திருவள்ளுவரும் கன்ஃபூசியசும் – விருதாளர் தைவான் யூசி உரை

ஒன்பான் விருதுகளை அறிவித்த தமிழக அரசு திருவள்ளுவர் நாளன்று விருதுகள் வழங்கப்பெறும் என்றும் அறிவித்தது. பின்னர் இவ்விருதுகள் குடியரசு நாளன்று வழங்கப்பெறும் என்று அறிவித்தது. எனினும் திருவள்ளுவர் விருது மட்டும் திருவள்ளுவர் நாளன்றே வழங்கப் பெறும் என அறிவித்தது. இதன்படி தை 2 ஆம் நாளான சனவரி 16 அன்று திருவள்ளுவர் விருது, திருக்குறளைச் சீன மொழியில் மொழிபெயர்த்த தைவான் நாட்டுக் கவிஞர் யூசிக்கு வழங்கப்பெற்றது.  தமிழக நிதி-பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரூபாய் நூறாயிரத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரைச் சான்று ஆகியவற்றை…

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கவலியுறுத்துவேன் – வாசன்

திருவள்ளுவர்  நாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் புகழ்பாடும் தமிழ் இசை நிகழ்ச்சி புதன்கிழமை (தை 2, 2045/ சனவரி 15.2014) நடந்தது. இதில் 133 தமிழ் இசைவாணர்க்ள பங்கேற்று, இசை நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் பேசியதாவது: “உலகப் பொதுமறையான திருக்குறள், உலகின் புனித நூல்களான குர் ஆன் மற்றும் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்ட நூலாகும். அதனால்தான் இனம்,  மொழிகளைத் தாண்டி உலகப் பொதுமறையாகத் திருக்குறள் விளங்குகிறது. அனைத்து நாட்டு…

வள்ளுவர் வகுத்த அரசியல் 2. நல் அரசு இயல்

   – –குறள்நெறிக் காவலர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (29 திசம்பர் 2013   இதழ்த் தொடர்ச்சி)  அ. செங்கோன்மை  நாடு, அதைக் காப்பதற்குரிய அரண், படை, பொருள் ஆயவைபற்றி அறிந்தோம். இனி நாட்டில் ஆட்சிமுறை எவ்வாறு  இருத்தல் வேண்டும் என்று ஆராய்வோம். மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ஆட்சி எப்படியிருக்கும், தீமை பயக்கும் ஆட்சி எது, ஆட்சி புரிவோர் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்று தெரிதல் வேண்டும். நன்மை பயக்கும் ஆட்சியைச் செங்கோன்மை என்பர். செங்கோல் என்பது வளைவில்லாத கோல். வளைவு இல்லாத கோல்போல் ஆட்சியும்…

கச்சத்தீவை விட்டுக்கொடுப்பதா? மத்திய அமைச்சர் வாசன் கடுஞ்சினம்!

சென்னை, தண்டையார்பேட்டை, துறைமுகக் குடியிருப்பில், முன்னாள் துணைத் தலைமையாளர் பாபு செகசீவன்இராம் சிலை திறப்பு விழா  சனவரி 12,2014 அன்று   நடைபெற்றது. அதில் பங்கேற்ற மத்தியக் கப்பல் துறை அமைச்சர், வாசன், இந்தியச் சிறைகளில் உள்ள, இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டும்’ என, இலங்கை அமைச்சர் கூறியிருப்பது  நல்லிணக்கப் பேச்சிற்கு  உகந்ததல்ல என்றும்   கச்சத்தீவை விட்டு கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும்  ஆர்ப்பரிப்புடன் கூறினார். ஆனால், மத்திய அரசு சிங்கள மீனவர்களை விடுவித்துள்ளது. கச்சத்தீவிலும் எதிரான நிலைப்பாடுதான் உள்ளது. வாசன் தனிக்கட்சிக்குப் பாதை வகுப்பதற்காக…

