வெருளி நோய்கள் 1621-1625 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1616-1620 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1621-1625
- பருவெளி வெருளி – Diastimaphobia
பருவெளி(physical space) குறித்த வரம்பற்ற பேரச்சம் இயல் வெளி வெருளி.
00
- பல தலை விலங்கு வெருளி-Hydraphobia(2)
பலதலை விலங்கு(many-headed monster) மீதான அளவுகடந்த பேரச்சம் பல தலை விலங்கு வெருளி.
00
- பலகணி வெருளி – Defenestraphobia
பலகணி(window) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பலகணி வெருளி.
சன்னல் என்பது போர்த்துக்கீசியச் சொல். காலதர், சாளரம், பலகணி முதலியவையே தமிழ்ச்சொற்கள்.
00
- பல் துரப்பண வெருளி – Dentodrapanophobia
பற்றுளைப்பிக் கருவியாகிய பல் துரப்பணம் (dental drill) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பல் துரப்பண வெருளி.
000
1625. பல் வல்லுநர் வெருளி – Dentohygienophobia
பல் நல வல்லுநர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பல் வல்லுநர் வெருளி
காண்க: பல்மருத்துவ வெருளி-Dentophobia/Odontophobia
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5


Leave a Reply