தலவாக்கலையில் மே நாள் – மலையக மக்கள் முன்னணித் தீர்மானம்

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மே நாளைத்   தலவாக்கலையில் நடாத்துவதற்கு    மலையக மக்கள் முன்னணித் தீர்மானம்!   தொழிலாளர்  நாளை முன்னிட்டுக் கொண்டாடப்படும் மே நாள் நிகழ்வினை   இம்முறை தலவாக்கலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் கொண்டாடுவதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காகச் சிறப்புக் கூட்டம் (பங்குனி 27, ஏப்.09) தலவாக்கலையில் நடைபெற்றது. இதில் மலையக மக்கள் முண்ணணியின் தலைவரும் கல்வி  அமைச்சருமான வே. இராதாகிருட்டிணன், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமான ஏ. இலாரன்சு, நிதிச்செயலாளர் யு. அரவிந்தகுமார் …

புலம்பெயர்ந்தோர் நாடு திரும்புவது நல்லதில்லை – சீ.வி.கே.சிவஞானம்

புலம்பெயர்ந்தோர் நாடு திரும்புவது நல்லதில்லை! – சீ.வி.கே.சிவஞானம் “வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் நாடு திரும்புவதற்கான பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படவில்லை” என்று வட மாகாண அவையின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.   புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் நாடு திரும்பி முதலீட்டு, வணிகச் செயல்பாடுகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் கோரியுள்ளது. ஆனால், இதற்கான பொருத்தமான சூழல் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இஃது அரசின் நேர்மை மீது ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.   எனவே, புலம்பெயர்ந்த மக்கள் யாரும் நாடு திரும்பவோ, இலங்கையில் வணிக முயற்சிகளில் ஈடுபடவோ விரும்ப மாட்டார்கள்…

திண்டிவனம்அருகே (கீழ்பசார்) 12 ஆம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

திண்டிவனம்அருகே (கீழ்பசார்) 12 ஆம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு  திண்டிவனம் அருகே, கீழ்ப்பசார்  ஊரி்ல், சிதிலமடைந்த சிவன் கோவிலைத் திருப்பணிக்காக தோண்டிய போது, 12 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. சிவன் கோவில் திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ளது, கீழ்பசார் ஊர். இங்கு மிகவும் சிதிலமடைந்த நிலையில், சிவன் கோவில் உள்ளது.   இக்கோவிலை மீளமைத்துத்  திருப்பணி செய்வதற்காக ஊர் மக்கள் தோண்டிய போது, தொல்லியல் ஆய்வாளர் கோ.உத்திராடம்  17 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தார்….

தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே! – தமிழ் சிவா

தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே!   சிறிய வீட்டின் சிதைந்த தூண்பற்றி உன்மகன் எங்கே என்று கேட்பவனே! என்மகன் எங்கிருப் பானென்று அறிவேன். நீங்கள் நீக்கமறத் திறந்து வைத்த சாய்க்கடை மதுவின் முன்பே வீழ்ந்து வாய்க்கடை எச்சில் வடியக் கிடப்பான். வௌவால் தங்கிய குகையாய், அய்யோ ஈன்ற வயிறோ இதுவே, அடேய்! மீண்டும் மீண்டும் வேண்டி யழைத்துக் கும்பிடு போட்டுத் தூக்கி வந்து கையில் புட்டியும் கறிச்சோறும் தந்தால் தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே! திணை – வாகை, துறை – ஆள்பிடித்தல் /…

“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 1/3 – கி. வெங்கட்ராமன்

“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 1/3   “தேசியம் குறித்த தருக்கத்தைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லுங்கள்” என்று பாரதிய சனதாக் கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் அமித்சா தங்கள் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கிறார். அக்கட்சியின் அனைத்திந்தியச் செயற்குழுக் கூட்டம் கடந்த 2016 மார்ச்சு 20 – 21 நாட்களில் நடந்தபோது, முதன்மைத் தீர்மானமாகவும் இதுவே சொல்லப்பட்டது.   “தேசியம் குறித்த தருக்கத்தில் நாம் முதல் சுற்று வெற்றியடைந்திருக்கிறோம்’’ என இந்திய நிதியமைச்சர் அருண் செட்லி மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார். கூர்ந்து கவனித்தால் இஃது உண்மையென்பதும் புலப்படும்.   அதைவிட இந்துத்துவம் என்பது வன்மையான இந்தியம் என்றும், இந்தியம் என்பது மென்மையான…

கற்றால் தீரும் இழிதகைமை

கற்றால் தீரும் இழிதகைமை எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும் மொழித்திறன் முட்டறுத்த நல்லோன் முதல்நூல் பொருள் உணர்ந்து கட்டறுத்து வீடு பெறும். பரிமேலழகர் மேற்கோள் பாடல்

