பாம்புகள் நடனம்

  தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டியில் பாம்புகள் நடனமாடுவதைப் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.   தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டியில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான தோப்பு உள்ளது. தோப்பில் தென்னை, சப்போட்டா போன்ற மரங்களை வைத்து வேளாண்தொழில்புரிந்து வருகிறார். இவரது தோப்பில் ஏராளமான கரையான் புற்றுகள் உள்ளன. இப்புற்றுகளில் பாம்புகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இவருடைய தோப்பில் அடிக்கடி மயில்களுக்கும் பாம்புகளுக்கும் சண்டை நடப்பதும் அதனைப் பொதுமக்கள் கண்டு களிப்பதும் வாடிக்கை.   இந்நிலையில் நேற்று மாலை நல்ல பாம்பும், சாரைப்பாம்பும் ஒன்றுடன் ஒன்று…

குள்ளப்புரம் ஊராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாடு

 தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சியில் கோடைக் காலத்திற்கு முன்பே குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.   குள்ளப்புரம் ஊராட்சிக்குற்பட்ட மருகால்பட்டி, புதூர், கோயில்புரம், சங்கரமூர்த்திபட்டி முதலான சிற்றூர்களில் இருபது நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பாத்திரங்களில் குடிநீரைப் பிடித்து வைக்கின்றனர். நீண்ட நாள் தண்ணீரைப் பாத்திரங்களில் வைத்திருப்பதால் புழுக்களும், நோய் பரப்பும் கொசுக்களும் உற்பத்தி ஆகின்றன. மேலும் இத்தண்ணீரை அருந்துவதன் மூலம் நச்சுக் காய்ச்சல், வயிற்றுக்கழிவு, கொசுக்காய்ச்சல்,…

கெ.கல்லுப்பட்டியில் கிடைத்த கோபுரக் கலசம்

கெ.கல்லுப்பட்டியில் ‘100 நாள்’ வேலை பார்க்கும் போது கிடைத்த கோபுரக் கலசம்   தேவதானப்பட்டி அருகே உள்ள கெ.கல்லுப்பட்டியில் 100 நாள் வேலைத் திட்டம் நடைபெற்று வருகிறது. அவ்வாறு வேலை செய்யும்போது சிவப்புத்துணி சுற்றிய நிலையில் கோபுரக் கலசம் இருப்பதை அப்பகுதி மக்கள் எடுத்தனர்.  கெ.கல்லுப்பட்டி பகுதி, வரலாறும் பரம்பரைச்சிறப்பும் மிகுந்த பகுதியாகும். பண்டைய காலத்தில் திப்பு சுல்தான், ஊமைத்துரை, இராணிமங்கம்மாள் ஆகியோர் ஆங்கிலேயர் ஆட்சியில் தலைமறைவாக இருந்த இடங்களும் அதனால் பல வரலாற்றுச்சுவடுகளும் உள்ளன.   மேலும் இப்பகுதியில் பலவருடங்களுக்கு முன்னர்ப் பிளக்கப்பட்ட…

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் துயர நேர்ச்சிகள் ஏற்படும் பேரிடர்

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் துயர நேர்ச்சிகள் ஏற்படும் பேரிடர்   தேவதானப்பட்டி அருகே உள்ள தம்தம்(டம்டம்)பாறைப் பகுதியில் கடந்த அத்தோபர் மாதம் 27 ஆம்நாள் கனமழை பொழிந்ததால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் இயற்கையாக உருவான ஊற்றுகளால் மேலிருந்து மரங்கள் அடித்து வரப்பட்டு, தண்ணீர் வெளியேறும் பகுதியில் அடைத்ததால் பல இடங்களில் சாலை போக்குவரத்து நின்றுவிட்டது. இதனால் கொடைக்கானல் செல்லமுடியாமல் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அல்லல்பட்டனர். இதனால் கொடைக்கானலுக்குச் செல்லமுடியாமல் பொதுமக்கள் பழனி, தாண்டிக்குடி வழியாகச் சென்றனர்.   தேனி, திண்டுக்கல் மாவட்ட…

