இலக்குவனார் இலக்கியப் பேரவை – முப்பெருவிழா
அரிக்கமேடு – ஓர் ஆவணம் – கருத்தரங்கம்
இரு நாட்டு மீனவர் பேச்சு – இனப்படுகொலைகளை மறைக்கும் திரை!
இருவர் அல்லது இரு குழுவினர் அல்லது இரு பிரிவினர் அல்லது இரு தரப்பாரிடையே சிக்கலோ மோதலோ எழும் பொழுது அவர்களிடையே ஒற்றுமைப்படுத்தும் சொல்லாடல் நிகழ்த்துவது முறையே. இப்பொழுது சிங்கள மீனவர்களிடையேயும் தமிழக மீனவர்களிடையேயும் ஏற்படுத்தப்படும் பேச்சு அவ்வாறு, எவ்வாறு அமையும்? இரு நாட்டு மீனவர்களும் தத்தம் நாட்டு அறிவுரைகளையும் மீறித் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டனரா? ஆதலின், அவர்களிடையே ஒற்றுமைப்படுத்தும் பேச்சு தேவைப்படுகிறதா? ஆயிரத்தைத் தொடும் அளவு தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது சிங்கள மீனவர்களாலா? பல்லாயிரக்கணக்கானவர்கள் உறுப்பு இழப்புகளுக்கும் உடைமை…
மறைமலை இலக்குவனார் : அமெரிக்காவில் தமிழ்க்கல்வி ஆய்வரங்கம்
பேராசிரியர் ஆண்டர்சன் தம் வகுப்பில் முனைவர் மறைமலை இலக்குவனாரை அறிமுகம் செய்தல்
திருக்குறளில் உருவகம் – 1
-ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி தலைப்புக் குறிப்பு. உருவகம் என்ற சொல்லைப் பொதுவாக ஆங்கிலத்தில் Metaphor என்ற சொல்லின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் பயன்படுத்துதல் வழக்கம். ஆயினும் இக்கட்டுரை முழுவதிலும் இச்சொல் Image என்ற சொல்லிற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் ‘‘காட்சி’’யென்று சொல்லலாம். ஆனால் ‘காட்சி’ யென்றசொல் அகத்தே தோன்றும் உணர்ச்சிக்கு உருக்கொடுக்கும் ஆற்றலை மட்டுமின்றிக் காணப்படும் பொருள் யாவிற்கும் பொதுவான சொல்லாக இருப்பதால், அதை நீக்கி ‘உருவகம்’ என்ற சொல்லையே Image என்பதன் மொழி பெயர்ப்பாகப் பயன்படுத்தியுள்ளேன். முன்னுரை திருவள்ளுவர் இயற்றிய குறள்…
தமிழே! – கவிஞர் தே.ப.பெருமாள்
நிறைவினில் மலர்ந்தொளிரும் தமிழே – என் நெஞ்சத்தில் அமுதாகும் தமிழே! உறவினில் உயிரான தமிழே – என் உணர்வினில் கவிபேசும் தமிழே! ஒழுக்கத்தின் மணம்வீசும் தமிழே – வீர உருவத்தில் கூத்தாடும் தமிழே! விழுப்பத்தின் நலமுரைக்கும் தமிழே – நீதி மேவியே கோலோச்சும் தமிழே! நிலவின் குளிர்பெற்ற தமிழே – கதிர் நிரப்பும் ஒளிபெற்ற தமிழே! மலரின் மெதுவேற்ற தமிழே – தேன் வழங்கும் சுவை கொண்ட தமிழே! மின்னின் விசைகொண்ட தமிழே – கடல் விரிக்கும் திரைமுழக்கத் தமிழே! கன்னி நிறைபொலியுந் தமிழே…
நாயன்மார்கள் – அறுபத்து நால்வர்
-முனைவர். ப. பானுமதி நாயன்மார்கள் அறுபத்து மூவர் என்பது பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் உருவாக்கியுள்ள நெடுங்கணக்கு. அவர்களுள் பெண் நாயன்மார்கள் மூவர். சைவம் தழைக்க உதவிய மகளிர் தொண்டர்கள் என்று காரைக்காலமையார், இசை ஞானியார், மங்கையர்க்கரசியார் ஆகிய மூவரைச் சுட்டுகிறது பெரிய புராணம். நாயன்மார்களின் பட்டியலில் பெண் நாயன்மார்கள் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர். பெரிய புராணத்தில் சுந்தரரை ஈன்றெடுத்த அளவில் இசைஞானியாரின் பெருமை ஒர் பாடலில் (1282) பாடி முடிந்துள்ளது,. மங்கையர்க்கரசியாரின் பெருமை பாண்டிய மன்னன் நின்ற…
வாழ்வு நெறி – முனைவர் வ.சு.ப.மாணிக்கம்.