தமிழ்நாட்டுக் கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு நீக்கம்! – உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டுக் கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு நீக்கம்!   தமிழ்நாட்டில் கோயில்களுக்குச் செல்வோருக்கு ஆடைக் கட்டுப்பாடு போட்டுத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் 4.4.2016 அன்று நீக்கி உத்தரவிட்டது.   திருச்சி அக்கியம்பட்டி எனும் ஊரிலுள்ள கோயிலில், நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த ஒப்புதல் கோரிச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விண்ணப்பம் தரப்பட்டது.   அந்த விண்ணப்பத்தை 2015 நவம்பரில் உசாவிய தனி நீதிபதி, தமிழ்நாடு முழுவதும் 2016 சனவரி 1-ஆம் நாள் முதல் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான…

‘இலக்கியவீதி’யின் ‘மறுவாசிப்பில் கிருத்திகா’ – கடலோடி நரசய்யா

அன்புடையீர்! வணக்கம். நலனே விளைய வேண்டுகிறோம். ‘இலக்கியவீதி‘யின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்,    (பங்குனி 30, 2047 /  12.04.2016 செவ்வாய்க்கிழமை   மாலை 06.30 மணிக்கு,  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ) ‘மறுவாசிப்பில் கிருத்திகா‘ நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். என்றென்றும் அன்புடன்- இலக்கியவீதி இனியவன்.

தமிழ் அறியாதவர்களே காதலைப் பழிப்பார்கள்! அன்றே சொன்னது பரிபாடல்!

    : தமிழ் அறியாதவர்களே காதலைப் பழிப்பார்கள்! அன்றே சொன்னது பரிபாடல்!   தள்ளாப் பொருளியல்பில் தண்டமிழாய் வந்திலார்             கொள்ளாரிக் குன்று பயன்    (பரிபாடல்: 9)   “தள்ள வாராக் காதல் பொருளின் இலக்கணம் கூறும் தமிழை ஆராயாதவரே, மலையிடத்து நிகழும் களவொழுக்கத்தை ஓர் ஒழுக்கமென ஏற்றுக்கொள்ளார்” என்று குன்றம் பூதனார் காரணம் கூறிக் கழறுவர். பிற மொழிகள் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் உடையனவேயன்றி, மக்களின் வாழ்வை ஆராய்ந்த பொருளிலக்கணம் கண்டவையல்ல. தமிழ் மொழியோ எனின், முவ்விலக்கணமும் நிறைந்தது. தமிழின் பொருளிலக்கணத்தைக் கல்லாத…

மொழியே விழி! – கவினப்பன் தமிழன்

மொழியே விழி!   மொழியென்ப மாந்தர்கட் கெல்லாங் கரவா விழியென்று கொள்ளப் படும்.   மறைக்காத பார்வையைப் போன்றதாயின், அது மாந்த இனத்தவருக்கு மொழியாம் என்க.   உடம்பை யியக்கு முயிர்போல மாந்த ருணர்வை யியக்கு மொழி.   உயிரானது உடம்பை இயக்குவது போன்று, மொழியானது மாந்தரின் உணர்வை இயக்குவதாகும்.   உணர்வேத்தி யுள்ளந் துலக்கி யொழுங்கிற் கணைகாத்தே யாற்று மொழி.   உணர்வை ஏற்றி, உள்ளத்தைத் துலக்கி, ஒழுங்கிற்குக் காவலாய் அமையும் ஒழுக்கமே மொழி.   குழியொக்குங் கொள்ளுநீர் குன்று விளக்கம் மொழியொக்குங்…

நாடாளும் முத்தம்மா – நா.வானமாமலை

நாடாளும் முத்தம்மா   முத்தாரம்மன் தென்பாண்டி நாட்டில் உழவர் பெருமக்களால் வணங்கப்படும் தெய்வம். சில சிற்றூர்களில் இவளுக்குப் பெரிய கோவிலும் தேரும் திருவிழாவும் உண்டு. இவள் பிறப்பு, முத்தாரம்மன் வில்லுப்பாட்டில் சொல்லப்படுகிறது. ஏழ்கடலுக்கும் அப்பாலுள்ள, மணிநாகப் புற்றிலுள்ள நாகம் மூன்று முட்டைகளிட்டது. பார்வதியின் அருளால் முட்டைகளிலிருந்து பெண்கள் மூவர் தோன்றினர். அவர்கள் பிரம்மராக்கு சக்தி, சின்னமுத்தார், பெரிய முத்தார் என்பவர்கள். அவர்கள் மூவரும் தவம் செய்து சக்தி முனியின் அருளால் குழந்தையைப் பெற்றார்கள். அனைவரையும் அழைத்துக் கொண்டு போய்க் கயிலையில் சிவபெருமானை வணங்கினர். நாட்டிலுள்ள…