குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்றக் கும்பல்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்றக் கும்பல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்ற(மாபியா)க் கும்பலைக் கைது செய்யவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள். நாகப்பட்டினம் மாவட்டம் தற்பொழுது ஆள்கடத்தல், சிறார் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், மணல் கடத்தல் போன்றவற்றையெல்லாம் தூக்கிச்சாப்பிடும் அளவிற்குப் புகழ்பெற்று விளங்குகிறது இணையத்தளத்தைப்பயன்படுத்தி, மிரட்டுவதன் மூலம் மூலம் குறுகிய காலத்தில் பணம் சம்பாதித்து வருகிறது குற்றக்கும்பல். 4 அல்லது 5 பேர் இணைந்து இந்தத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முதலீடு கணிணியும் அதில்…
கரும்பும் தூய வேளாண்மையும் – வைகை அனிசு
குல தெய்வக்கோயில்களுக்கு விற்பனை ஆகும் கரும்புகள் தேவதானப்பட்டிப் பகுதியில் குலதெய்வக்கோயில்களுக்கு கொண்டு செல்வதற்குக் கரும்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, காமாட்சியம்மன்கோயில் பகுதிகளில் கரும்பு வேளாண்மை நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளில் விளையும் கரும்புகளைக் காட்டிலும் இக்கரும்பு அதிகமான சுவையுடன் இருக்கும். மேலும் கோயில் அமைந்துள்ள பகுதி என்பதாலும் முதல் கரும்பைக் கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்துவதை இப்பகுதி உழவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் தெய்வ பக்தியுடன், இறைச்சிக்கழிவுகள், பன்றிச்சாணம் போன்றவற்றை உரமாக பயன்படுத்துவதில்லை. இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்டம்,…
இனிக்கும் கரும்பு … கசக்கும் உழவு! – வைகை அனிசு
இனிமைக் கரும்பைப் பயிரிடுவோர் வாழ்வில் இனி்மை இல்லை! ‘காமாட்சியம்மன் கோயில் பூமியிலே கரும்பு இனிக்கும். வேம்பு கசக்கும்’ என்ற பழமொழி உண்டு. தேனி மாவட்டத்தில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் காமாட்சியம்மன் கரும்பைக் கையில் பிடித்தவாறு பக்தர்களுக்கு அருள் வழங்குவார். இப்பகுதியில் கரும்பு விளைந்தவுடன் எம்மதத்தைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும் இப்பகுதியில் உள்ள மயிலீசுவரன் கோயிலிலும், அருள்மிகு காமாட்சியம்மன்கோயிலிலும் முதல் கரும்பை வைத்துச் சாமி கும்பிட்ட பின்புதான் விற்பனையைத் தொடங்குவார்கள். நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாதவர்கள் இக்கோயிலில் குழந்தை வரம் வேண்டிக் குழந்தை…
துலுக்கப்பயலே! 3 – வைகை அனிசு
(அகரமுதல 95, ஆவணி 20, 2046 / செப். 06, 2015 தொடர்ச்சி) 3 சோனகர் சோனகர் என்பாரை ஆங்கிலத்தில் மூர்சு / moors என்று அழைக்கின்றனர். இசுபெயினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவந்தது இசுலாமியம்(கி.பி.711-1492). இக்காலக் கட்டத்தில் ஐரோப்பா முதலான மேற்கு நாடுகளில் இசுலாம் முதன்மை பெறுவதற்குக் காரணம் இசுலாமியர்களுடைய கல்வி தொடர்பான நாட்டமும் கலை ஈடுபாடுமே! அரேபியரும் வேறு சில இனத்தவரும் சோனகர்/ moors என அழைக்கப்பட்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்கர்கள், பேபர்சு இன மக்கள் ஆகியோரையும் இவ்வாறே அழைக்கிறார்கள். ‘இசுபெயினி்ல் சோனகர்’ (The…
கடலில் தீரம் புரிந்த கப்பல்களும் சந்தித்த சரிவுகளும் – வைகை அனிசு
100ஆவது ஆண்டை நிறைவு செய்த எம்டன் கப்பல் உலகம் சுற்றிய முதல் கப்பல் கடல் பயணங்களில் காலந்தோறும் பயன்படுத்தப்பட்ட கப்பல்களின் வரலாறு குறித்த அதிகமான ஆய்வுகள் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை. உலகத்தை முதன்முதலில் சுற்றிய கப்பல் மெகல்லன் தலைமையில் உள்ள குழுதான். வாசுகோடகாமா 1498 ஆம்ஆண்டு இந்தியாவுக்குள் கடல்வழி கண்டறிந்தவுடன் நறுமணப் பொருள்கள் விற்பனையைப் போர்த்துகீசியர்கள் கட்டுப்படுத்தத் தொடங்கினர். கொலம்பசைப்போலவே போர்த்துக்கீசிய சாகசப் பயணி பெர்டினாண்டு மெகல்லனும், கடலில் ஐரோப்பாவுக்கு மேற்கே பயணித்தால் நறுமணப்பொருட்கள் இருக்கும் தீவை அடையலாம் என நம்பினார்….
துலுக்கப்பயலே! 2 -வைகை அனிசு
சன்னி-சியாக்கள்: உலகளவில் முசுலிம்கள், சன்னி, சியாக்கள் என இரு முதன்மைப் பிரிவுகளாக உள்ளனர். திருக்குர்ஆன், அகதீசு(ḥadīth , முகமது நபியின் கருத்துகள் ஆகிய வழிகாட்டலைப் பின்பற்றுபவர்கள் சன்னி முசுலிம்கள் எனவும், முகமது நபியின் மருமகன் இமாம் அலி மற்றும் தம் மரபினர்களின் அகதீசுகளோடு இசுலாத்தைப் பின்பற்றுபவர்கள் சியாக்கள் எனவும் உள்ளனர். தமிழகத்தில் முசுலிம்கள்: தமிழகத்தில் உள்ள முசுலிம்கள். நிலங்களுக்கு தகுந்தவாறுத் தொழிலைச் செய்தனர். அந்தத் தொழிலை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு அடைமொழி வைக்கப்பட்டு அடையாளப்படுத்தினார்கள். இராவுத்தர், (இ)லெப்பை, மரக்காயர்,ஓசா எனத் தாங்கள் செய்த…
துலுக்கப்பயலே! – 1: வைகை அனிசு
பள்ளிப்பருவத்தில் தொடங்கிக் கல்லூரிப்பருவம் வரை என் ஆழ்மனத்தில் தீண்டத்தகாத சொல்லாக இருந்த சொல் ‘துலுக்கப்பயல்’ என்பது. இப்பொழுது நான் பத்திரிக்கைத்துறையில் பணிபுரிந்தாலும் பணித்தோழர்களும் உற்ற நண்பர்களும் நான் இல்லாத இடத்தில் “அந்தத் துலுக்கனை இன்னும் காணோம்” என்று அடையாளப்படுத்தி வருவதை இன்றளவும் கண்டுவருகிறேன். சிறு பருவத்திலேயே இதற்கு விடைகாணும் பொருட்டாக என்னுடைய பாட்டனாரிடம் “முசுலிம்களை ஏன் துலுக்கன் என அழைக்கிறார்கள்” என அடிக்கடிக் கேள்வி கேட்பேன். அவர், விடுதலைப் போராட்ட ஈகையாளி(தியாகி) என்ற முறையில் ஊர், ஊராகச் சென்றவர் என்பதால் துலுக்கக் கவுண்டர்,…
பலிபீடங்களாக்கும் பள்ளிக்கூடங்கள் – 3
(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) ஆய்வகம் ஆய்வகத்தில் எரிவாயு உருளைகள் பயன்படுத்தும்போது மாணவர்கள் அவற்றினைக் கையாளாத வகையில் மிகவும் பாதுகாப்பான காற்றோட்டமுள்ள தனி அறையில் வைத்துப் பேண வேண்டும். அவற்றை ஆய்வகத்தில் சேமித்து வைக்க கூடாது. வகுப்பறை பள்ளிகளில் விளையாட்டுத் திடல்கள், காலி இடங்கள் ஆகியவற்றில் கூர்மையான பொருட்கள் துருப்படித்த ஆணிகள், கம்பு போன்றவை அகற்றப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும். விளையாட்டுக்கருவிகள் உடைந்த நிலையில் ஒட்டப்பட்டதாகவும் துருப்பிடித்தும் திருகு கழன்ற நிலையில் உயவு அதாவது லூப்ரிகேசன்…
காட்டைப் பார்த்து வெகு நாளாயிற்று … குமுறும் ஆடுகள் 3
(ஆடி 31, 2046 / ஆக.16, 2016 தொடர்ச்சி) 3 கடந்த காலங்களில் ஊருக்கு ஊர் மேய்க்கால், புறம்போக்கு என்று தனியாக நிலமிருக்கும். அது ஊருக்குப் பொதுவானது. அதில் ஆடு, மாடுகளை மேய்த்திருப்பார்கள். அது மாதிரியான நிலங்களை இப்பொழுது பலரும் கவர்ந்து வைத்திருக்கிறார்கள். அதனால் ஊர் நாட்டில் மேய்க்க முடியாது. காட்டிலும் மேய்க்கத் தடை. இப்படியே இருந்தால் கடலிலும் சந்திரமண்டத்திலத்திலேயும்தான் ஆடுகளை மேய்க்க முடியும். இதன் தொடர்பாகப் பலமுறை மத்திய, மாநில மந்திரிகளிடம் நேரிடையாக மனுக்கொடுத்துள்ளோம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார். இதன் தொடர்பாகத்…