தேவதானப்பட்டி பகுதியில் மாம்பூப் பருவம் தொடங்கியது

    தேவதானப்பட்டி பகுதியில் மாமரத்தில் மாம்பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.   தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, கெங்குவார்பட்டி, முருகமலை, கல்லுப்பட்டி பகுதிகளில் பல காணி பரப்பளவில் மாந்தோப்புகள் உள்ளன. செந்தூரம், காசா, கல்லாமாங்காய், பங்கனப்பள்ளி, கழுதைவிட்டை முதலான பலவகை மாம்பழவகைகள் உள்ளன.  இப்பகுதியில் விளையும் மாம்பழங்கள் தமிழகத்தின் பிறமாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளா, கருநாடகா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் தற்பொழுது வெளிமாநிலங்களைச்சேர்ந்தவர்கள் மாந்தோப்புகளைப் பார்வையிட்டு முன்கூட்டியே பணத்தை கொடுத்து விட்டுச்செல்கின்றனர்.   கடந்த இரண்டு…

பேரூராட்சி நிருவாகத்தைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம்

பேரூராட்சி நிருவாகத்தைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம்  திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேரூராட்சியைக்கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வத்தலக்குண்டு பகுதியில் பேரூராட்சி சார்பாக நிலக் கவர்வுகள் நீக்கப்பட்டன. இதில் நிருவாகத் தலையீடு காரணமாக ஒரு சில பகுதிகளில் மட்டும் எடுத்து விட்டு மற்ற பகுதிகளில் எடுக்காமல் விட்டுவிட்டனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் விளைச்சல் நிலங்கள் அனைத்தும் பயன்பாடற்ற நிலையில் உள்ளன.   இதனைக்கண்டித்து மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் அ.நசீம்,…

சாலையோரக்கடைகளால் நேர்ச்சி(விபத்து)கள்!

மலைச்சாலைப் பகுதிகளில் சாலையோரக்கடைகளால் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்(அபாயம்)   தேவதானப்பட்டி அருகே உள்ள மலைச்சாலைப் பகுதி உள்ளது. இப்பகுதி மிக முதன்மையான சாலை இணைப்புப் பகுதியாகும். திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து வரும் ஊர்திகள் கொடைக்கானல் செல்லும் பிரிவு இதுதான். எனவே தமிழகம், பிறமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் இச்சாலையில் பயணம் செய்கின்றனர்.   இன்னும் ஓரிரு வாரங்களில் கோடைப்பருவம் தொடங்க உள்ளதால் இப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஊர்திகள் கொடைக்கானல் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனைப்பயன்படுத்தி இப்பொழுது சாலையின் இருபுறமும், சாலை…

வழிப்பறிக் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவரும் சாலைகள்

  தேவதானப்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி, எழுவனம்பட்டி பிரிவு ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் இருசக்கர ஊர்திகளில் வருபவர்கள் மற்றும் நடந்து வருபவர்களை உருட்டுக்கட்டை கொண்டு தாக்கி நகை மற்றும் பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.  வடுகப்பட்டியில் காவல்நிலையம் இல்லை. பெரியகுளத்தில் உள்ள தென்கரை காவல்நிலைய எல்லைக்குற்பட்டது. ஏதாவது குற்றங்கள் நிகழ்ந்தால் பெரியகுளம் போய்தான் புகார் கூறவேண்டும். புகார் கூறிக் காவலர்கள் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பித்து விடுகின்றனர்.  இதே போல தேவதானப்பட்டி அருகே உள்ள எழுவனம்பட்டி பகுதியில் உருட்டுக்கட்டை கொண்டு இருசக்கர ஊர்திகளில் வருபவர்களைத்…