மூளையே மூலதனம் – அறிவுநிதி விருது

 – தன்னம்பிக்கைத் தொடர் நிகழ்ச்சி                 “2009 இல் ‘இலக்கு ‘ என்னும் பல்கலைப் பயிலரங்கம் நிறுவி ஓவியம், கையெழுத்து எனக் குழந்தைகளுக்கான வழக்கமான பயிற்சிகளுடன் நினைவாற்றல், தன்னம்பிக்கை ஆளுமைத் திறன்,  குமுகாயச் சிந்தனை ஆகிய பிரிவுகளிலும் கோடைக்கால முகாம்களை நடத்தினோம், தற்போது இதன் விரிவாக்கமாக வறுமை, இயலாமை, வழிகாட்டுதல் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் தடம் மாறும் இளைஞர்களுக்காக ‘மூளையே மூலதனம்‘ என்னும் பெயரில் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு தலைப்புகளில் அறிவுசாரர் பெருமக்களின் எழுச்சியூட்டும் தன்னம்பிக்கை உரைவீச்சுகளுக்கு…

சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி

 சீன வானொலி தொகுத்துள்ள “சீனம்-அன்னிய மொழி கலைச்சொல் அகராதிகள்” எனத் தமிழ், இந்தி, நேபாளம் முதலான 18  மொழி கலைச்சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளது.  இதில்  குறிப்பிடத்தகுந்ததாகச் சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி விளங்குகிறது.  வீட்டு வசதி, பொழுதுபோக்கு , பண்பாடு, கலை, பொது பாதுகாப்பு, சுற்றுச்சூழல், காப்புறுதி, நிதி, நாணயம், சந்தை ஆகிய துறைகளைச் சேர்ந்த 27ஆயிரம் சொற்கள், சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதியில் தொகுக்கப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  சீன வானொலி தமிழ்ப் பிரிவின் தலைவர் கலைமகள் தொகுத்த இந்த அகராதி, தமிழ்ப் பிரிவின் முதல் சீனம்-தமிழ் கலைச்சொல்…

தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் – 2045 (2014)

  கடந்த 25 ஆண்டுகளாகத், தமிழ் – தமிழர் உரிமைச் சிக்கல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் “தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்” மாதமிருமுறை இதழ் சார்பில் வழக்கம்போல் ‘பொங்கல் சிறப்பு மலர்’ வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்களுக்காகப் போராடும் பல்வேறு கட்சி, இயக்கத் தலைவர்களும், தமிழறிஞர்களும்,  குமுகாயச் செயற்பாட்டாளர்களும் இயற்றியப் படைப்புகள்  முந்தைய ஆண்டுகள்போல், இம்மலரிலும் வெளியிடப்பட்டுள்ளன.   சென்னையில் நடைபெற்று வரும் 37ஆவது புத்தகக் காட்சியின், 234ஆவது அரங்கில் அமைந்துள்ள தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் அரங்கில், இதழ் ஆசிரியரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித்…

தொல்காப்பிய விளக்கம் – 9 (எழுத்ததிகாரம்)

தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நன்னூலாசிரியர், நெட்டெழுத்தே வேண்டியளவு நீண்டி ஒலிக்கும் என்றும் அதன் அடையாளமாக நெட்டெழுத்தின் பின்னர் அதன் இனக்குற்றெழுத்துத் தோன்றி நிற்கும் என்றும் கூறியுள்ளார். இக்கருத்து, தொல்காப்பியத்திற்கு மாறுபட்டது.   தொல்காப்பியர் முன்பு, மூன்று மாத்திரையாக ஒலித்தல் ஓரெழுத்துக்குக் கிடையாது என்றும் (நூற்பா 5) மாத்திரையை நீ்ட்டிச் சொல்ல வேண்டிய இடங்களில் மாத்திரைக்கேற்ப எழுத்துகளைச் சேர்த்து ஒலித்தல் வேண்டும் என்றும் (நூற்பா 6) கூறியுள்ளமை நோக்கத்தக்கது.   42.   ஐ, ஔ, என்னும் ஆயீரெழுத்திற்கு…

