(தமிழ்ச்சொல்லாக்கம் 256-266 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் : 267 – 273

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

267. DEG – நீண்ட சதை

மன்னன் வருகிறான் என்பது கேட்டுணர்ந்த இராசகுமாரத்தி தனக்கு நேரக்கூடிய அகெளரவம் ஒன்றையே பெரிதெனக்கருதித் தன் ஆசை மணாளனை, ஆங்கிருந்த (DEG) என்ற நீண்ட சமையல் பாத்திரத்தில் புகுந்து மறைத்தாள்.

இதழ் :           இதழ் செந்தமிழ் (1910) தொகுதி – 8. பகுதி – 10 சாதாரண ௵ ஆவணி ௴

கட்டுரை     :           (இ)லெபன்னிசா

கட்டுரையாசிரியர்        :           வீ. சுப்பிரமணிய (ஐயர்) (தமிழ்ப் பண்டிதர்)

***                 

268. Cheeks – கதுப்புகள்

குசாக்கிர புத்தியுள்ள மேனாட்டு வித்துவானொருவர் இம் முத்தமிடும் வாடிக்கை பூர்வத்தில், மனிதர்கள் மாமிச பட்சணிகளாய் (Cannibals) இருந்த காலத்தில், புருசன்தான் பெண்ணாருத்தியினிடம் கொண்ட விசேடப் பிரியத்தை அவளுக்குச் செவ்வனே தெரிவிப்பதற்காகத் தன்னுடைய பற்களினால் அவள் உதடுகளிலும் கதுப்புகளிலும் (Cheeks) கடித்து, அவளை (இ)ரசமுள்ள மாம்பழம் போல விழுங்க வேண்டுமென்ற தன்னுடைய அவாவைக் காட்டும் அவ்வாடிக்கையிலிருந்து மாறி நாகரீகத்தினால் உண்டான அனுசுடானமே இம் முத்தமிடுதல் எனக் கூறுகின்றார்.

இதழ் :           செந்தமிழ் (1910) தொகுதி – 8, பகுதி 10, பக்கம் 508

கட்டுரை     :           முத்தமிடலின் வரலாறு

கட்டுரையாசிரியர்        :           வீ. சுப்பிரமணிய ஐயர் (தமிழ்ப் பண்டிதர்)

***

269. அங்குசுட்டம்      —        பெருவிரல்

270. தர்சனி       —        சுண்டுவிரல்

271. மத்தியமம் —        நடுவிரல்

272. அனாமிகை            —        ஆழிவிரல்

273. கனிசுட்டம்            —        கடை விரல்

நூல்      :           கொக்கோலம் (1910) (கொக்கோகம் என்பதன் அச்சுப்பிழையாக இருக்கலாம்.)

அத்தியாயம்     :           5, சுரதலட்சணம், பக்கம் – 163

உரையாசிரியர்  :           கொற்றமங்கலம் இராமசாமிப்பிள்ளை

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்