மதுபானச்சாலையாக மாறிவரும் குள்ளப்புரம் சாலை

மதுபானச்சாலையாக மாறிவரும் குள்ளப்புரம் சாலை   தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி சாலைகள் மதுபானச்சாலையாக மாறிவருகின்றன. குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, அ.வாடிப்பட்டி போன்ற ஊராட்சிகளில் மதுபானக்கடைகள் இல்லை. எனவே இப்பகுதியில் உள்ள மக்கள் செயமங்கலத்தில் உள்ள மதுபானக்கடைகளில் மதுபானங்களை வாங்கி மது அருந்துகின்றனர். செயமங்கலத்தில் உள்ள மதுபானக்கடையில் குடிப்பக வசதி இல்லை. இதனால் மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கிக் குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி சாலைகளில் இருபுறமும் கூட்டம், கூட்டமாக உட்கார்ந்து மதுபானங்களை அருந்துகின்றனர். இப்பகுதியில் போதிய பேருந்து வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லும்போது அவர்களைத்…

தேவதானப்பட்டியில் என்புமுறிவுக்காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கை

தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் என்புமுறிவு(டெங்கு)க் காய்ச்சல் பரவாமல் தடுக்கப் போர்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் என்புமுறிவு(டெங்கு)க் காய்ச்சல் பர வாமல் தடுக்கப் பேரூராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவதானப்பட்டிப் பகுதியில் மருமக்காய்ச்சல், என்புமுறிவு(டெங்கு)க் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் பேரூராட்சி நிருவாகம் எடுத்து வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விளம்பரப் பதாகைகள், மிதியூர்தி(ஆட்டோ), உழுவையூர்திகளில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகத் துண்டறிக்கை வழங்கப்படுகிறது. மேலும் பழைய உருளிக்காப்புகள்(டயர்கள்), தொட்டிகள், ஆட்டு உரல்…

திட்டச்சேரி இந்தியன் ஓவர்சீசு வங்கிப் பணியால் பொதுமக்கள் அவதி

திட்டச்சேரி இந்தியன் ஓவர்சீசு வங்கிப் பணியால் பொதுமக்கள் அவதி நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரியில் இந்தியன் ஓவர்சீசு வங்கி உள்ளது. இந்த வங்கியில் நாள்தோறும் பல கோடி மதிப்பில் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும் மலேசியா, சிங்கப்பூர், துபாய், குவைத்து, அமெரிக்கா, ஆங்காங் போன்ற நாடுகளில் வணிகத்திற்காகவும் பணிக்காகவும் செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் இந்த வங்கியை நாடித் தங்களுக்கு வேண்டிய பணத்தை எடுத்தல், காசோலை மாற்றுதல், வரைவோலை எடுத்தல் எனப் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியன் ஓவர்சீசு வங்கியில் அவ்வப்பொழுது கணிணி…

கரும்பில் தொட்டில் கட்டும் விந்தையான பழக்கம்

கரும்பில் தொட்டில் கட்டும் விந்தையான பழக்கம்   தேவதானப்பட்டிப் பகுதியில் கரும்பில் தொட்டில் கட்டும் விந்தையான பழக்கம் உள்ளது.   மக்கட்பேறு இல்லை என்றால் நாட்டுப்புறத் தெய்வத்தினிடம் வேண்டிக்கொண்டு கோயிலுக்குச் சென்று தொட்டில் கட்டி வருவது வழக்கம். இப்பகுதியில் உள்ள அம்மன்கோயில், மதுரைவீரன், கருப்பராயன் போன்ற கோயில்களில் தொட்டில் கட்டுதல் போற்றுதலுக்குரிய வழிபாடாகக் கருதப்படுகிறது.   தொட்டில் கட்டுதல் என்பது வெள்ளைத்துணியில் மஞ்சள் தடவி, கல்லை உள்ளே வைத்துக் கோயிலில் உள்ள வேம்பு மற்றும் அரச மரத்தின் கிளையில் குழந்தைப்பேறு வேண்டிக் கட்டுதலாகும்.  …