மாமூலனார் பாடல்கள் – 9

 –சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்   (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) “நோயிலராக நம் காதலர்” -தலைவி இங்கிலாந்தில் காதலர் இருவர் கருத்தொருமித்து கணவனும் மனைவியுமாக இல்லற வாழ்க்கை நடத்தி வந்தனர். உலகப் பெரும்போர் தொடங்கிற்று. காதலியை விட்டு விட்டுக் காதலன் போர் முனைக்குச் சென்றான். காதலி காதலனிடமிருந்து வரும் மடல்களால்  மனம் ஆறியிருந்தாள். சில திங்கள் சென்றன; மடல்களும் நின்றுவிட்டன. மடல்கள் வரும் வரும் என்று ஏங்கிக் கருத்தழிந்து நின்றனள். போர்முனையிலிருந்து யாதொரு செய்தியும் அவளை எட்டவில்லை. ஆண்டுகள் இரண்டும் சென்றன….

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 8

–    தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (29 திசம்பர் 2013 இதழ்த் தொடர்ச்சி) பேராசிரியர் எம்.எசு. பூரணலிங்கம்,  “பண்பாடு மிக்க தமிழர் தம் கடவுளை, மேனிலையில் உள்ள கொடிநிலை, பற்றற்றக் கந்தழி, அருள் வழங்கும் வள்ளி என மூவகையாகக் கண்டனர். சுருங்கக்கூறின், தம்மை உருவாக்கி ஆள்பவருக்கு, முதன்மைப் பண்புகளாக எங்கும் உளதாகும் தன்மை, பற்றின்மை, அருள் முதலியவற்றை  எடுத்தியம்பினர் எனலாம்.” (தொல்காப்பியம் பொருளதிகாரம் விளக்கவுரை பக்கம் 335) (தமிழ் இந்தியா பக்கம் 53.) பால்வரைதெய்வம் (பொருள். 57) என்று சொல்வதிலிருந்து, கடவுள் ஊழி்னை…

அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்!

  தமிழர்திருநாளாம் பொங்கல் நன்னாளில் அனைவருக்கும் அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்! இனப்படுகொலைகளு்க்கும் நிலப்பறிப்பிற்கும் பிற துயரங்களுக்கும் ஆளாகி வரும் தமிழ் ஈழ மக்கள், 01.01.1600  இல் பெற்றிருந்த நிலப்பரப்பைப் பெற்றுத் தனியரசாய்த்திகழும் நாளே நமக்கு மகிழ்வு தரும் நாள் என்பதில் ஐயமில்லை. எனினும் துயரத்தை வென்றெடுக்க, ஊக்க உணர்ச்சி பெற, இன எழுச்சி பெற, இடையிடையே வரும் பொங்கற் புது நாள் போன்றன உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  எனவே உலகத் தமிழர்கள் உவக்கும் வண்ணம் தமிழ் ஈழ விடுதலை விரைவில் அமைய…

என்றைக்குமே இன்பம் நிலைகொள்ள வேண்டும்

செங்கதிர் எழுந்ததடி எங்கும் ஒளி ஆனதடி பொங்கல்திரு நாளடியே என்னருந் தோழி — அதோ பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந்தோழி தெங்கில்இளம் பாளையைப் போல் செந்நெல்அறுத் தார் உழவர் அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி — அவர் சங்கத் தமிழ் பாடிப்பாடி என்னருந்தோழி. கட்டடித்தே நெல்லளந்தே கட்டை வண்டி ஏற்றுகின்றார் தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி — அவர் தோளை வையம் வாழ்த்திற்றடி என்னருந்தோழி. கொட்டு முழக் கோடு நெல்லைக் குற்றுகின்ற மாத ரெல்லாம் பட்டுடை இழுத்துக் கட்டி என்னருந் தோழி — பாடும் பாட்டெல்லாம்…