாம் ஆண்டு நிறைவிழா வெளியீடு)
கட்டுரை : பழைய சூத்திரத்திற்குப் புதிய உரை
கட்டுரையாசிரியர் : இ. டி. இராசேசுவரி, எம்.ஏ., எல்.டி.,
★
795. Potassium – மரஉப்பு
மரஉப்பு : அரிசியில் குறைவாக இருப்பதால் அது பஞ்சு(பஞ்ச்) என்பவர் சொல்லுவது போல் தசைகளை உசுணப்படுத்தாமலும் உறுத்தாமலும் இருக்கிறது. மேலும் மூத்திரப்பை வேலை செய்து தள்ளும் மலபாகம் குறைவாக இருக்கிறது.
நூல் : ஆரோக்கியமும் தீர்க்காயுளும் (1937), பக்கம் :32,
நூலாசிரியர் : சுவாமி எ. கே. பாண்டுரங்கம்
★
796.இராமன் – அழகன்
அழகன் – இராமன் என்னும் வடசொல்லின் தனித்தமிழ் மொழி பெயர்ப்பு.
நூல் : கதிர்காமப் பிள்ளைத்தமிழ் (1937), பக்கம் – 101
நூலாசிரியர் : சிவங். கருணாலய பாண்டியப் புலவர்
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply