முதல்நூலும் முதல்வனும் – திருக்குறளார் வீ.முனுசாமி
1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் ‘அனைத்தறன்’ ஆகுல நீர பிற. 2. அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான். 3. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது. உலகின் பல்வேறு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ள நூல்களுக்கெல்லாம் முதன்மையாக இருப்பது திருவள்ளுவர் அருளிய திருக்குறளாகும். காலத்தினால் சொல்லுவதென்பதல்லாமல், கருத்தினாலும் சொல்லப்படுவதாகின்றது. உலகில் காணப்படுகின்ற நூல்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையினையே கருத்துட்கொண்டு எழுதப்பட்டுள்ளன. தெய்வீகம், பொருளாதாரம், அரசியல், காதல் வாழ்க்கை, இல்லறம், துறவறம் இவ்வாறாக ஒவ்வொன்றில் நின்று எழுந்த…
அமெரிக்கத் தீர்மானம் அமுது தடவிய நஞ்சு – வைகோ குற்றச்சாட்டு
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் அமெரிக்கத் தீர்மானத்தை அமுது தடவிய நஞ்சு எனக் கடிந்துரைத்துள்ளார். அமெரிக்கா, பிரித்தானியம், மாண்டிநிரோ, மாசிடோனியா, மொரீசியசு ஆகிய ஐந்து நாடுகள் மனித உரிமைக் குழுவில் மார்ச்சு 3 அன்று ஒரு தீர்மானத்தை அளித்துள்ளன. அமெரிக்க அரசு முன்நின்று தயாரித்துள்ள இத்தீர்மானம் மிகவும் வஞ்சகமானது. வரிக்கு வரி திரும்பத் திரும்பப் படித்து அதிர்ச்சியுற்றேன். சிங்கள அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்து விட்டதாகவும், ஆனாலும் அதை அலட்சியப்படுத்துகிறோம் என்று சிங்கள அரசு கூறுவது, தமிழர்களுக்கான நீதியை…
கவிதை உறவு இலக்கியப் பரிசுப் போட்டி
கவிதை உறவு இலக்கியப் பரிசுகள் பெற ஏப்பிரல் 10-ஆம் நாளுக்குள் புத்தகங்களை அனுப்பவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிப்பிரிவுகள் பரிசுகள் விவரம் வருமாறு:- மரபுக் கவிதை : துரைசாமி(நாடார்) -இராசாம்மாள் நினைவுப் பரிசு புதுக்கவிதை : ஊர்வசி செல்வராசு நினைவுப் பரிசு மனிதநேயம்-வாழ்வியல் : சுப்பையா – தங்கம்மாள் நினைவுப் பரிசு சிறுகதை : சு. சமுத்திரம் நினைவுப் பரிசு இலக்கிய கட்டுரைகள் : முனைவர் மு. வரதராசனார் நினைவுப் பரிசு ஆய்வு- பொதுக் கட்டுரைகள் : முனைவர் சி. இலக்குவனார் நினைவுப் பரிசு மேலும்…
இலக்குவனார் விழா
திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் இலக்குவனார் முப்பெருவிழாவினைச் சிறப்பாக நடத்தின. மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய 3 நாளும் தமிழ்ப் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப் பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம், நூல்கள் வெளியீட்டு விழா, இலக்கியப் போட்டிகள் என மூன்று நாளும் முப்பெரு விழாக்கள் நடைபெற்றன. ம.தி.தா.இந்துக்கல்லூரி ஆண்டு நூற்றைம்பது கண்ட தொன்மை வளம் சான்ற கல்லூரி….
எழுவர் விடுதலைக்காக மனித நேயர் எழுவர்! சட்ட எதிர்ப்பர், எதிர்ப்பர்!
