தேவதானப்பட்டியில் சூறாவளியால் பயிர்கள் சேதம்

தேவதானப்பட்டிப் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை அறுவடைக்குத்தயாரான நெற்பயிர்கள் சேதம்  தேவதானப்பட்டிப் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழையால் அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்கள் நிலத்தில் சாய்ந்தன. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, மஞ்சளாறு அணைப்பகுதியில் சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை பொழிந்தது.   இப்பகுதியில் முதல்நாள் மதியம் வரை சுட்டெரிக்கும் வெயில் வாட்டி எடுத்தது. இதனால் பொதுமக்கள் வெளியே தலை காட்டமுடியாதநிலை இருந்தது. அதன்பின்னர் சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை பொழிந்தது. இதனால் அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்கள் சாய்ந்தன. சில பகுதிகளில் நெற்கதிர்கள் நீரில் மூழ்கின.   இந்நிலையில் செயமங்கலம், மேல்மங்கலம்,…

நள்ளிரவில் மகிழுந்து கண்ணாடிகள் உடைந்ததால் பதற்றம்

தேவதானப்பட்டியில் நள்ளிரவில் பதற்றம்! மகிழுந்து கண்ணாடிகள் உடைந்ததால் பரபரப்பு   தேவதானப்பட்டியில் வெடி வெடித்ததால் நள்ளிரவில் பதற்றம் ஏற்பட்டது.   தேவதானப்பட்டிப் பகுதியில் மஞ்சளாறு அணைப்பகுதியில் தனியார் திருமண மண்படம் உள்ளது. இத்திருமண மண்டபத்தில் புல்லக்காபட்டியைச்சேர்ந்த மகேந்திரன் என்பவருடைய காதணி விழா நடைபெற்றது. காதணி விழாவையொட்டி தாய்,மாமன் வரவேற்பு நிகழ்ச்சியில் காதைப் பிளக்கும் வண்ணம் வெடிகள் வெடிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளின் கதவுகளும், கண்ணாடிகளும் அதிர்வடைந்தன.   மேலும் மஞ்சளாறு அணைச் சாலையில் ஊர்திகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது பள்ளிவாசல் தெருவைச்சேர்ந்த சேக்கு என்பவருக்குச்…

தேவதானப்பட்டியில் கலப்படப் பால் தாராள விற்பனை

  தேவதானப்பட்டியில் கலப்படப் பால் தங்குதடையின்றி மிகுதியாக விற்பனை ஆகிறது. இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  தேவதானப்பட்டி, அட்டணம்பட்டி, புல்லக்காபட்டி,சுற்றியுள்ள பிற சிற்றூர்களில் சும்பால், எருமைப்பால் என இரண்டு வகைகளாகப் பால் விற்பனை செய்கிறார்கள். பசும்பாலாக இருந்தால் அடர்த்தி குறைவாகவும், எருமைப்பாலாக இருந்தால் அடர்த்தி அதிகமாகவும் இருக்கும். அந்துருண்டை (இரசக்கற்பூரம்), பிற வேதியல் பொருட்களைக் கலந்து பாலில் அடர்த்திகளை உண்டாக்குகிறார்கள். இவ்வாறான பால்களை வாங்கிக் காய்ச்சி மறுநாள் மீண்டும் காய்ச்சினால் பால் கெட்விடும் தன்மையுடையதாகிறது. இவற்றைத்தவிரப் பாலில் வேதியல்கலவைத் தூள்,…

பழமை மாறாத காதோலை கருகமணி வழிபாடு

  தேவதானப்பட்டிப் பகுதியில் காதோலை கருகமணி வழிபாடு பழமை மாறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்துக்கள் என்றால் காமாட்சியம்மன் கோயில் அல்லது தங்கள் குலதெய்வக்கோயில்களிலும், இசுலாமியர்கள் என்றால் வியாழக்கிழமை வீட்டின் மேற்குப்பகுதியில் பத்தி, பூ, காதோலை கருகமணியை வைத்து தங்கள் மூதாதையர்களை நினைத்து வழிபடும் பழக்கம் உள்ளது. ஒரு சில பெண்கள் அருள்மிகு காமாட்சியம்மனுக்கு நேர்ந்து பக்தர்கள் காதோலை, கருகமணியை வாங்கிப் பயபக்தியுடன் தத்தம் தலைமீது தாங்கித் திருக்கோயிலை வலம் வந்து வடமேற்குத்திசையில் வைக்கின்றனர்.   இவ்வழிபாட்டின் நோக்கம் உடல்நலம், மனநலம், குடும்ப நலம், ஊர்நலம்,…

இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் பன்றிக்காய்ச்சல் . . . . . .