1. பலருக்குக் ஆராய நூல் வேண்டும், சொற்பொழிவாற்றக் கருத்து வேண்டும் என்பதற்காகத் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றவில்லை. எல்லாரும் வாழ வேண்டும்; எப்படி வாழ்விப்பது என்ற தலையாய நோக்கமே திருக்குறட் பிறப்பிற்குக் காரணம். இந்நோக்கம் எல்லாக் குறள்களிலும் வெளிப்படக் காணலாம். மிகக் கீழானோர்க்கும் உயர்வுண்டு; இயல்பாகவுள்ளவர்க்கும் மேலுயர்வு உண்டு; மிகவுயர்ந்தார்க்கும் மேன்மேலுயுர்ச்சியுண்டு என்ற நம்பிக்கையைத் திருக்குறள் நமக்கு ஊட்டுகின்றது. தாழ்ந்தாரைப் பார்த்துச் சோர்வடைய வேண்டா எனவும், உயர்ந்தாரைப் பார்த்து அமைதியடைய வேண்டா எனவும் ஊக்கமும் ஆக்கமும் தருவது திருக்குறள். எல்லார்க்கும் பொதுவான அறங்களைக் கூறுவது…
மாமூலனார் பாடல்கள் – 11சி.இலக்குவனார்
–சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (சன.26, 2014 இதழ்த் தொடர்ச்சி) தோழி! வருந்தாதே – “வினையே ஆடவர்க்கு உயிர்” என்ற கோட்பாட்டில் சிறந்த உள்ளம் கொண்டவனாய், தலைவன் வெளியூர் சென்றுவிட்டான். தலைவி தலைவன் பிரிவால் நாள்தோறும் மெலிந்து கொண்டே இருந்தாள். தோழி ஒரு நாள் உற்று நோக்கினாள். ஆறுதல் கூறத் தொடங்கிவிட்டாள். “தோழி! வருந்தாதே, குவளை மலர் போன்ற கண்கள் தம் அழகை இழந்துவிட்டனவே, தொய்யில் எழுதி அழகுடன் விளங்கும் உன் தோள்கள் இன்று என்ன இப்படிக் காணப்படுகின்றன?…
தமிழ்க் கூத்தன் – நம்மாழ்வார் படத் திறப்பு நிகழ்வு திருப்பரங்குன்றத்தில்
நீலவானத்தில்…. – கோ.மோ.காந்தி, கலை.மு.,
என் வாழ்வின் நிலை என்னைக் கலங்க வைத்தது. அதற்காக நானே இரங்கினேன். திருமணமாகி எட்டு மாதங்கள் தாம் ஆகின்றன…. ஆனால் அதற்குள்… எவ்வளவு மாறுதல்கள்…! என் நிலையே மாறிவிட்டதுபோல் தோன்றுகின்றதே! எப்படி வளர்ந்தேன்… ஆனால் இப்போது..?? எவ்வளவு மாறிவிட்டேன். என் உள்ளமே அடியோடு மாறிவிட்டதா…?? எத்தனை மாறுதல்கள்!! இப்படி மாறிவிடுவேன் என்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லையே. எல்லாம் கனவு மாதிரித்தான் தோன்றுகிறது ஆம்…! தன் சட்டையைக் கழற்றும் பாம்பு மாதிரி நானும் என் உள்ளத்தின் நிலையை மாற்றியமைத்துக் கொண்டிருக்க வேண்டும்…
இவர்கள் எந்த இனம்? – திருக்குறளார் வீ.முனுசாமி
வாழ்க்கையில் நண்பர்கள் – பகைவர்கள் என்று இரு பிரிவுகளைக் காணுகின்றோம். பகைவர்களைக் காணுகின்றபோது, கண்டுகொள்ளமுடியாத கொடியவர்கள், பகைவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களை நாம் கண்டுகொள்ளவும் முடிவதில்லை; புரிந்துகொள்ளவும் முடிவதில்லை; தெரிந்து கொள்ளவும் முடிவதில்லை. ஏன்? இவர்கள் நம்முடைய நெருங்கிய நண்பர்கள் போலவே பழகி வருகிறார்கள்! இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்? இவர்களெல்லாம் தனிப்பட்டதொரு இனத்தைச் சேர்ந்தவர்கள்! நம்முடைய இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்; இது திருவள்ளுவரின் வாக்கு; விளக்கம். இந்த இனத்தினர் யாருடன் பழகுகின்றனரோ அவருக்கு முடிவான தீங்கினை உண்டாக்குவதற்கே பழகுகின்றனர்; அப்படிப்பட்ட தீங்கினைச் செய்கின்ற…