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கந்துவட்டி தலைதூக்கும் அவலம்
கந்துவட்டி தலைதூக்கும் அவலம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கந்துவட்டி மீண்டும் தலைதூக்குவதால் பல குடும்பங்கள் தற்கொலையின் விளிம்பிற்குச் செல்கின்றன. தமிழக முதல்வர்அவர்கள் கந்துவட்டிக்கொடுமையிலிருந்து மீளவேண்டும் என நினைத்து அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தார். அதன்படி கந்துவட்டி, கடப்பாரை வட்டி, அலகு(மீட்டர்)வட்டி, ஓட்ட(இரன்)வட்டி எனப் பலகோரமுகங்கள் செயல் இழந்தன. அதன்பின்னர் மீண்டும் கந்துவட்டி ஆசாமிகள் தங்கள் கோரமுகத்தைக் காட்டி 100க்கு 5 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை வட்டி வாங்கி வட்டிக்கு வாங்கியவர்களின் வீடு, நிலம் போன்றவற்றைப்பறிக்கின்றனர். சில கந்துவட்டி…
பலிபீடங்களாக்கும் பள்ளிக்கூடங்கள் – மயக்க நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் 2.
(அகரமுதல 92 ஆடி 31, 2046 / ஆக.16, 2015 தொடர்ச்சி) கழிப்பிடங்கள் 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிப்பறை, 50 மாணவர்களுக்கு 1 மலக்கழிப்பறை என்ற அளவில் போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டம், போதிய வெளிச்சம், பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவை அன்றாடம் தூய்மையாகப் பேணப்பட வேண்டும். கிருமி நாசினி தெளித்து ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக வகுப்பறையை ஒட்டியே கடைசியாக அமைக்கப்படவேண்டும். தனியே திடலிலோ ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலோ அமைதல் கூடாது. கட்டட உறுதி மற்றும் உரிமச் சான்றுகளுடன்…
மலைவேடன் சாதிச்சான்றுக்காக 20 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும் சிற்றூர் மக்கள்
தேவதானப்பட்டி அருகே உள்ள பரசுராமபுரம், மீனாட்சிபுரம் முதலான ஊர்களில் வசிக்கும் மக்கள் சாதிச்சான்றிதழுக்காக 20 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படுகின்றனர். தேவதானப்பட்டி அருகே மீனாட்சிபுரம், பரசுராமபுரம் என இரண்டு சிற்றூர்கள் உள்ளன. இவற்றில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இச்சமூக மக்கள் தங்கள் பரம்பரைத் தொழிலான வேட்டையாடும் தொழிலை விட்டுவிட்டுத் தற்பொழுது வேளாண்மை, கூலி வேலை எனச் செய்துவருகின்றனர். இம் மக்களுக்குச் சான்றிதழ் கடந்த 1984 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் இவர்கள், சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால்…