தேவதானப்பட்டி ஓடைகளில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் பன்றிக்காய்ச்சல் பரவும் கண்டம்(அபாயம்)  தேவதானப்பட்டி ஓடைகளில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் பன்றிக்காய்ச்சல் பரவும் கண்டம்(அபாயம்) ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி ஓடைகளைக்கவர்ந்து ஆட்டு இறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, பன்றிஇறைச்சி ஆகிய கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கள்ளத்தனமாகக் கவர்ந்து கட்டப்பட்ட கடைகளில் இருந்து வெட்டப்படும் ஆடு, கோழி, பன்றி ஆகியவற்றின் கழிவுகளை ஓடைகளில் கொட்டி விடுகின்றனர். மேலும் தெற்குத்தெருவிலிருந்து புல்லக்காபட்டி வரையிலும் பன்றி இறைச்சியின் கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் கெடுநாற்றம் வீசிக் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பொதுமக்களையும், வணிகர்களையும் முகம் சுளிக்க…

மாணவிகளைக் கடத்தத் திட்டமிடும் குற்றக்கும்பல்

பன்னிரண்டாம் வகுப்பு  மாணவிகளைக் கடத்தத் திட்டமிடும் குற்றக்கும்பல்(மாபியாக்கள்)   தேவதானப்பட்டி பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளைக் கடத்தத் திட்டமிட்டுள்ளது குற்றக்கும்பல்(மாபியா). தேவதானப்பட்டி, செயமங்கலம், கெங்குவார்பட்டி, அ.வாடிப்பட்டி பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் தேவதானப்பட்டியில் இருந்து பெரியகுளம், வத்தலக்குண்டு சென்று படிக்கும் மாணவிகளும் உள்ளனர். இவ்வாறு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளை அவர்களின் பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவிகளின் காதலர்கள், மிதியூர்தி ஓட்டுநர்கள், கடை வைத்திருப்பவர்கள் ஆகியோர்கள் கூட்டுச்சேர்ந்து கடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். தேவதானப்பட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பள்ளிவளாகத்தில் வைத்து…

செயற்கை இலைகளால் வாழையிலை விலை வீழ்ச்சி

    தேவதானப்பட்டி பகுதியில் செயற்கை இலைகளால் வாழையிலைகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளன.   தேவதானப்பட்டி அருகே உள்ள மருகால்பட்டி, குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, பரசுராமபுரம், கெங்குவார்பட்டி போன்ற பல பகுதிகளில் வாழை பயிரிடல் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் விளையும் பலவகையான வாழைக்காய்கள் தமிழகத்தின் பிறமாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகின்றன.   தற்பொழுது செயற்கையாக ஞெகிழியில் பல்வகை வடிவமைப்புகளில் வாழை இலைகள் வந்துவிட்டன. இதனால் இயற்கையாக உள்ள வாழை இலைகள் வணிகம் மந்தமாகிவிட்டது. மேலும் செயற்கை வாழை இலைகள் கவர்ச்சியுடனும், தூய்மையாகவும் காணப்படுவதால் பெரும்பாலான…

என்று மடியும் இந்தக் கையூட்டு வேட்கை? – வைகை அனிசு

ஊழலின் கோரப்பிடியில் அரசு அலுவலகங்கள்  “பருப்பு இல்லாமல் சாம்பாரும் இல்லை. ஊழல் இல்லாத அரசுத்துறை அலுலவகங்களும் இல்லை” என்பது புதுமொழியாகக்கொண்டு ஊழலின் பிடியில் அலுவலகங்கள் சிக்கித்தவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களோ ‘லோ,லோ’ என அலையும் நிலையில் உள்ளனர். இவற்றை எல்லாம் களஆய்வு மேற்கொண்டு இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. இவற்றில் அதிகமாக முன்னிலை வகிப்பது   வட்டாட்சியர் அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தரகர்களின் பிடியில் வத்தலக்குண்டு சார்பதிவாளர் அலுவலகம்  திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் மனைவணிகம் கொடிகட்டிப்பறக்கிறது….

பொதுப்பணித்துறைக் குளங்கள் ஆக்கிரமிப்பு

தேவதானப்பட்டிப் பகுதியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான குளங்கள் ஆக்கிரமிப்பு   தேவதானப்பட்டிப் பகுதியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமாக உள்ள குளம், ஏரி, கண்மாய், வாய்க்கால் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக் காலத்தில் வருகின்ற நீரைத் தேக்கவிடாமல் தடுத்து வெளியேற்றுகின்றனர். இதனால் கோடைக் காலத்திற்கு முன்பே குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் ஆகியவை நீரின்றி வறண்டு காணப்படுகின்றன.  தேவதானப்பட்டி அருகே உள்ள மலைச்சாலையில் மத்துவார்குளம் என்ற கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் கடைகள், பைஞ்சுதை(cement) தொட்டிகள் கட்டும் தொழிற்சாலைகள் முறைகேடாகக் கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு பெய்த மழையால் பெருகிய தண்ணீர்…

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் நேர்ச்சிகள்

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் தொடரும் துயரநேர்ச்சிகள்   தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் வண்டிமோதல்கள் தொடர்கின்றன.   தேவதானப்பட்டியிலிருந்து செயமங்கலம் வழியாக வைகை அணை,   ஆண்டிபட்டி, தேனி போன்ற பகுதிகளுக்குச் செல்லலாம். மேலும் கன ஊர்திகள் பெரியகுளம் வழியாகத் தேனி சென்றால் 10 அயிரைக்கல்(கி.மீ.) தொலைவு கூடுதலாக இருக்கும். இதனால் பயணநேரம், எரிபொருள் செலவு, ஊர்திப் போக்குவரத்து இடையூறு ஏற்படும். இதனால் தேவதானப்பட்டியிலிருந்து செயமங்கலம் வழியாகப் பல கன ஊர்திகள் செல்கின்றன.   மேலும் ஆண்டிபட்டி, சின்னமனூர், தேவாரம் பகுதிகளில் காற்றாலை மூலம்…

வருவாய்த்துறை மரங்கள் கடத்தல்

வருவாய்த்துறைக்குச் சொந்தமான இடங்களில் உள்ள மரங்கள் வெட்டிக் கடத்தல்   தேவதானப்பட்டிப் பகுதியில் வருவாய்த்துறைக்குச் சொந்தமாக உள்ள இடங்களில் உள்ள தேக்கு மரங்கள் முதலான விலை உயர்ந்த மரங்களை வெட்டிக் கடத்திவருவது வழமையாக உள்ளது.   தேவதானப்பட்டிப் பகுதியில் வருவாய்த்துறைக்குச் சொந்தமாக ஆற்றின் கரைகளிலும், குளங்கள், கண்மாய்களிலும் மரங்கள் வளர்க்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளன. இவற்றைத்தவிர வனத்துறை சார்பில் மரக்கன்றுகளும் நடப்பட்டு அவையும் நன்றாக விளைந்த நிலையில் உள்ளன. இதனைக் கண்காணிக்கும் மருமக்கும்பல் கண்மாய், ஆறுகளின் கரைகளில் உள்ள  வனத்துறைக்கு சொந்தமாக உள்ள மரங்களை வெட்டிக்…

வெடிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் கண்டம்

தடைசெய்யப்பட்ட வெடிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் கண்டம்(அபாயம்)   தேவதானப்பட்டிப் பகுதியில் தடை செய்யப்பட்ட வெடிகளை வெடிப்பதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் கண்டம் உள்ளது.  தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, செயமங்கலம் முதலான பகுதிகளில், திருமணம், மங்கல நிகழ்ச்சிகள், காதுகுத்துதல், வீடு திறப்பு விழா, கடை திறப்பு விழா எதுவானாலும் வெடிகள் வெடிப்பது வாடிக்கையாக உள்ளது. இதற்காகத்   அதிக ஒலியையும் அதிக புகைகளையும் வெளியிடும் தடை செய்யப்பட்ட வெடிகளை வெடிக்க வைக்கின்றனர். இதன்மூலம் அப்பகுதியில் கரும்புகைகளும், தாள்துண்டுகளும் குவிந்து கிடக்கின்றன. மேலும் அதிக ஆற்றல்வாய்ந்த வெடி வெடிப்பதால்…