இராசீவு கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்காகச் சிக்க வைக்கப்பட்ட எழுவரின் மரணத் தண்டனை வாணாள் தண்டனையாக மாற்றப்பட்டு விடுதலையும் அறிவிக்கப்பட்ட சூழலில் காங். அரசு இடைக்காலத் தடை பெற்றுள்ளது. எழுவரின் உடனடி விடுதலையை உலகெங்கும் உள்ள மனித நேயர்கள் வரவேற்கின்றனர். விடுதலைக்கான தடைக்கு எதிராக அறவழிகளில் போராடி வருகின்றனர். அதே நேரம் தலைமைக்குக் கால்கை பிடிப்பதுபோல் போக்குகாட்டும் போலிகள் எதிர்த்து வருகின்றனர். விடுதலையை முழுமனத்துடன் வேண்டி ஆதரிப்போர் ஒருபுறம் இருக்க, ஒரு சாரார் காலங்கடந்த முடிவு என்றும்…
இலக்கிய வீதி – இதயத்தில் வாழும் சூடாமணி
செய்திக்குறிப்புகள் சில
ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. நீதித்துறை முதல் அனைத்து மட்டங்களிலும் ஊழலில் தாண்டவமாடும் இந்தியா: அமெரிக்க நாடாளுமன்றில்அறிக்கை இந்தோநேசியாவில் காநீர்ப்பழத்தை உண்ணும் புனுகுப்பூனையின் கழிவில் வெளியேறும் கொட்டையிலிருந்து உருவாக்கப்படும் காநீர் : 1 குவளை 5,000 உரூபாய் நிதி முறைகேடு தொடர்பாகச் சீக்கிய அமைப்புக்கள் தொடுத்த வழக்கில் இந்தியத் தலைமையாளர் மன்மோகனுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது அமெரிக்க நீதிமன்றம் தேர்தல் நாடகம் : இலங்கைக் கடற்படை மீது, இராமேசுவரம் காவல்நிலையத்தில் கண்துடைப்பு வழக்கு மரபணு மாற்றப்பட்ட…
குறள் நெறி பரப்புக ! – புலவர் இரா. இளங்குமரன்
1. தமிழன் பெருமை உரைத்ததற்குத் தக்க தேதும் உண்டேயோ? அமுதும் எந்தம் மொழி என்றால் ‘‘ஆ ஆ’’ உலகில் எத்துணைப் பேர் அமுத மொழியின் திளைக்கின்றார்? அளக்க வேண்டாம்’’ எனச் சொல்லி உமிழாக் குறையாய்ப் பழிக்கின்றார். உள்ளம் நைய அம்மம்மா! 2. ‘‘ஆண்ட மொழியெம் மொழி’ என்றால் அழகாம் உங்கள் மொழி’யென்று மாண்ட மொழிக்காய் வாழ்வாரும் மட்டம் தட்டப் பார்க்கின்றார்; ஆண்டு வந்த அன்னியரோ ‘‘அடிமை ஆகிக் கிடந்தீரே! வேண்டும் இந்தப் புக’’…
திருக்குறள் வாழ்க்கை நூல் – அறிஞர் முகம்மது சுல்தான் கலை.மு.,சட்.இ.,
வாழ்வின் பயனை மக்கள் அடைவதற்கு வழிகாட்டிகளாக உலகின் பல்வேறு மொழிகளில் பல நூல்கள் உள. அவைகளுள் மூன்று நூல்கள், அவைகளை இயற்றியவர்களின் அறிவுத்திறத்தையும் ஆராய்ச்சி நுணுக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. தாங்கள் எழுதியிருப்பவைகள் எல்லாம் வல்ல கடவுளின் நாதம் அல்லது தொனி அல்லது வெளிப்பாடு என்று இந்த மூன்று நூல்களின் ஆசிரியர்கள் சொல்லவில்லை. தங்களுக்குத் தெய்வ தூதர்களால் அருளப்பட்ட திருவாக்கு என்றும், அவ்வாசிரியர்கள் விளம்பரம் செய்யவில்லை. அம்மூன்று நூல்களும் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் உலக மக்களுக்கு அளிக்கப்பட்டவை. அவை; 1….
விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல: இத்தாலி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
உரோம்: இத்தாலியில் கடந்த 2008– ஆம் ஆண்டு தமிழ்ச் தேசிய செயல் வீரர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி திரட்டி வழங்கினர். இது பன்னாட்டுப் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரானது எனத் தமிழ்த் தேசிய செயல்வீரர்கள் தளையிடப்பட்டனர். அவர்கள் மீது கடந்த 2010–ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் குற்றமற்றவர்கள் என கடந்த 2011–ஆம் ஆண்டில் இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்தின் மூலம் மருத்துவம்,…
என் தாய் – – தமிழ்மகிழ்நன்
அன்பினைக் காட்டி அறிவினைப் புகட்டி அணியெனத் திகழ்பவள் என்தாய்! தென்றலாய் வீசித் தேன்தமிழ் பாடி சிந்தையில் நிறைந்தவள் என்தாய்! மன்றிலில் பெயர்த்தி மாண்புடை பெயரர் மலர்ந்திட மகிழ்பவள் என்தாய்! வென்றிடும் வித்து! விளைநிலம் அவளே விறலவள் தந்தனள் வாழ்க! கனவினும் கடமை கணமதுள் மறவாள் கலங்கரை விளக்கமே என்தாய்! இனம்மொழி நாடு ஈடிலா உயிராய் ஏற்றியே போற்றுவள் என்தாய்! தனக்கென வாழாள் தன்மகார் வாழத் தன்னுயிர்ப் பொருளினைத் தருவாள்! மனமுயிர் மெய்யும் மலரென உருகும் மழலையர் குணமவள் குணமே! சுவைமிகு உணவை நொடியினில் சமைப்பாள்…
தலைவர் நேசமணி மணிமண்டபத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்
தமிழர்களின் குமுகாய, பண்பாட்டு விடுதலைக்காகவும், தமிழகத்தின் தென் எல்லையாக கன்னியாகுமரியைத் தாய்த்தமிழகத்துடன் நிலைத்து வைத்துக் கொள்வதற்காகவும் போராட்டங்கள் நடத்தி ஈகம் செய்தவர் நேசமணி. இதனால் இவர் தலைவர்(மார்சல்) நேசமணி என்றும், குமரித்தந்தை என்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இப்பெருந்தகையாளரின் நினைவைப் போற்றும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 48இலட்சத்து 70 ஆயிரம் உரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலைவர் நேசமணி மணிமண்டபத்தினை, முதலமைச்சர் செல்வி செயலலிதா காணொலிக் காட்சி மூலமாக மாசி 15, தி.பி.2045/ பிப்.27, 2014 அன்று திறந்து வைத்தார். நாகர்கோவில்…
