மாணிக்கவாசகம்பள்ளி, அறிவியல்கண்காட்சி05 ; ariviyalkankaatchi05

மாணிக்கவாசகம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தேவகோட்டை:  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

   கண்காட்சிக்கு வந்தவர்களைப் பள்ளித்தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் வரவேற்றார்.

  தேவகோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இலெட்சுமி தேவி தலைமை தாங்கிக் கண்காட்சியைத் தொடக்கி வைத்தார்.

  அறிவியல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் பெரியசாமி, தேவகோட்டை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கண்காட்சியில் பாய்ம அழுத்த விதி(பெர்னோலி கோட்பாடு), பகல் – இரவு மாதிரி, தனி ஊசல், வளியழுத்தமானி(மானோ மீட்டர்), முழு அக எதிரொலிப்பு, கோணங்களின் பிம்பம், ஒத்த அதிர்வுகள், வளைவுப்பாதை- நேர்கோட்டுப் பாதை, மணி-கயிறு மாதிரி, கோள்களின் இயக்கம், ஆடிகளின் வகை, பல் மாதிரி, சிறுநீரகம், நீர் மூழ்கிக் கப்பல்  முதலான எழுபதுக்கும்  மேற்பட்ட அறிவியல் தொடர்பான  கருவிகள் செயல்பாட்டுடன்  செய்து காண்பிக்கப்பட்டன. கண்ணங்குடி, தேவகோட்டை ஒன்றியப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள், தேவகோட்டை பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவிகள், ஆறாவது  தொகுதி நகராட்சி உயர் நிலைப் பள்ளி மாணவர்கள்  முதலிய 7௦௦ க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், பல பள்ளிகளின் ஆசிரியர்கள்  பார்வையிட்டுச் சென்றனர்.

  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளத்தூர் அ.மு.மு.அறக்கட்டளையும், அகத்தியா  நிறுவனமும் இணைந்து செய்து இருந்தனர்.

 அகத்தியா  நிறுவன ஆசிரியர்கள் மகேசு, கவியரசு, முத்துச் செல்வன் ஆகியோர் மாணவர்களுக்குப் பயற்சிகள் அளித்தனர்.